Technology: பயன்படுத்திய மாஸ்குகளை செங்கல்லாக மாற்றும் Recycle Man of India

அனைவரும் பயன்படுத்தும் கொரோனா தடுப்பு கவசங்கள் அனைத்துமே பிளாஸ்டிக்கால் ஆனவை. முகக்கவசம் , பி.பி.ஈ.கிட்கள், தலைக்கவசங்கள் அனைத்தும் அப்படியே குப்பையில் வீசப்பட்டு, சுற்றுப்புற சூழலை மாசுபடுத்துகின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன?

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jun 4, 2021, 09:44 PM IST
  • பயன்படுத்திய மாஸ்குகளை செங்கல்லாக மாற்றும் தொழில்நுட்பம்
  • ஒரு செங்கல்லின் அடக்கவிலை 2.8 ரூபாய்
  • நீர்புகாத தன்மை கொண்ட வலுவான செங்கல் இது
Technology: பயன்படுத்திய மாஸ்குகளை செங்கல்லாக மாற்றும் Recycle Man of India title=

புதுடெல்லி: கொரோனா வைரஸ் உலகில் இயல்பு வாழ்க்கையை மாற்றிவிட்டது. முன்பெல்லாம் அதிகம் பேசுபவர்களை வாயை மூடு என்று திட்டுவார்கள். ஆனால் இப்போது, ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் முகக்கவசத்தால் வாயை மூடு என்று அன்புடன் சொல்லும் காலம் வந்துவிட்டது.

கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்க நாம் முகக்கவசங்களை பயன்படுத்துகிறோம். அதிலும், இரண்டாவது அலையின் தாக்கம்  அதிகமாக இருப்பதால், இரண்டு மாஸ்குகளைப் போடுங்கள் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். 

மாஸ்க் போட்டால்தான் கொரோனாவில் இருந்து பாதுகாப்பாக இருக்க முடியும். ஆனால், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பு கவசங்கள், குப்பையில் வீசப்பட்ட பின் என்னவாகிறது? அது ஏற்படுத்தும் ஆபத்து என்ன? இதைப் பற்றிய கவலைகள் ஒருபுறம் அதிகரித்துள்ளது.

Also Read | X-Ray Setu on Whatsapp: RT-PCR வசதியற்ற இடங்களுக்கு வரமாய் வந்த கோவிட் சோதனை முறை

முகக்கவசம் மட்டுமல்ல, பி.பி.ஈ.கிட்கள், தலைக்கவசங்கள் என தற்போது பிரபலமாகியிருக்கும், அனைவரும் பயன்படுத்தும் கொரோனா தடுப்பு கவசங்கள் அனைத்துமே பிளாஸ்டிக்கால் ஆனவை. இவை அப்படியே குப்பையில் வீசப்பட்டு, சுற்றுப்புற சூழலின் மாசை அதிகரிக்கின்றன. இந்த பிரச்சனைக்கு தீர்வு என்ன?

மறுசுழற்சி செய்வது தான்… இந்தியாவின் 'மறுசுழற்சி நாயகன்' என்று அழைக்கப்படும் பினிஷ் தேசாய் 28 வயதே ஆனவர். இவர், உயிர் மருத்துவ கழிவுகளை குறிப்பாக ஒற்றை பயன்பாட்டு முகக்கவசங்கள், தலையில் போடப்படும் கவசம், பிபிஇ கிட், கையுறைகள் ஆகியவற்றை செங்கற்களாக மறுசுழற்சி செய்கிறார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் (National Green Tribunal) மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board) அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, நாட்டில் தினசரி சுமார் 609 மெட்ரிக் டன் சாதாரண உயிர் மருத்துவ கழிவுகள் உற்பத்தியாகின்றன. தற்போது கொரோனா பரவலால், இந்தியாவில் COVID-19 தொடர்பான உயிரியல் மருத்துவக் கழிவுகள் நாளொன்றுக்கு சுமார் 101 மெட்ரிக் டன் (MT/day) உற்பத்தியாகிறது.  

Also Read | Kia EV6: அசத்தும் அம்சங்களுடன் அறிமுகமாகிறது மின்சார கார், 18 நிமிடங்களில் 80% சார்ஜ்!!

இந்த தரவுகள், கொரோனாவின் தாக்கம் ஏற்படுத்தும் பக்கவிளைவுகளை கோடிட்டு காட்டுவதாக அமைந்துள்ளது. மறுசுழற்சி செய்யாவிட்டால், சுற்றுச்சூழல் மேலும் விரைவில் சீர்கெடும்.

பி-பிளாக் 2.0

கழிவுகளாக போடப்படும் பிபிஇ மற்றும் முகக்கவசங்களில் 52 சதவீதம், மூன்று சதவீதம் பைண்டர்கள் மற்றும் 45 சதவீதம் காகித கழிவுகள் சேர்த்து இந்த செங்கற்கள் தயாரிக்கப்படுகின்றான. இந்த செங்கற்களில், நீர் புகாது, தீப்பற்றாது, மற்றும் பூச்சிகளை எதிர்க்கும் தன்மை உள்ளது.  

ஒவ்வொரு செங்கலும் 12 x 8 x 4 அங்குல அளவு கொண்டது, ஒரு சதுர அடிக்கு 7 கிலோ பயோமெடிக்கல் கழிவுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பி-பிளாக் 1.0 உடன் ஒப்பிடும்போது இலகுவானது ஒரு செங்கல் உற்பத்திக்கு 2 ரூபாய் 80 காசுகள் அடக்க விலை ஆகிறது.  

Also Read | சச்சின் டெண்டுல்கரின் வெற்றி ரகசியத்தை சொல்லும் சத்குரு; இது சரியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News