'ப்ப்பா... என்ன ஒரு பொறுப்பு': யானை செய்த செயலால் வாய் பிளந்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Elephant Viral Video: 'யானை இதையெல்லாம் கூட செய்யுமா..' என இணையவாசிகளை வியக்க வைக்கும் வகையில் யானை செய்யும் ஒரு செயல் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 25, 2022, 12:26 PM IST
  • மனிதன் போட்ட குப்பை.
  • தொட்டியில் போட்ட யானை.
  • வைரலாகும் வீடியோ.
'ப்ப்பா... என்ன ஒரு பொறுப்பு': யானை செய்த செயலால் வாய் பிளந்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி சலசலப்பை உருவாக்குகின்றன. விலங்குகளில் குரங்கு, யானை, பாம்பு, நாய் என இவற்றின் வீடியோவுக்கு தனி மவுசு உள்ளது. இந்த வீடியோக்கள் மூலம் யானைகள் செய்யும் பல வேடிக்கையான மற்றும் அழகான செயல்களை நாம் கண்டுள்ளோம். இவை நமது இதயத்தை கொள்ளையடித்து விடுகின்றன என்றே கூறலாம். 

அப்படி ஒரு மிக கியூட்டான யானையின் பழைய வீடியோ ஒன்று மீண்டும் ஆன்லைனில் வைரலாகி வருகிறது. அதில் யானை தனது தும்பிக்கையால் குப்பைகளை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவதைக் காண முடிகின்றது. 

இந்த புத்திசாலி யானையின் பல வீடியோக்கள் ட்விட்டரில் காணப்படுகின்றன. இவை இணையவாசிகளிடம் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன. இந்த வைரல் வீடியோவில், தூய்மைக்கான நாட்டமும், நன்னடத்தையும் கொண்ட யானை தரையில் இருந்து குப்பை காகிதத்தை எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவதைக் காண முடிகின்றது. வீடியோவைப் பார்த்த பிறகு, விதிகளைப் பின்பற்றுவதிலும், சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதிலும் மனிதர்களை விட விலங்குகள் உண்மையில் சிறந்தவை என்று கூறத் தோன்றுகிறது. 

மேலும் படிக்க | Viral video: வீட்டிற்கு வந்த ராட்சத பாம்பு தூக்கிச் சென்ற அந்த பொருள்! ஷாக்கான வீட்டுக்காரர் 

இந்த வீடியோவை பார்க்கும் பயனர்கள் மீண்டும் மீண்டும் இதை பார்க்கிறார்கள். யானையின் செயல் அந்த அளவிற்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. 

சூப்பர் யானையின் வீடியோவை இங்கே காணலாம்: 

குப்பையை எடுத்து தொட்டியில் போட்ட யானை: 

வீடியோவில், யானை ஒன்று தரையில் கிடக்கும் குப்பைகளை தும்பிக்கையால் எடுத்து குப்பைத் தொட்டியில் போடுவதைப் பார்க்கிறோம். குப்பையை தனது கால் மற்றும் தும்பிக்கையின் உதவியுடன் எடுத்து அதை அழகாக தொட்டியில் போடுகிறது. ஒரு காகிதம் கீழே விழும்போதும், அதை அப்படியே விட்டு விடாமல், மீண்டும் முயற்சி செய்து அதையும் மீண்டும் எடுத்து தொட்டியில் போடுகிறது. 

சில நாட்களுக்கு முன்னர் வந்த வீடியோவான இது, தற்போது ட்விட்டரில் மீண்டும் பகிரப்பட்டுள்ளது. கிரேட்டர் க்ரூகர் தேசிய பூங்காவில் உள்ள ஒரு சஃபாரி போஸ்டில் யானை குப்பைகளை கொட்டும் இந்த சிசிடிவி காட்சி பதிவானது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல்வேறு கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். மேலும், இந்த யானையின் பொறுப்புணர்ச்சியை வியந்து பாராட்டி வருகிறார்கள். 

மேலும் படிக்க | Viral Video: இணையத்தை கலக்கி வரும் ஒட்டகச்சிவிங்கி குட்டியின் க்யூட் வீடியோ! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News