அசந்த நேரத்துல எனக்கே விபூதி அடிச்சிட்டீங்கள்லடா.. பாம்பு vs நபர்: வீடியோ வைரல்

Snake Viral Video: பாம்பை தொல்லை செய்த நபருக்கு பெரிய டுவிஸ்ட் ஒன்று நடந்துள்ளது. வீடியோ எடுத்த கேமராமேனின் நிலை அந்த வீடியோவையே அதிர வைக்கும் அளவுற்கு செய்துள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 4, 2023, 03:59 PM IST
  • இன்றைய வைரல் வீடியோ.
  • பாம்பு மற்றும் நபரின் வைரல் வீடியோ.
அசந்த நேரத்துல எனக்கே விபூதி அடிச்சிட்டீங்கள்லடா.. பாம்பு vs நபர்: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: தற்போது பரபரப்பாக இயங்கி வரும் உலகத்தில், நம் சமூக ஊடகத்துடன் பின்னிப்பிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஏனெனில் இணையதளம் ஒரு தனி உலகமாக த்தையே இயங்கி வருகிறது. போதைக்கு அடிமையாகி இருப்பது போல் தற்போது மக்கள் இணையத்தளத்திற்கு அடைமையாகி உள்ளனர். ஏனெனில் இங்கு பல வித வியக்க வைக்கும் விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். அத்துடன் இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல தகவல்களை வழங்கி வழங்குகின்றன. இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் இங்கு பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான சில விஷயங்களும் இடம்பெற்றுள்ளது. மறுபுறம் நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வன விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் பாம்புகள் வீடியோவுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.

பொதுவாக பாம்புகள் இணையத்தின் ராஜாவாக செயல்பட்டு வருகிறது. ஏனெனில் பாம்பு வீடியோக்கள் மீது இணையவாசிகளுக்கு எப்போதுமே ஒரு தனி கிரேஸ் இருந்து வருகின்றது. மனிதர்களை அதிக அளவில் கவர்ந்த உயிரினங்களில் பாம்புகளுக்கு மிகமுக்கிய இடம் உள்ளது. அவை உலகின் மிக அஞ்சப்படும் உயிரினங்களில் ஒன்றாக இருந்தாலும், மக்களிடையே தனி இடத்தை பிடித்துள்ளது. மேலும் சில மரபுகளில், அவை தெய்வங்களாகவும் வணங்கப்படுகின்றன. இவற்றை பற்றிய பல கதைகள் மற்றும் நாட்டுப்புறக் கதைகளும் உள்ளன. இதனாலே பாம்புகள் பற்றி அறிய நாம் இன்னும் ஆர்வத்தை காட்டுகிறோம். இந்நிலையில் பாம்புகளின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிறப்பட்டு வருகின்றது, ஆனால் இந்த வீடியோ பார்பதற்கு செம கொமெடியாக இருக்கும்.

மேலும் படிக்க | காட்டு கழுதைகளை காரில் துரத்தும் சுற்றுலாப் பயணிகளின் வீடியோ வைரல்

இங்கு பாம்பை வீடியோ எடுத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிலருக்கு தரமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒரு நபர் பாம்பை துடைப்பம் கொண்டு அடிப்பதை நாம் வீடியோவில் காணலாம். அப்போது திடீரென்று துடைப்பத்தின் உதவியுடன் பாம்பை தூக்கி எறிந்தார். இதனால் காற்றில் பறந்த பாம்பு கேமராமேன் மீது விழுகிறது. ஜாலியாக வீடியோ எடுத்துக்கொண்டிருந்த கேமராமேன், தனது மொத்தப் படமும் பாழாகியதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கறுப்பு நிற பாம்பு ஒன்று அங்கும் இங்கும் செல்ல வழி தேடிக்கொண்டிருந்ததை காணொளியில் காணலாம். இதற்கிடையில், ஒரு நபர் துடைப்பத்தை எடுத்து பாம்பை அடக்க முயற்சிக்கிறார். பாம்பு ஒருமுறை தப்பிக்க முயல்கிறது. துடைப்பம் பிடித்தவர் மீண்டும் பாம்பை அடக்க முயன்றபோது பாம்புக்கும் கோபம் வந்தது. கோபம் கொண்ட பாம்பு துடைப்பத்துடன் இருந்த அந்த நபரை நோக்கி விரைந்தது.

துடைப்பம் பிடித்தவர் பாம்பு தன்னை நோக்கி வருவதைக் கண்டு பயந்தார். இதனால் அந்த விளக்குமாறு நகர்த்திய அவர், கேமராமேனை நோக்கி திரும்பினார். இதனால் பாம்பு பறந்து சென்று கேமராமேன் மீது விழுந்தது. வேடிக்கையாக வீடியோ எடுத்துக்கொண்டிருந்த கேமராமேன் சுயநினைவை இழந்து, சத்தம் போட்டு ஓடத் தொடங்கினார். வீடியோவின் கடைசி பகுதியில், பாம்பு மறுபுறம் விழுவதை கண்டப் பிறகு, கேமராமேன் மற்றும் அவரது தோழர்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவதையும் காணலாம்.

பாம்பிடம் வமபழுத்து பல்பு வாங்கிய நபரின் வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raj Sony (@sonyboy1931)

இந்த வீடியோ @sonyboy1931 என்ற instagram கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை இதுவரை 18 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பயனர்களும் வேடிக்கையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | ’வாடா செல்லம்’ மிட்டாய் பாக்ஸில் ஈஸியாக நாகப்பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர் - வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News