PPF Scheme: உடனே இதை செய்யுங்கள், வருமான வரி பணத்தை சேமிக்கலாம்

PPF Balance: நீங்கள் வரி விலக்கு பெற விரும்பினால், சில நடவடிக்கைகள் மூலம் வருமான வரி விலக்கு பெறலாம். எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருமான வரி விலக்கு பெறலாம் என இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 3, 2023, 01:27 PM IST
  • பிபிஎஃப் திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் முதலீட்டைத் தொடங்கலாம்.
  • இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம்.
  • அதே நேரத்தில், 80C இன் கீழ், ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரி சேமிக்க முடியும்.
PPF Scheme: உடனே இதை செய்யுங்கள், வருமான வரி பணத்தை சேமிக்கலாம் title=

பிபிஎஃப் இருப்பு: வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி நெருங்கி வருகிறது. அடுத்த நிதியாண்டு தொடங்கியவுடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் பணி தொடங்கும். அத்தகைய சூழ்நிலையில், வரி விதிக்கக்கூடிய வருமானம் உள்ளவர்கள் வரி தாக்கல் செய்ய வேண்டும். மறுபுறம், நீங்கள் வரி விலக்கு பெற விரும்பினால், சில நடவடிக்கைகள் மூலம் வருமான வரி விலக்கு பெறலாம். எப்படிப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருமான வரி விலக்கு பெறலாம் என இந்த பதிவில் காணலாம். 

பிபிஎஃப் 

உங்கள் வருமானம் வரிக்கு உட்பட்டு இருந்து, பழைய வரி முறையின் கீழ் நீங்கள் வருமான வரி தாக்கல் செய்தால், வருமான வரியின் பிரிவு 80C இன் கீழ் நீங்கள் பல விலக்குகளைப் பெறலாம். இவற்றில், முதலீடு மூலம் வரிச் சலுகைகளைப் பெறலாம். 80C இன் கீழ் விலக்கு பெற வேண்டும் என்றால், பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

பிபிஎஃப் திட்டம்

வரியைச் சேமிக்க பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்தால், இதில் பல வித நன்மைகளை நாம் பெற முடியும். பிபிஎஃப் திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாயில் முதலீட்டைத் தொடங்கலாம். இந்தத் திட்டத்தின் கீழ், ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் முதலீடு செய்யலாம். அதே நேரத்தில், 80C இன் கீழ், ஆண்டுக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரி சேமிக்க முடியும்.

மேலும் படிக்க | Train travel: ரயில் பயணிகளுக்கு கனிவான எச்சரிக்கை! ‘இந்த’ தவறுக்கு சிறை தண்டனை

வட்டி 

பிபிஎஃப் திட்டம் மத்திய அரசால் நடத்தப்படுகிறது. பிபிஎஃப் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் வட்டி விகிதம் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மத்திய அரசால் மதிப்பாய்வு செய்யப்படுகிறது. தற்போது, ​​பிபிஎஃப் திட்டத்தில் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டி கூட்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது. மறுபுறம், 2022-23 நிதியாண்டின் ஐடிஆரில் வருமான வரிப் பணத்தைச் சேமிக்க வேண்டுமானால், பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு மார்ச் 2023க்குள் செய்யப்பட வேண்டும். அப்படி செய்தால்தான் 2022-23 நிதியாண்டில் ஐடிஆர்- ஐ நிரப்பும்போது பிபிஎஃப்-ன் பலன் கிடைக்கும். 

பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு இருந்தது

இம்முறை பட்ஜெட்டில் பிபிஎப் திட்ட வரம்பை உயர்த்தி அரசு அறிவிக்கக்கூடும் என மக்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தரப்பிலிருந்து 2023 பட்ஜெட் உரையில் பிபிஎஃப் தொடர்பாக எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில், பிபிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களின் எதிர்பார்ப்பும் பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது, ​​பிபிஎஃப்-ல் முன்பு இருந்த அதே பலன், எதிர்காலத்திலும் தொடர்ந்து கிடைக்கும். ஒரு நிதியாண்டில் பிபிஎஃப்-இல் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.1.5 லட்சம் ரூபாயாகவே உள்ளது. 

மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் இருந்த 295 ரூபாய் காணவில்லையா... இது உங்களுக்கான எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News