Ozone Hole: வெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய ஓசோன் துளை: பூமிக்கு பாதிப்பு

Huge Ozone Hole: வெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய ஓசோன் துளை இருப்பதாகவும் இது உலக மக்களில் பாதியை பாதிக்கும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 8, 2022, 12:06 AM IST
  • ஓசோன் படலம் மேலும் சேதமடைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அச்சம்
  • அச்சப்படக் காரணங்கள் இருந்தாலும் தற்போது கவலை தேவையில்லை; ஆசுவாசம் தரும் விஞ்ஞானிகள்
  • ஒசோன் படலம் எதற்கு உதவுகிறது தெரியுமா/
Ozone Hole: வெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய ஓசோன் துளை: பூமிக்கு பாதிப்பு title=

வெப்ப மண்டலத்தில் மிகப்பெரிய ஓசோன் துளை இருப்பதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த புதிய துளை இருப்பது பூமியில் உள்ள உயிர்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானி மற்றும் அவரது குழுவினர் எச்சரித்துள்ளனர்.

உலக மக்கள்தொகையில் 50 சதவீதத்தை பாதிக்கக்கூடிய வெப்ப மண்டலத்தின் கீழ் அடுக்கு மண்டலத்தில் ஒரு பெரிய ஓசோன் துளையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இந்த துளையானது, அண்டார்டிக் ஓசோன் துளையின் அளவை விட ஏழு மடங்கு அதிகமாகும், இது வசந்த காலத்தில் மட்டுமே வெளிப்படுகிறது என்று ஏஐபி அட்வான்சஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

கனடாவின் ஒன்டாரியோவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கிங்-பின் லு தனது ஆராய்ச்சியில், இந்த புதிய ஓசோன் துளை 1980 களில் இருந்து இருப்பதாகவும், அண்டார்டிக் போலல்லாமல், இந்த புதிய ஓசோன் துளை ஆண்டு முழுவதும் இருப்பதாகவும் கூறினார்.

மேலும் படிக்க | ஏலியன்களை தேட யூரோபாவில் களமிறங்கும் நீச்சல் ரோபோக்கள்

இந்த புதிய துளை இருப்பது பூமியில் உள்ள உயிர்களுக்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானி எச்சரித்துள்ளார்.

"வெப்பமண்டலங்கள் கிரகத்தின் பரப்பளவில் பாதியைக் கொண்டிருக்கின்றன, மேலும் உலக மக்கள்தொகையில் பாதி பேர் வசிக்கின்றனர்" என்று லு ஒரு செய்திக்குறிப்பில் கூறினார்.

வெப்பமண்டல ஓசோன் துளையின் இருப்பு ஒரு பெரிய உலகளாவிய கவலையை ஏற்படுத்தலாம். பூமியின் வெப்பமண்டல பகுதிகளில் பூமத்திய ரேகை மற்றும் வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியாவின் பகுதிகள் அடங்கும். 

ஓசோன் துளை என்பது தொழில்நுட்ப ரீதியாக ஓசோன் இல்லாத ஒரு "துளை" அல்ல, மாறாக அது உண்மையில் விதிவிலக்காக ஓசோன் படலத்தின் ஒரு பகுதி மெலிந்துவிடுவதை குறிக்கும் சொல்லாகும்.

மேலும் படிக்க | குவாண்டம் செய்திகளைக் கண்காணிப்பது ஏலியன்களை கண்டுபிடிக்க உதவும்

பிரபஞ்சத்தில் மேல் வளிமண்டலத்தில் இருக்கும் ஓசோன், மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்வீச்சை உறிஞ்சுகிறது.

முன்னதாக, ஏரோசல் ஸ்ப்ரே கேன்கள் மற்றும் குளிர்பதனப் பொருட்களில் காணப்படும் குளோரோபுளோரோகார்பன்கள் (CFCகள்) மற்றும் ஹாலோன்கள் - வாயுக்கள் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் போது ஓசோன் படலத்தில் சிதைவு ஏற்படுகிறது என்று ஆராய்ச்சிகள் தெரிவித்திருந்தன.

"ஓசோன் படலத்தின் சிதைவு, UV கதிர்வீச்சை அதிகரிக்க வழிவகுக்கும், இது மனிதர்களுக்கு தோல் புற்றுநோய் மற்றும் கண்புரை அபாயத்தை அதிகரிக்கும், அத்துடன் மனித நோயெதிர்ப்பு அமைப்புகளை பலவீனப்படுத்துகிறது, விவசாய உற்பத்தித்திறனைக் குறைக்கிறது மற்றும் உணர்திறன் வாய்ந்த நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை எதிர்மறையாக பாதிக்கிறது. ” என்று விஞ்ஞானி லு கவலை தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க | Aliens அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தினர்

லு மற்றும் அவரது குழு கடந்த சில தசாப்தங்களாக சராசரி ஆண்டு ஓசோன் மாற்றங்கள், வருடாந்திர ஓசோன் காலநிலை வேறுபாடுகள் மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதன் மூலம் இந்த சமீபத்திய துளையை அடையாளம் கண்டுள்ளது.

மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News