மும்பை புறநகர் ரயில்களில் எப்போதும் கூட்டநெரிசலோடுதான் காணப்படும். வேலைக்கு செல்லும் ஆண்கள், பெண்கள், மாணவர்கள் உள்பட பல்வேறு தரப்பினருக்கும் ஏற்ற வகையில் இருப்பதால், உள்ளூர் ரயில்களை அவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில், நேற்று முன்தினம் மும்பை புறநகர் ரயில் ஒன்றில் நடந்த சம்பவம் பெரும் தலைகுனிவை உண்டாக்கியுள்ளது. மும்பையின் தானே-பன்வல் உள்ளூர் ரயிலின் மகளிர் பெட்டியில் பெண் பயணிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டைதான் இந்த பரபரப்பிற்கான காரணம்.
மேலும் படிக்க | மரம் ஏறும் மலைப் பாம்பு: மலைக்க வைக்கும் வைரல் வீடியோ
சமூக வலைதளங்களில் நேற்று வைரலாகி வந்த வீடியோ ஒன்றில், ரயிலில் பயணம் செய்யும் பெண்கள் மத்தியில் அடிதடி சண்டை நடக்கிறது. அதில், ஒரு பெண், இரண்டு பெண்கள் சேர்ந்து முடியை பிடித்து இழுத்து, அவரை கடுமையாக தாக்கும் சம்பவம் பதிவாகியுள்ளது.
Fight between two female passengers over a seat in #Local #TRAIN .
The woman police constable who went to the rescue got hurt.
Both women filed a case against each other at Vashi Railway Police Station.@Central_Railway #Mumbai pic.twitter.com/nFOKv7bOWv
— Siraj Noorani (@sirajnoorani) October 6, 2022
இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில்,'டர்பே ரயில் நிலையம் அருகே ரயில் சென்றுகொண்டிருந்தபோது, இருக்கை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு, மூன்று பெண் பயணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலுக்கு வழிவகுத்தது. மேலும், அங்கிருந்த பல பெண்களும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டதால் இந்த விவகாரம் பெரும் சண்டையாக மாறியது" என்றார்.
பயணிகள் அனைவரும் தங்களின் இருக்கைகளை விட்டு சண்டை்போடும் இடத்தில் இருந்து பாதுகாப்பிற்காக வேறு இடத்திற்கு நகர்வதை
அந்த வீடியோவில் காணலாம். பெண்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை தீர்த்துவைக்க, அங்கிருந்த பெண் காவலர் முயற்சித்தார். சண்டை போட்ட பெண் ஒருவர் தாக்கியதில், அந்த பெண் போலீசாரும் காயமடைந்தார். இந்த சம்பவத்தில், அந்த பெண் காவலர் உட்பட மூன்று பெண்கள் காயமடைந்தனர். அந்த வீடியோவில், இரண்டு பெண் பயணிகளின் தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டுவதைக் காணலாம்.
Disturbing Visuals From #mumbailocal
At Navi Mumbai's Turbe station female passengers ended up into a fierce fight over a seat. In the fight #womencop was injured too.#navimumbai #Mumbai #localtrain #LocalTrainFight pic.twitter.com/US2WIdGUtk— Ashmita Chhabria (@ChhabriaAshmita) October 6, 2022
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில்,"டர்பே நிலையத்தில் ஒரு இருக்கை காலியாக இருந்துள்ளது. எனவே, காலியான இருக்கையின் அருகே இருந்த ஒரு பெண் பயணி, வேறு பெண்ணை அழைத்து இருக்கையில் அமர வைக்க முயன்றார்.
அப்போது, மூன்றாவதாக ஒரு பெண்ணும் அதே இருக்கையில் அமர முயற்சித்துள்ளார். இதனால், அந்த இரண்டும் பெண்கள், மூன்றாவது பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். தொடர்ந்து, பல பெண்களும் சண்டையில் ஈடுபட்டதால், ரயில் பெட்டியே களேபரமானது" என்றனர்.
மேலும் படிக்க | கவுண்டமணி போல தலைகீழாதான் குதிப்பேன் என சேட்டை செய்யும் பாண்டா கரடி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ