மணமேடையில் மணமக்கள் செய்த வேலை: ஷாக்கில் நெட்டிசன்கள், வைரல் வீடியோ

Funny Wedding Video: மணமேடையில் இப்படியா செய்வார்கள் என ஒரு வீடியோ நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 19, 2022, 12:19 PM IST
  • காதலில் ஆழ்ந்த மணமக்கள்.
  • மேடையிலேயே அன்பின் பரிமாற்றம்.
  • வைரலான வீடியோ.
மணமேடையில் மணமக்கள் செய்த வேலை: ஷாக்கில் நெட்டிசன்கள், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. திருமண வீடியோக்களுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

சமூக ஊடகங்களில் திருமணம் தொடர்பான லட்சக்கணக்கான வீடியோக்கள் உள்ளன. இதில் பல வித வேடிக்கையான நிகழ்வுகளையும் நாம் காண்கிறோம். பல நேரங்களில் யாரும் எதிர்பார்க்காத பல விஷயங்களும் மணமேடையிலேயே நடந்துவிடுகின்றன. திருமணத்துக்கு வந்துள்ள விருந்தினர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் நடக்கின்றன. இவை இணையத்தில் பகிரப்பட்ட பின்னர் இணையவாசிகளையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. தற்போது மீண்டும் ஒரு மண ஜோடியின் முத்தமிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

காதலில் ஆழ்ந்த மணமக்கள்

வைரலாகி வரும் இந்த வீடியோவில், மணமக்கள் மணமேடையில் திருமணம் தொடர்பான சடங்குகளை செய்வதை பார்க்க முடிகின்றது. புரோஹிதர் மணமகனிடம் மணமகளுக்கு தாலி கட்டும்படி கூற அவரும் அப்படியே செய்கிறார். அந்த தருணத்தில் அவர் உணர்ச்சிவசப்படுகிறார், அவருக்குள் இருக்கும் காதல் உணர்ச்சிகளாய் எட்டிப்பர்க்கிறது. 

மேலும் படிக்க | தைரியம் இருந்தா நேர்ல வாங்கடா... கண்ணாடியை பார்த்து சண்டையிட்ட நாய்க்குட்டி! 

அவரது காதலை  புரிந்துகொண்ட மணமகள் அனைவருக்கும் மத்தியில் அவருக்கு முத்தமிடுகிறார். மணமேடையில் பலர் பார்க்க மணமக்கள் முத்தமிட்டுக்கொண்டது அங்கிருந்தவர்கள் மட்டுமல்லாமல், இணையத்தில் காணும் நெட்டிசன்களுக்கும் ஆச்சரியத்தை அளிக்கின்றது. 

காதலில் விழுந்த மணமக்களின் வீடியோவை இங்கே கானலாம்:

காதலில் விழுந்த இந்த மணமக்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், witty_wedding என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

‘மணமக்களுக்குள் இருக்கும் காதல் அவர்களது முகத்தில் தெளிவாகத் தெரிகின்றது’ என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். ‘இப்படி ஒரு வாழ்க்கைத் துணை அனைவருக்கும் கிடைத்தால் நன்றாக இருக்கும். யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் காதலை வெளிப்படுத்துகிறார்கள்’ என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.

மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News