சம்மரில் சுகர் லெவலை கட்டுப்படுத்த இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடுங்க

Diabetes Control Tips: மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகரித்தால் அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. 

Diabetes Control Tips: இன்றைய அவசர உலகில் முதியவர்கள் மட்டுமின்றி இளைஞர்களும் சர்க்கரை நோய்க்கு பலியாகி வருகின்றனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவு மற்றும் வாழ்க்கை முறை தொடர்பான விஷயங்களில் அலட்சியம் காட்டக்கூடாது. இவற்றில் அதிகப்பட்ச கவனத்துடன் இருக்க வேண்டும். கோடைக்காலத்தில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க நீரிழிவு நீயாளிகள் உட்கொள்ள வேண்டிய சில உணவுகளை பற்றி இங்கே காணலாம். 

1 /8

நீழிரிவு நோயாளிகள் எப்போதும் தங்கள் உணவில் மிக கவனமாக இருக்க வேண்டும், இதை தவிர உடல் செயல்பாடும் மிக அவசியமாகும். அவ்வப்போது இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துக்கொள்வது நல்லது.

2 /8

குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் கோடைக் காலத்தில் தங்கள் உணவுப் பழக்கத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிலர் லேசான உணவு அல்லது திரவ உணவை உட்கொள்கிறார்கள். கோடையில் சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சில முக்கிய உணவுகளை பற்றி இங்கே காணலாம். 

3 /8

இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், கூடுதல் சர்க்கரையை வெளியேற்ற சிறுநீரகம் வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். ஆகையால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அதிக நீரை உட்கொண்டால், சிறுநீர் மூலம் சர்க்கரை வெளியேற்றப்படுவது எளிதாகும். இதுமட்டுமின்றி, கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பதற்கும் கண்டிப்பாக போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ள வேண்டும். 

4 /8

நீரிழிவு நோயாளிகள் கோடை காலத்தில் பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். வெள்ளரி, குடைமிளகாய், பாகற்காய், கீரை வகைகள் போன்ற காய்களை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியமாகும். இவற்றை உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவது மட்டுமின்றி இரத்தத்தில் சர்க்கரை அளவும் சீராக இருக்கும்.

5 /8

கீரை மற்றும் கோஸ் போன்ற காய்கறிகளில் நார்ச்சத்துகளுடன், வைட்டமின்களும் ஏராளமாக இருக்கின்றன. இவற்றைச் சாப்பிடுவதன் மூலம், நீரிழிவு நோயாளிகள் நீரேற்றத்துடன் இருக்க முடியும். இது மட்டுமின்றி நார்ச்சத்து உடலுக்கு நிறைவான உணர்வை அளித்து எடை இழப்புக்கும் உதவுகிறது. 

6 /8

சருமத்திற்குப் பயன்படுத்தப்படும் கற்றாழை நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தின் படி, இதில் பல வித மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. இது நமது இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது. வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆண்டி=ஆக்சிடெண்டுகள் கற்றாழையில் காணப்படுகின்றன. இதன் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நமது செரிமானத்தையும் சரியாக வைக்கிறது.

7 /8

சுரைக்காயில் குளுக்கோஸ் மற்றும் சர்க்கரை தொடர்பான கூறுகளின் அளவு மிகக் குறைந்த அளவிலேயே உள்ளன. இதில் 92% தண்ணீர் மற்றும் 8% நார்ச்சத்து உள்ளது. நீரிழிவு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் சுரைக்காய் மிகவும் உதவும். குறிப்பாக கோடையில் சுரைக்காய் உட்கொள்வது மிக நல்லது. 

8 /8

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.