Quantum messages: குவாண்டம் செய்திகளைக் கண்காணிப்பது ஏலியன்களை கண்டுபிடிக்க உதவும்

Aliens Search: குவாண்டம் செய்திகளைக் கண்காணிப்பது வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவியானதாக இருக்கும் என்று அண்மை ஆராய்ச்சிகள் கூறுகின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 7, 2022, 10:35 PM IST
  • குவாண்டம் செய்திகளைக் கண்காணிப்பது வேற்றுகிரகவாசிகளைக் கண்டுபிடிப்பதற்கு உதவுமா
  • ஏலியன்கள் தொடர்பான அண்மை ஆராய்ச்சியின் வியத்தகு கணிப்பு
  • வேற்று கிரகவாசிகள் எப்படி பூமியை தொடர்பு கொள்வார்கள்?
Quantum messages: குவாண்டம் செய்திகளைக் கண்காணிப்பது ஏலியன்களை கண்டுபிடிக்க உதவும் title=

ஏலியன்களைத் தேடும் முயற்சிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அது தொடர்பான சுவராசியமான தகவல்கள் வரத்தும் அதிகரித்துள்ளது. வேற்றுகிரகவாசிகளைத் தேடுவதில் குவாண்டம் செய்திகளைக் கண்காணிப்பது முக்கியமானது என்று தற்போது ஆராய்ச்சிகள் உறுதிபடுத்தியிருக்கின்றன.

ஃபோட்டான்கள் என்றும் அழைக்கப்படும் ஒளியின் துகள்கள் அவற்றின் குவாண்டம் தன்மையை இழக்காமல் விண்மீன்களுக்கு இடையேயான தூரங்களுக்கு அனுப்பப்படலாம் என்றும் இந்த வகையான செய்திகளை வேற்றுகிரகவாசிகள் பூமியுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தலாம் என்றும் புதிய ஆராய்ச்சி கூறுகிறது.

வேற்றுகிரகவாசிகளுக்கான தேடல் என்பது விஞ்ஞானிகளை மட்டுமல்ல, மக்களையும் கவர்ந்துள்ளது. நமது பிரபஞ்சத்தின் மர்மத்தைத் திறப்பதற்கான வழிகளைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

 ஃபோட்டான்கள் என்றும் அழைக்கப்படும் ஒளியின் துகள்கள் அவற்றின் குவாண்டம் தன்மையை இழக்காமல் விண்மீன்களுக்கு இடையேயான தூரங்களுக்கு அனுப்பப்படலாம் என்றும் இந்த வகையான செய்திகளை வேற்றுகிரகவாசிகள் பூமியுடன் தொடர்பு கொள்ள பயன்படுத்தலாம் என்றும் புதிய ஆராய்ச்சி கூறுகிறது.

மேலும் படிக்க | ஏலியன்களை தேட யூரோபாவில் களமிறங்கும் நீச்சல் ரோபோக்கள்

ஜூன் 28 ஆம் தேதி Physical Review D விஞ்ஞான சஞ்சிகையில் வெளியான ஆராய்ச்சியாளர்களின் அறிக்கையின்படி, குவாண்டம் செய்திகள் வேற்றுகிரகவாசிகள் (ஏலியன்கள்) உடன் தொடர்புகொள்வதற்கான ஒரு சாத்தியமான வழியாகும்,

அதோடு, பூமிக்கு அப்பாற்பட்ட உயிரினங்களைத் தேடும் விஞ்ஞானிகள் சில சாத்தியமான ஆதாரங்களைக் கண்டறிய அந்த சமிக்ஞைகளை ஸ்கேன் செய்ய வேண்டும்.

புத்திசாலித்தனமான வேற்றுகிரகவாசிகள் குவாண்டம் தகவல்தொடர்புகளைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகம் என்று கோட்பாட்டு இயற்பியலாளர் அர்ஜுன் பெரேரா ஆராய்ச்சிக் கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Aliens அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தினர்; மூன்றாம் உலகப் போர் தொடங்கலாம்!

எந்தவொரு தகவலையும் கொண்டு செல்வதற்கு குவாண்டம் துகள்களைப் பயன்படுத்தும் தொழில்நுட்பம் தொடர்பாக சமீப காலங்களில் உலகம் முழுவதும் பல ஆய்வுகள் மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

பூமியில் குவாண்டம் தகவல்தொடர்புக்கு வரும்போது,  துகள்கள் சில நேரங்களில் அவற்றின் சுற்றுப்புறங்களுடன் தொடர்பு கொண்ட பிறகு அவற்றின் வலிமையை இழப்பதை ​​​​"டிகோஹெரன்ஸ்" (decoherence) என்று சொல்கின்றனர்.  

 ஒரு விண்மீன் மட்டத்தில் பரவும் போது, ​​டிகோஹரன்ஸ் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு, அதனால்தான் குவாண்டம் தகவல்தொடர்பு வேற்றுகிரக நாகரிகங்களிலிருந்து சிக்னல்களைக் கண்டுபிடிப்பதில் திறவுகோலாக இருக்கலாம் என்று பெரேரா மற்றும் கோட்பாட்டு இயற்பியலாளர் ஜெய்ம் கால்டெரோன் ஃபிகுரோவா ஆகியோர் தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்தனர்.

மேலும் படிக்க | வேற்று கிரகவாசிகள் மர்மத்தை தீர்க்க, ஆன்மீகவாதிகளை நாடும் நாசா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News