மாஸாக எண்ட்ரி கொடுக்கும் மணமகள்: ‘சோ ச்வீட்’ என பாராட்டும் நெட்டிசன்கள், வீடியோ வைரல்

Wedding video சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மணப்பெண் தேரில் அமர்ந்து படு உல்லாசமாக தனது திருமண மண்டபத்துக்குள் வருவதைக் காண முடிகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 2, 2022, 06:05 PM IST
  • இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம்.
  • சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன.
  • தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
மாஸாக எண்ட்ரி கொடுக்கும் மணமகள்: ‘சோ ச்வீட்’ என பாராட்டும் நெட்டிசன்கள், வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. 

சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. சமீப காலங்களில் திருமண வீடியோக்கள் பட்டையைக் கிளப்பி வருகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

இந்திய திருமணங்களுக்கு பல சிறப்பம்சங்கள் உள்ளன. அட்டகாசமான நடன அசைவுகள், கிண்டல் கேலிகள், கலாட்டா நிகழ்வுகள் என நமது திருமணங்களில் பல சுவாரசியமான நிகழ்ச்சிகள் நடப்பதுண்டு. பொதுவாக தன்னுடைய திருமணத்தில் தன்னுடைய வருகை ஒரு பிரம்மாண்டமான முறையில் இருக்க வேண்டும் என திருமணம் புரிந்துகொள்ளும் மணமகள் நினைப்பது வழக்கம். வெட்கப்பட்டு, குனிந்த தலையுடன் தான் மணமகள் இருக்க வேண்டும் என்ற சிந்தனை பழங்கால சிந்தனையாகி விட்டது.

தற்போது மணம் புரியும் பெண்கள், வழக்கமான பாணியை புறக்கணித்து புதுப்புது விதங்களில் திருமண நாளை அனுபவிக்க ஆசைப்படுகிறார்கள். இப்போதும் அப்படிப்பட்ட ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. 

இந்த வீடியோவில் , மணப்பெண் தேரில் திருமண மண்டபத்துக்குள் நுழைவதைக் காண முடிகின்றது. அவர் மண்டபத்துக்குள் நுழையும் பாணியையும் ஸ்டைலையும் பார்த்து விருந்தினர்கள் அனைவரும் திகைத்து போனார்கள். 

மேலும் படிக்க | வேற லெவல் மகிழ்ச்சி, குத்தாட்டம் போட்ட மணமகள்: வீடியோ வைரல் 

மணமகளின் மாசான ஸ்டைல்

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் மணப்பெண் தேரில் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. தேரில் அமர்ந்தபடி அவர் மேள தாளத்துக்கு ஏற்றவாறு நடனமாடிக்கொண்டு திருமண மண்டபத்துக்குள் வருவதை வீடியோவில் காணலாம். 

உல்லாசமாக ஆடிக்கொண்டு அசத்தலாய் வரும் மணமகளின் இந்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது. அவரது மகிழ்ச்சி அவரது முகத்தில் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இணையத்தை கலக்கி வரும் அந்த வீடியோவை இங்கே காணலாம்:

மாஸாக எண்ட்ரி கொடுக்கும் மணமகளின் வீடியோ

 

மணமகள் தேரில் அமர்ந்து பிரமாண்டமாக திருமணத்துக்குள் பிரவேசிக்கும் விதம், அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்த வீடியோ, weddingsfeverandweddingsglory என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மணமகளின் இந்த வீடியோ, திருமணம் தொடர்பான பல ஹேஷ்டேக்குகளுடன் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்களும் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். 

மேலும் படிக்க | இதயங்களை கனக்க செய்யும் மழலையின் செயலால் வைரலாகும் வீடியோ! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News