Malala on Marriage: பாகிஸ்தானில் புயலைக் கிளப்பும் கேள்வி ‘ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?’

 ஏன் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி பாகிஸ்தானையே கிடுகிடுக்க வைத்திருக்கிறது. சமூக ஊடகங்களில் ட்ரோலாகிறார் மலாலா

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 4, 2021, 11:06 PM IST
  • பாகிஸ்தானில் புயலைக் கிளப்பும் கேள்வி
  • ‘ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?’
  • ட்ரோலாகும் மலாலா யூசுப்
Malala on Marriage: பாகிஸ்தானில் புயலைக் கிளப்பும் கேள்வி ‘ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்?’   title=

பாகிஸ்தானின் மலாலா யூசுப்சாயின் ஒற்றைக் கேள்வி அந்நாட்டையே கிடுகிடுக்க வைத்திருக்கிறது. அப்படியொன்றும் தவறான கேள்வியை அவர் கேட்டுவிடவில்லை.  ஏன் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வியைத் தான் கேட்டார் மலாலா.

சமூக ஆர்வலர் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் சமீபத்தில் பிரிட்டிஷ் வோக்கின் அட்டைப்படத்தில் இடம்பிடித்தார். திருமணம் குறித்த யூசுப்சாயின் கருத்துக்கள் பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பியுள்ளது. அதோடு, மலாலா இடம்பெற்றிருந்த பத்திரிகையின் அட்டைப்படமும் வைரலானது. 

செய்தியாளரிடம் மனம் விட்டு உரையாடிய மலாலா யூசப்சாய், அரசியல், கலாச்சாரம், தனிப்பட்ட வாழ்க்கை என பல விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசினார். இருப்பினும், திருமணம் குறித்த அவரது கருத்துக்கள் பாகிஸ்தானில் பலருக்கு எரிச்சலூட்டியிருக்கிறது.  

malala

திருமணத்தைப் பற்றி பேசிய யூசுப்சாய், எல்லோரும் தங்கள் உறவுக் கதைகளை சமூக ஊடகங்களில் பகிர்வதைப் பார்ப்பது கவலை ஏற்படுவதாக தெரிவித்தார். "நீங்கள் ஒருவரை நம்ப முடியுமா இல்லையா என்பதே தெரியாத நிலையில்... நீங்கள் எப்படி உறுதியாக இருக்க முடியும்?" என்று கேள்வி எழுப்பினார்.

Also Read | பயன்படுத்திய மாஸ்குகளை செங்கல்லாக மாற்றும் Recycle Man of India

"ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று எனக்கு இன்னும் புரியவில்லை. உங்கள் வாழ்க்கையில் ஒரு நபர் வரவேண்டும் என்று விரும்பினால், ஏன் திருமணம் செய்துக் கொள்ளவேண்டும்? அவர் ஏன் ஒரு கூட்டாளராக இருக்க முடியாது (திருமணம் செய்துக் கொள்ளாமல்)? ".

இந்த கருத்துக்கள் பழமைவாத பாகிஸ்தானின் சமூக ஊடகங்களில் புயலை கிளப்பி இருக்கிறது. இஸ்லாமின் கொள்கைகளுக்கு எதிரான மலாலா, "பொறுப்பற்ற" அறிக்கைகளால் இளைஞர்களின் மனதை சிதைக்க முயற்சிப்பதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். "மேற்கத்திய கலாச்சாரத்தை" நகலெடுக்கிறார் மலாலா என்றும் திட்டித் தீர்க்கின்றனர். புனிதமான திருமணத்தின் புனிதமான விதிகளைப் பற்றி எதிர்மறையான கருத்துக்களைப் பரப்பியதற்காக சமூக ஆர்வலர் குற்றம் சாட்டினார்.

பிரிட்டிஷ் வோக்கின் அட்டைப்படம் வைரலாகிய சில நாட்களுக்குப் பிறகு, ‘marriage’ மற்றும் Malala  என்ற ஹேஷ்டேக்கள் சமூக ஊடகங்களில் பிரபலமடையத் தொடங்கின. அதில் பல கருத்துக்கள் பாலியல் ரீதியானதாகவும், அவதூறு பேசுவதாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | சச்சின் டெண்டுல்கரின் வெற்றி ரகசியத்தை சொல்லும் சத்குரு; இது சரியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News