Viral Video: இணையத்தை கலக்கி வரும் ஒட்டகச்சிவிங்கி குட்டியின் க்யூட் வீடியோ!

வைரல் வீடியோ: பிரிட்டனின் உயிரியல் பூங்கா அழகான ஒட்டகச்சிவிங்கி குட்டியின் வீடியோவைப் பகிர்ந்துள்ளது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 24, 2022, 07:07 PM IST
  • நின்று கொண்டு குட்டு ஈனும் அரிய விலங்குகளில் ஒட்டகச்சிவிங்கிகளும் ஒன்று.
  • ஒட்டகச்சிவிங்கிகள் பிறக்கும்போதே ஆறு அடி உயரம் வரை கூட இருக்கும்.
  • சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோ.
Viral Video: இணையத்தை கலக்கி வரும் ஒட்டகச்சிவிங்கி குட்டியின் க்யூட் வீடியோ! title=

பிரிட்டனின் உயிரியல் பூங்காவில் உள்ள ஒட்டகச்சிவிங்கி குட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நவம்பர் 11 ஆம் தேதி பிறந்த ஒட்டகச்சிவிங்கிக்கு முதலாம் உலகப் போரின் பிரபல கவிஞரான வில்பிரட் ஓவன் பெயரிடப்பட்டது. ZSL Whipsnade உயிரியல் பூங்கா பிரிட்டனின் மிகப்பெரிய உயிரியல் பூங்கா ஆகும். விடுமுறை நாட்களில் ஒட்டக சிவிங்கியை பார்க்கலாம் என உயிரியல் பூங்கா அறிவித்திருந்தது. இதை அடுத்து, புதிதாக பிறந்துள்ள வில்பிரட்டைப் பார்க்க பலர் வருகை தருகின்றனர். வில்பிரட்டின் வீடியோ இன்ஸ்டாகிராமில் ஐயாயிரத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீடியோவைப் பார்த்த இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், இன்றே சென்று பார்க்க வேண்டும் போல் தோன்றுகிறது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மிருகக்காட்சிசாலையின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு வலைப்பதிவில், துணை உயிரியல் பூங்காக் காப்பாளர் மைக்கேல் ஹெஃபர், "வில்ஃப்ரெட் லூனாவின் மூன்றாவது குழந்தை. தாய் ஒட்டசிவிங்கி இப்போது மிகவும் அக்கறையாக தனது குட்டியை கவனித்துக் கொள்கிறது," என்று அவர் விளக்கினார். தற்போது வைரலாகி வரும் வீடியோவில்,  ஒட்டகசிவிங்கியின் செயல்கள் மிகவும் ரசிக்கத் தகுந்ததாக இருக்கின்றன

வைரலாகும் ஒட்டகசிவிங்கி குட்டியின் வீடியோ:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by  (@zslwhipsnadezoo)

 

நின்று கொண்டு குட்டி ஈனும்  அரிய விலங்குகளில் ஒட்டகச்சிவிங்கிகளும் ஒன்று. ஒட்டகச் சிவிங்கிகள் 14 முதல் 15 மாத கர்ப்ப காலத்தின் பின் குட்டியை ஈனுகின்றன. புதிதாகப் பிறந்த ஒட்டகச்சிவிங்கிகள் பிறக்கும்போதே ஆறு அடி உயரம் வரை இருக்கும்.  பிறந்த சில மணி நேரத்திலேயே எழுந்து நடக்கக் கூடியவை. உலகில் ஏழு வகையான ஒட்டகச்சிவிங்கிகள் வாழ்விட அழிவின் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. கோர்டோஃபான் ஒட்டகச்சிவிங்கி மற்றும் நுபியன் ஒட்டகச்சிவிங்கி இரண்டும் இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் "அழிந்துவரும்" என்று பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | Viral Video: சிங்கத்திடம் தப்பி முதலையிடம் மாட்டிக் கொண்ட எருமை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: சிறுத்தையிடம் சிக்கி சின்னாபின்னமான பாம்பு... மனம் பதற வைக்கும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News