தண்ணீர் குடிக்க லைனாக வந்த சிங்க கூட்டம்: வைரல் வீடியோ

தென்னாப்பிரிக்காவில் சிங்க கூட்டம் ஒன்று தண்ணீர் குடிக்க ஒன்றன் பின் ஒன்றாக சென்று அமர்ந்து குடித்த வீடியோ மிகவும் அழகாக இருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 4, 2023, 10:56 PM IST
  • சிங்க கூட்டத்தின் அழகான வீடியோ
  • தண்ணீர் குடிக்க படையெடுத்து வருகை
  • 17 சிங்கங்களை பார்த்த நெட்டிசன்கள்
தண்ணீர் குடிக்க லைனாக வந்த சிங்க கூட்டம்: வைரல் வீடியோ  title=

ஒழுக்கத்தை மனிதர்கள் கடைபிடிப்பது அவசியம் என்றாலும், அதனை அவர்கள் கடைபிடிப்பதில்லை என்பது தான் மிகப்பெரிய குற்றச்சாட்டே. அவர்கள் கடைபிடிக்கவில்லை என்றால் என்ன எங்களிடம் இருந்து கற்றுக் கொள்ளுங்கள் என எடுத்துக்காட்டும் விதமாக சிங்க கூட்டம் ஒன்று வரிசையாக அமர்ந்து தண்ணீர் குடிக்கும் வீடியோ காண்போரை கவர்ந்திழுத்துள்ளது. 

மேலும் படிக்க | காட்டு கழுதைகளை காரில் துரத்தும் சுற்றுலாப் பயணிகளின் வீடியோ வைரல்

ஒழுக்கம் என்பது எந்த இடத்திலும் அவசியம், அத்தியாவசியம். அப்படி ஒருவர் இருந்தால் அவர் மட்டுமல்லாது அந்த சமூகமும் அந்த நபரை சார்ந்தவர்களும் எப்போதும் மகிழ்ச்சியாகவும் பிறருக்கு முன்மாதிரியாகவும் இருப்பார்கள். ஆனால், அத்தகைய ஒழுங்கை இப்போது பொதுவெளியில் மனிதர்களிடத்தில் காண்பது அரிதாகிக் கொண்டே வருகிறது. அவர்கள் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் மனிதர்களிடத்தில் கேட்டு தெரிந்து கொள்ள வெட்கமாகவோ அல்லது அசௌகரியமாகவோ உணர்ந்தால் விலங்குகளிடம் இருந்தாவது கற்றுக் கொள்ள முயற்சிக்க வேண்டும். 

அதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. வனப்பகுதியில் இருக்கும் சிங்க கூட்டம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து காட்டுக்குள் இருக்கும் நீரோடையில் அமர்ந்து தண்ணீர் குடிக்கின்றன. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி ஹேமந்த் மீனா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துளளார். 

அந்த ஒரு வீடியோவில், 15-க்கும் மேற்பட்ட சிங்கங்கள் வரிசையாக வந்து தண்ணீர் குடிக்கின்றன. காட்டில் சிங்கங்களே ஆனாலும் வரிசையில் வந்து ஒழுங்கை கடைபிடிக்கின்றன. ஆனால், மனிதர்களைப் பாருங்கள் கூட்டம் சேர்ந்தாலே ஒழுங்கை மீறவே செய்கிறார்கள். மனிதர்கள் விலங்குகளிட கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த வீடியோ அமைந்துள்ளது.

மேலும் படிக்க | புலியுடன் வம்பிழுக்கும் குரங்கு, இவ்வளவு தைரியமா? பிறகு என்ன நடந்தது: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News