சமீபத்தில் நடந்து முடிந்த கோபா அமெரிக்க கால்பந்து தொடரில் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வென்றது.
இந்த போட்டி முடிந்தவுடன் அணியின் கேப்டன் மெஸ்ஸி (Lionel Messi) கோப்பையுடன் இருந்த போட்டோவை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் (Instagram) போன்ற தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு இருந்தார். இந்த புகைப்படம் புதிய சாதனையை படைத்து உள்ளது. இதுவரையில் உலகிலேயே அதிக லைக்குகளை இந்த புகைப்படம் பெற்று சாதனையை படைத்து வருகிறது.
யார் இந்த மெஸ்ஸி
இந்தியர்களுக்கு கிரிக்கெட் எப்படியோ, அப்படித்தான் அர்ஜென்டினியர்களுக்கு கால்பந்து. அப்படிப்பட்ட அர்ஜென்டினாவின் ரோஸரியாவில் (சேகுவேரா பிறந்த ஊர்) 1987-ம் ஆண்டு பிறந்தவர்தான் லயோனல் மெஸ்ஸி. இவர் குடும்பத்தின் மூன்றாவது ஆண் குழந்தை ஆவார். இவரது தந்தை ஜோர்கே, ஒரு தொழிற்சாலைப் பணியாளர்; தாய் செலியா, பகுதிநேர தூய்மைப் பணியாளர்.
ALSO READ | Friendship: தோல்வியில் துவளும் நெய்மரை கட்டியணைத்து ஆறுதல் கூறும் மெஸ்ஸி
மெஸ்ஸியின் முதலாவது பிறந்த நாளிலேயே உறவினர் ஒருவர், Newell's Old Boys என்ற உள்ளூர் ஃபுட்பால் கிளப்பின் டி-ஷர்ட்டைப் பரிசாக அளித்தார். நான்காவது பிறந்த நாளில், ஒரு கால்பந்தை வாங்கிக்கொடுத்தார் தந்தை ஜோர்கே. அப்போது முதலே மெஸ்ஸிக்கும் கால்பந்துக்கும் இடையே பயங்கர கெமிஸ்ட்ரி என்ற கூறலாம்.
உள்ளூர் கிளப் ஒன்றில் கால்பந்து கோச்சாக இருந்த ஜோர்கே, தன் மூன்று மகன்களுக்கும் தீவிரமாகப் பயிற்சி அளித்தார். ஐந்தாவது வயதில் கிராண்டோலி என்ற கிளப்பில் இணைந்து விளையாட ஆரம்பித்தார் மெஸ்ஸி. அபாரிசியோ, Newell's Old Boys அணியின் கோச். மெஸ்ஸியின் குடும்பத்துக்குத் தெரிந்தவர். களத்தில் கால்பந்துடன் மெஸ்ஸி காட்டிய வேகம், அவரது புருவங்களை உயர்த்தின.
மிக இளவயதிலேயே மெஸ்ஸி கால்பந்து விளையாடத் தொடங்கினார், இவருடைய திறமையை விரைவிலேயே பார்சிலோனா கண்டு கொண்டது. ரோசாரியோவைச் சார்ந்த நியுவெல்ஸ் ஓல்ட் பாய்ஸ் இளைஞர் அணியை விட்டு 2000 ஆம் ஆண்டில் வெளியேறி, அவரது குடும்பத்துடன் ஐரோப்பாவில் குடியேறினார்.
2004–05 சீசனில் முதன்முதலாக விளையாடத் தொடங்கினார், அவர் லா லிகா அணிக்கு ஒரு லீக் போட்டியில் விளையாடிய மிக இளவயது நபர் என்ற சாதனையை செய்தார், மேலும் லீக் போட்டியில் கோல் அடித்த இளவயது நபர் என்ற பெருமையையும் பெற்றார். மெஸ்ஸி முதன்முதலாக கலந்து கொண்ட சீசனில், லா லிகாவை பார்சிலோனா வெற்றி பெற்றது, அந்த லீகின் இரட்டை வெற்றியாளராகவும், 2006 ஆம் ஆண்டில் UEFA சாம்பியன்ஸ் லீகின் வெற்றியாளராகவும் விளங்கியது.
இவர் முதன்முதலில் சாதித்த சீசன் 2006–07 ஆகும்: எல் கிளாஸிகோவில் ஹாட்ரிக் கோல் அடித்த, முதல் ரெகுலர் வீரராகவும் மொத்தம் 26 லீக் போட்டிகளில் 14 கோல்களை அடித்தவராகவும் விளங்கினார். ஆனாலும், இவருக்கு மிகவும் வெற்றிகரமாக விளங்கியது 2008-09 சீசன் ஆகும், இதில் மெஸ்ஸி மொத்தம் 38 கோல்களை அடித்தார், இது அந்த போட்டிகளில் பெரிய அளவில் வெற்றிபெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
ALSO READ | Football: இனி லியோனல் மெஸ்ஸி எந்த அணிக்கும் சொந்தமில்லை, தனி வீரரானர்
ஆறு கோல்களை அடித்து மெஸ்ஸி முதலிடத்தில் இருந்தார், இதில் 2005 ஃபிஃபா இளைஞர் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் அடித்த இரண்டு கோல்களும் அடங்கும். இதன் பின்னர் சிறிது காலத்திலேயே, அவர் அர்ஜென்டினாவின் சீனியர் அணியில் மிக முக்கியமான ஒரு உறுப்பினராக மாறினார்.
2006 ஆம் ஆண்டில், அவர் ஃபிஃபா உலகக்கோப்பையில் விளையாடியதன் மூலமாக, அந்த போட்டியில் கலந்து கொண்ட மிக இளவயது அர்ஜென்டின வீரர் என்ற பெருமையைப் பெற்றார், அடுத்த ஆண்டில் கோப்பா அமெரிக்கா டோர்னமன்டில் ரன்னர்ஸ் அப் மெடலைப் பெற்றார். 2008 ஆம் ஆண்டில், பீஜிங்கில், அவருடைய முதல் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றார், அர்ஜென்டினா ஒலிம்பிக் கால்பந்து அணியுடன் இணைந்து ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தைப் பெற்றார்.
புதிய சாதனை படைத்த மெஸ்ஸி
இந்நிலையில் கோபா அமெரிக்கா கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் பிரேசிலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது அர்ஜெண்டினா. மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி இதுவரை 29 முறை கோபா கோப்பை பைனலில் விளையாடி 15 முறை கோப்பையை வென்றுள்ளது. இதன் மூலம் கோபா கோப்பையை அதிக முறை வென்ற உருகுவேயின் சாதனையை (15 முறை) அர்ஜெண்டினா சமன் செய்துள்ளது.
இந்த போட்டி முடிந்தவுடன் அணியின் கேப்டன் மெஸ்ஸி கோப்பையுடன் இருந்த போட்டோ தற்போது இணையத்தில் புதிய சாதனையை படைத்து வைரலாகி வருகிறது.
ALSO READ | சரித்திரம் படைத்த லியோனல் மெஸ்ஸி; 6-ஆவது முறை Ballon d'Or விருதை வென்றார்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR