பஹ்ரைன் நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்!

Pongal 2023: பஹ்ரைன் நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா, "பாரதி தமிழ் சங்கத்தின்" சார்பில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 17, 2023, 10:16 PM IST
  • தமிழ்நாட்டுக்கும் , பஹ்ரைன் நாட்டிற்கும் இடையே இருந்த முத்து வணிகம் பற்றியும், தமிழர்களின் வணிக சிறப்பு பற்றியும் பேசிய பெஹ்ரைன் அமைச்சர்.
  • பஹ்ரைன் நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா.
  • பாரதி தமிழ் சங்கத்தின் சார்பில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்ட பொங்கல் திருவிழா.
பஹ்ரைன் நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்! title=

பொங்கல் பண்டிகை என்பது சூரியனை வணங்கி, நன்றி செலுத்தும் திருநாளாக, அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. அதோடு, ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் வெளிநாடு வாழ் தமிழர்கள், தாங்கள் வாழும் நாட்டில் ஒன்று கூடி கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் பஹ்ரைன் நாட்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா, "பாரதி தமிழ் சங்கத்தின்" சார்பில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி மிகச் சிறப்பாக, இந்தியன் கிளப்பில் கொண்டாடப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட்ட பெண்கள், மண் பானையில் பொங்கல் வைத்து, குளவி இட்டு கும்மி அடித்து கொண்டாடினர்.

மேலும் படிக்க | உழவர் திருநாளுக்கு உழவர் சந்தையை நோக்கி படையெடுக்கும் பொதுமக்கள்

விழாவிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக, பஹ்ரைன் நாட்டின் தொழில்துறை அமைச்சர் திரு. ஆதில் பக்ரூ மற்றும் இந்தியத் தூதர் திரு. பியூஸ் ஸ்ரீ வஸ்தவா ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் திரு. ஆதில் பக்ரூ பேசுகையில் நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே, தமிழ்நாட்டுக்கும், பஹ்ரைன் நாட்டிற்கும் இடையே இருந்த முத்து வணிகம் பற்றியும், தமிழர்களின் வணிக சிறப்பு பற்றியும் பேசினார்.

இந்த கொண்டாட்டத்தில், 2000 மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதியம் வாழை இலையில் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. மாலை, தமிழின் தொன்மை பற்றிய இலக்கிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் பாரதி தமிழ் சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சனிப் பெயர்ச்சி 2023: பட்ட பாடு அனைத்தும் போதும் என நிம்மதி பெருமூச்சு விடும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News