SBI NRI A/C: எஸ்பிஐ என்.ஆர்.ஐ கணக்கு தொடங்க விதிமுறைகள்! நோட்டரி

Open NRI account online: வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களான என்ஆர்ஐகள், அதாவது இந்தியாவில் குடியில்லாத இந்தியர்கள் வங்கிக் கணக்கை திறக்க விரும்பினால், அதற்கு பாரத ஸ்டேட் வங்கியின் விதிமுறைகள் என்ன?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 16, 2023, 06:49 PM IST
  • ஆன்லைனில் எஸ்பிஐ என்.ஆர்.ஐ கணக்கை தொடங்குவது எப்படி?
  • என்.ஆர்.ஐ கணக்கைத் துவங்க தேவையான ஆவணங்கள்
  • எஸ்பிஐ என்.ஆர்.ஐ கணக்கு தொடங்க விதிமுறைகள்
SBI NRI A/C: எஸ்பிஐ என்.ஆர்.ஐ கணக்கு தொடங்க விதிமுறைகள்! நோட்டரி  title=

Open SBI Account Online: பாரத ஸ்டேட் வங்கி, ஒரு பொதுத்துறை வங்கி, வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களான என்ஆர்ஐகள், அதாவது இந்தியாவில் குடியில்லாத இந்தியர்கள் வங்கிக் கணக்கை திறக்க விரும்பினால், அதற்கான வாய்ப்புகள் மற்றும் வழிவகைகளைத் தெரிந்துக் கொள்வோம். எஸ்பிஐ வங்கியில் என்ஆர்ஐ நன்மைகளை பெறுவதற்கு, ஒருவர் அங்கு கணக்கு துவங்க வேண்டும். வீட்டில் இருந்தே SBI இல் கணக்கைத் தொடங்குவதற்கான சில எளிய வழிகள் இங்கே உள்ளன.

எஸ்பிஐ ஆன்லைனில் என்ஆர்ஐ கணக்கைத் திறப்பது எப்படி?
என்ஆர்ஐ கணக்கைத் தொடங்க எஸ்பிஐ இணையதளம் அல்லது மொபைல் ஆப்ஸைப் பார்வையிடவும்.

மேலே உள்ள பேனலில் இருந்து NRI தாவலைக் கிளிக் செய்யவும்.

அடுத்த கட்டமாக, கணக்குகள் என்ற பிரிவை கிளிக் செய்யவும்.

கணக்குகள் பிரிவின் கீழ் ’இந்தியாவில் குடியில்லாதவர்கள், என்ற இணைப்பிற்குச் செல்லவும்.

அதன் கீழ் பக்கத்தில் க்ணக்கு திறப்பதற்கு விண்ணப்பிக்கும் தெரிவு உண்டு

விண்ணப்பிக்கவும் என்ற ‘டேப்’ இருக்கும், அதனை கிளிக் செய்யவும்.

அதற்கு அடுத்த பக்கத்தில், இப்போது விண்ணப்பிக்கவும் என்பதைக் கிளிக் செய்யவும்.

வாடிக்கையாளர் தகவல் பிரிவின் கீழ் ’புதிதாக தொடங்கு’ என்பதைக் கிளிக் செய்யவும்.

அதற்கு பிறகு, கேட்கப்படும் தேவையான விவரங்களைத் தொடர்ந்து வழங்கவும்.

மேலும் படிக்க | PPF Scheme: உடனே இதை செய்யுங்கள், வருமான வரி பணத்தை சேமிக்கலாம்

தேவையான ஆவணங்கள்
என்ஆர்ஐ கணக்கைத் திறக்க தேவையான ஆவணங்கள் எவை? ஆவணங்களின் பட்டியல் இங்கே.

அடையாளச் சான்று (பாஸ்போர்ட்).
வெளிநாட்டு குடியுரிமை சான்று (விசா/வேலை அனுமதி போன்றவை)
வெளிநாட்டு/தொடர்பு முகவரி சான்று (பாஸ்போர்ட், பயன்பாட்டு பில்கள், வாடகை ரசீது போன்றவை)
நிரந்தர முகவரி (வெளிநாடு/ இந்தியன்).
புகைப்படம்.
பான் கார்டு

சான்றளிப்பு
ஒருவர் பொதுவான ஆவணங்களை சுய சான்றளிக்கவேண்டும். அத்துடன் நோட்டரி இணைக்கவேண்டும். 

இந்திய தூதரகம்/இந்திய ஹை கமிஷன்
இந்தியன் வங்கியின் வெளிநாட்டுக் கிளை
இந்தியாவில் கிளை வைத்திருக்கும் வெளிநாட்டு வங்கி

இவற்றில் ஏதாவது ஒரு அமைப்பில் இருந்து நோட்டரி சான்று பெற்று அதையும் கொடுக்க வேண்டும். 

மேலும் படிக்க | Old Pension Scheme: அரசு ஊழியர்களுக்கு அடிச்சது ஜாக்பாட், அடிப்படை ஊதியத்தில் 17% ஏற்றம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News