தாங்க முடியாத அலப்பறை, வேற லெவலில் தாக்கிய குரங்குகள்: வீடியோ வைரல்

Monkey Attack Video: இப்படி ஒரு வீடியோவை நீங்கள் பார்த்திருக்க முடியாது. குரங்குகளின் தாக்குதல் வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 11, 2023, 04:45 PM IST
  • சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
  • அதில் டஜன் கணக்கான குரங்குகள் வீட்டின் சுவரில் தொங்கிக்கொண்டிருப்பதை காண முடிகின்றது.
  • வீடியோவை பார்த்தால் குரங்குகள் வீட்டின் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காட்சி காணப்படுகின்றது.
தாங்க முடியாத அலப்பறை, வேற லெவலில் தாக்கிய குரங்குகள்: வீடியோ வைரல் title=

இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

மனிதர்கள் காடுகளை வெட்டத் தொடங்கியதிலிருந்து, பல உயிரினங்கள் காடுகளை விட்டு நகரங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளன. இப்போது அவை மனிதர்களின் குடியிருப்பு பகுதிகளுக்கும் அடிக்கடி வந்து விடுகின்றன. மனிதர்களின் இடத்திற்கே வந்து அவர்களுக்கு அதிக பிரச்சனைகளை அளிக்கும் விலங்குகளில் குரங்குகளுக்குத் தான் முதலிடம்!! குரங்குகளின் குறும்பு வீடியோக்கள் பல சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. 

குரங்குகள் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து உடமைகளை அழித்து உணவுப் பொருட்களை உண்பது வழக்கம். பொதுவாக ஒன்று அல்லது இரண்டு குரங்குகள் மட்டுமே வரும். ஆனால், சில சமயத்தில் குரங்குகள் கூட்டமாக வருவதும் உண்டு. சமீபத்தில் ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் டஜன் கணக்கான குரங்குகள் வீட்டின் சுவரில் தொங்கிக்கொண்டிருப்பதை காண முடிகின்றது. வீடியோவை பார்த்தால் குரங்குகள் வீட்டின் மீது தாக்குதல் நடத்துவது போன்ற காட்சி காணப்படுகின்றது. 

தற்போது வைரல் ஆகியுள்ள இந்த வீடியோ-வில், பல லங்கூர் குரங்குகள் வீட்டின் சுவரில் தொங்குவதைக் காண முடிகின்றது. கீழே உள்ள சுவரிலும், தூணிலும் ஏதோ எழுதப்பட்டுள்ளது. அதிலிருந்து இது இந்தியாவில்தான் எங்கோ நடந்துள்ளது என்று தெரிகிறது. குரங்குகள் உணவின் மீதுள்ள ஆசையால் அடிக்கடி வீடுகளுக்குள் நுழைகின்றன. ஆனால் வீடியோவில் காணப்படுவது போன்ற காட்சியை இது வரை பார்த்திருக்க முடியாது. 

மேலும் படிக்க | வேட்டையாட வந்த பாம்பு, காத்திருந்த ட்விஸ்ட்: பூனையின் வெறியாட்டம், வைரல் வீடியோ 

கூட்டமாய் குரங்குகள் வீட்டை தாக்கும் காட்சியை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by U Nagesh (@u.nagesh353)

லங்கூர்கள் வீட்டைத் தாக்கின

வீடியோவில் இரண்டு மாடி வீடு காணப்படுகின்றது. அதன் கேட் மூடப்பட்டுள்ளது. முதல் தளத்தின் பால்கனியில் வலை உள்ளது மற்றும் மேல் தளம் திறந்த நிலையில் உள்ளது. பல லங்கூர் குரங்குகள் தொங்கிக்கொண்டிருக்கின்றன. சில குரங்குகள் கூரையில் ஏற முயல்கின்றன. சில குரங்குகள் குதிக்க, சில பக்கவாட்டில் சறுக்குகின்றன. குரங்குகள் வீட்டின் இருபுறமும் தங்களுடைய முகாமை அமைத்துள்ளன. முதல் மாடியில் உள்ள வலைக்குள் ஒரு நபர் காணப்படுகிறார். அவர் லாங்கர்களை விரட்ட முயல்கிறார். ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்தது போல்தான் தெரிகிறது. ஏனெனில் குரங்குகள் மீது அதற்கான எந்த விளைவும் இல்லை.

வீடியோ வைரலாகி வருகிறது

இந்த வீடியோவை இன்ஸ்டாகிரமைல் @u.nagesh353 என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ 2 கோடிக்கும் அதிகமான வியூஸ்களையும் ஏகப்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகளும் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | Lions vs crocodile: ஸ்கெட்ச் போட்டு முதலையை தூக்கிய சிங்கங்கள்! வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News