திருமணத்தில் தெறிக்கவிட்ட மாப்பிள்ளை: ஸ்டெப்ஸ் பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

Funny Wedding Video: சமீபத்தில் இணையத்தில் வைரல் ஆன ஒரு திருமண வீடியோவில் மணமகனின் மாஸ் நடனத்தை காண முடிகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 25, 2023, 12:53 PM IST
  • திருமணம் தொடர்பான நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன.
  • ஆனால் அவற்றில் சில மட்டுமே இதயத்தைத் திருடும் வகையில் அமைகின்றன.
  • சிலவற்றில் மணமக்களின் வித்தியாசமான பாணி நம்மை வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது.
திருமணத்தில் தெறிக்கவிட்ட மாப்பிள்ளை: ஸ்டெப்ஸ் பார்த்து வாய் பிளந்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

திருமணம் தொடர்பான நூற்றுக்கணக்கான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. ஆனால் அவற்றில் சில மட்டுமே இதயத்தைத் திருடும் வகையில் அமைகின்றன. சிலவற்றில் மணமக்களின் வித்தியாசமான பாணி நம்மை வீடியோவை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது. தற்போதும் அப்படி ஒரு வித்தியாசமான வீடியோ வெளியாகியுள்ளது. சமூக ஊடகங்களில் இப்படிப்பட்ட பல திருமண வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. 

மணமகளின் எண்ட்ரி, மணமகன் வீட்டாரின் நடனம் என இப்படி பல கேளிக்கையான விஷயங்கள் இவற்றில் காணக்கிடைக்கும். மணமக்கள், அவர்களது நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் திருமணங்களில் தங்கள் திறமைகளை காட்டி விடுவார்கள். 

சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இதில் மணமகன் தனது திருமண மகிழ்ச்சியில் மாஸாக நடனமாடியுள்ளார். இவரது நடன அசைவுகளை பார்த்தால், நமக்கும் ஆட வேண்டும் என்ற ஆசை பிறக்கின்றது. அற்புதமான டான்ஸ் ஸ்டெப்ஸ் மூலம் இவர் இணையவாசிகளை மகிழ வைத்துள்ளார். 

மேலும் படிக்க | மாறி மாறி நன்றி சொல்லிக் கொண்ட குட்டி பாப்பாவும், மானும்: கியூட் வீடியோ வைரல்

வீடியோவில் மணமகனின் அற்புதமான நடனத்தைப் பார்த்த பயனர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். இதில் மணமகன் டிஜே இசைக்கு ஏற்ப நடனம் ஆடியுள்ளார். மணமகனின் மகிழ்ச்சி அவரது நடனத்திலும், முகத்திலும் அப்பட்டமாகத் தெரிகின்றது.

மாஸாக டான்ஸ் ஆடிய மணமகன் 

இந்த வைரலான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோவில், மணமகன் தலையில் தலைப்பாகை, அழகிய ஷெர்வானி ஆகியவற்றை அணிந்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் டிஜேயின் இசைக்கு நடனமாடுவதைக் காண முடிகின்றது. மாப்பிள்ளையின் அட்டகாசமான நடனத்தை கண்டு திருமனத்தில் அனைவரும் ஆச்சரியமடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயனர்களின் கவனத்தை ஈர்த்ததற்கு இதுவே காரணம்.

மணமகனின் மாஸ் நடனத்தை இங்கே காணலாம்:

வீடியோ இணையத்தில் வைரல் ஆனது

இந்த வீடியோ ட்விட்டரில் @HasnaZarooriHai என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. ‘இன்றைய மாப்பிள்ளைகள் தேர்ந்த நடன வல்லுனர்களை கூட தோற்கடித்து விடுகிறார்கள்’ என இதன் தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரையும் மகிழ்வித்துள்ளது. செய்தி எழுதும் வரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை இது பார்க்கப்பட்டுள்ளது. ஏகப்பட்ட பயனர்கள் இதை லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளையும் அளித்து வருகிறார்கள். 

‘இவர் ஒரு நடனக் கலைஞராக இருக்க வேண்டும்’ என ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொரு பயனர், ‘இவர் ஒரு டான்ஸ் மாஸ்டர்.. இது டான்ஸ் மாஸ்டரின் திருமணம்’ என கருத்து தெரிவித்துள்ளார். ‘திருமண களை அந்த மாப்பிள்ளையின் முகத்திலும் டான்சிலும் நன்றாக தெரிகின்றது’ என மற்றொரு பயனர் கூறியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | நீ நடிகன் டா.. தொட்டதும் மயங்கி விழுந்த பாம்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News