நடு ரோட்டில் சிறுவன் ஆடிய ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல்

Funny Dance Video: சிறுவன் ஒருவன் நடு ரோட்டில் ஆடும் நடனம் இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. இதை பார்த்தால் உங்களாலும் ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 5, 2023, 03:08 PM IST
  • சிறுவனின் நடன வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் zayan.my என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • சிறுவனின் இந்த அற்புதமான நடன வீடியோவுக்கு இதுவரை ஏகப்பட்ட வியுஸ்களும் 4.5 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
நடு ரோட்டில் சிறுவன் ஆடிய ஆட்டம்.... சான்சே இல்ல: சொக்கிய நெட்டிசன்கள், வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் குழந்தைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

குழந்தைகள் எந்த வித கபடும் சூதும் இல்லாத நல்ல உள்ளங்களை கொண்டவர்கள். இவர்கள் ஒரு வேலையை செய்யும் முன் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. மனம் எதை நினைக்கிறதோ அதை செய்து முடிக்கிறார்கள். சமூக ஊடகங்களில் குழந்தைகள், சிறுவர், சிறுமிகளின் பல வீடியோக்கள் தினம் தினம் பகிரப்படுகின்றன. இவை நம் உள்ளங்களை கவரும் வண்ணம் இருக்கின்றன. 

நடனம் என்பது பலரால் விரும்பப்படும் கலையாகும். நடன வீடியோக்களுக்கென இணையத்தில் தனி இடம் உண்டு. சிறு குழந்தை முதல் முதியவர்கள் வரை அசத்தலாக நடனமாடும் பல வீடியோக்களை நாம் இணையத்தில் பார்த்துள்ளோம். இப்படிப்பட்ட வீடியோக்கள் முதல் பார்வையிலேயே அனைவரின் கவனத்தை ஈர்ப்பதோடு அவர்களின் முகத்தில் சிரிப்பையும் வரவழைக்கின்றன. நடன வீடியோக்களுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதுவும் சில வீடியோக்கள், நடன அசைவுகளுக்காக மட்டுமல்லாமல், ஆடுபவரின் அசாத்திய ஆளுமை, எதை பற்றியும் கவலைப்படாத தைரியம் ஆகியவற்றுக்காகவும் பிரபலமாகின்றன. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகின்றது. 

பல வீடியோக்களில் யாரை பற்றியும், எதை பற்றியும் கவலைப்படாமல், தங்களுக்காக மட்டும் பலர் நடனமாடுவதை நாம் பார்த்துள்ளோம். அப்படி ஒரு வீடியோதான்  தற்போதும் பகிரப்பட்டு வைரல் ஆகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் நம் கண்களையே நம்மால் நம்ப முடியாது.

இந்த வீடியோவில் ஒரு சிறுவன் நடு சாலையில் பிரம்மாண்டமாக நடனமாடுவதை காண முடிகின்றது. யாரை பற்றியும் கவலைப்படாமல் அந்த சிறுவன் ஆடும் நடனம் அனைவரையும் வியக்க வைக்கின்றது. அந்த சிறுவனின் நடனத்தை பார்த்தால் யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

சிறுவனின் அசாத்திய நடனம், வியக்கும் மக்கள் 

சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு சிறுவன் தனது நடனத்தின் மூலம் மக்களின் மனதை வென்று வருகிறார். இந்த வீடியோவில் ஒரு தெருவில் சிறுவன் ஒருவன் சென்று கொண்டிருப்பதை காண முடிகின்றது. திடீரென சிறுவன் தெருவில் விழுந்து விடுகிறார். சிறுவனுக்கு அடி பட்டிருக்குமோ? எழுந்து அழுவானோ? என பல வித எண்ணங்கள் நமக்கு வரும் வேளையில், நாம் காணும் காட்சியோ நம்மை வியக்க வைக்கிறது. அந்த சிறுவன் திடீரென எழுந்து பக்காவாக நடனமாடத் தொடங்குகிறார். 

மேலும் படிக்க | தண்டவாளத்தில் மாட்டிய நாய்... எதிரில் வந்த விரைவு ரயில்: மனதை உலுக்கிப்போடும் வைரல் வீடியோ

இந்த சிறுவன் எழுந்து, தற்காப்பு கலையின் ஸ்டெப்ஸ்களை போட்டு அசத்தலான நடனத்தை ஆடுகிறார். இதை பார்த்து சாலையில் சென்ற அனைவரும் ஆச்சரியத்தில் அப்படியே நிற்கிறார்கள். யாராலும் தாங்கள் காணும் காட்சியை நம்ப முடியவில்லை. தன் நடன அசைவுகளால் சிறுவன் அனைவரையும் திகைக்க வைக்கிறார். அவர் உடலை அசைக்கும் விதத்தைப் பார்த்தால், இந்த சிறு வயதில் இந்த குழந்தை எப்படி இப்படிப்பட்ட நடனத்தை ஆடுகிறார் என்றுதான் எண்ண தோன்றுகிறது. 

சிறுவனின் மாஸ் நடனத்தின் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ZAYAN (@zayan.my)

சமூக ஊடகங்களில் குவியும் பாராட்டுக்கள்

சிறுவன் நடனமாட தொடங்கிய உடன் மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்ததோடு, அவரை பாராட்டினர். சிலர் சிறுவனது டான்சை வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். இந்த நடனம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. சிறுவனின் நடன வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் zayan.my என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. சிறுவனின் இந்த அற்புதமான நடன வீடியோவுக்கு இதுவரை ஏகப்பட்ட வியுஸ்களும் 4.5 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | தண்ணீர் குடிக்க லைனாக வந்த சிங்க கூட்டம்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News