Thirsty Snake: தண்ணி போடும் பாம்பு! தீராத தாகத்தை தணிக்கும் பாம்பு வீடியோ வைரல்

Water Drinking Snake Video: பாம்பின் தாகம் எவ்வளவு அதிகமாக இருக்கும்? தண்ணிக்கெல்லாம் கணக்கு பாக்காதா ராசா! இன்னும் ஊத்திக்கிட்டே இரு என்று கேட்கும் தாகமான பாம்பு வீடியோ இணையத்தில் வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 18, 2023, 04:46 PM IST
  • தண்ணி போடும் பாம்பு வீடியோ வைரல்
  • இவ்வளவு தாகமா? எவ்வளவு நாளா குடிக்கல?
  • பாம்பின் தாகம் எதுவரை? வைரல் வீடியோ
Thirsty Snake: தண்ணி போடும் பாம்பு! தீராத தாகத்தை தணிக்கும் பாம்பு வீடியோ வைரல் title=

Video: சமூக ஊடகங்களில் ரசிக்கப்படும் வீடியோக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நிறைவையும் தருகின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோக்கள் அனைவரையும் ரசிக்க வைக்கின்றன.அந்த ரசனைக்குரிய வீடியோக்கள் அனைவரையும் நெகிழ வைக்கின்றன. நம்மை ஒரு சில நொடிகளில் மிகப்பெரிய விஷயங்களை எளிதாய் புரிய வைக்கும் வீடியோக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றன. உண்மையில் ஆயிரம் வார்த்தைகள் சொன்னாலும் புரியாத ஒரு விஷயம், பத்து விநாடிகள் மட்டுமே கொண்ட காணொளி புரிய வைத்துவிடுகிறது.

சமூக ஊடகங்களில் வீடியோ 

இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் பலராலும் ரசித்து பார்க்கப்பட்டாலும், அதில் வித்தியாசமான அல்லது அச்சம் கொடுக்கும் வீடியோக்கள் அதிகம் விரும்பப்படுகின்றன. அதிலும் விலங்குகளின் காதல், மோதல், சண்டை என பல்வேறு விதமான வீடியோக்களும் பகிரப்பட்டு அவை வைரல் வீடியோக்கள் என்ற அந்தஸ்தைப் பெறுகின்றன.

அதிலும் அவை பாம்புகளின் வீடியோக்கள் என்றால், அவை லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி வைரலாகின்றன.

மேலும் படிக்க | பாம்புக்கு பால் வைக்கலாம்! தண்ணி வச்சா என்ன ஆகும்? வீடியோ வைரலாகும்?

விலங்குகளின் காதலையும், ஊடலையும் பார்த்து மகிழ வாய்ப்புகளைக் கொடுக்கும் சமூக ஊடகங்களில், வித்தியாசமான வீடியோக்களில் ஒன்று பாம்பு தண்ணீர் குடிக்கும் வீடியோ சமூக ஊடகத்தில் தற்போது வைரலாகிறது. இந்த வீடியோ எப்படி இருக்கிறது? பார்த்துச் சொல்லுங்கள்..

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by (@_goga_ni_daya_)

இந்த வீடியோவைப் பார்த்தால் தண்ணீர் அருந்துவது பாம்புகளுக்கு பிடித்திருக்கிறதா? அல்லது அவற்றின் தாகம் அதிகமானதா என பல கேள்விகள் எழுகின்றன.  

தண்ணீர் குடிக்கும் பாம்பு

விலங்குகளும் தங்கள் இரையை தேடி உண்கின்றன. அவையும் தண்ணீர் குடிக்கும். புலி, மான், யானை என பிற விலங்குகள் தண்ணீர் குடிப்பதை பார்த்திருக்கலாம். ஆனால், பாம்பு தண்ணீர் குடித்து பார்ப்பது என்பது அரிது என்பதாலேயே இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது.

மேலும் படிக்க | நெல்லிக்காயாய் சிதறும் பாம்புகள்! பார்த்தால் வயிற்றைப் பிரட்டும் பாம்பு வீடியோ வைரல்

பாம்புக்கு பால் என்ற சொற்றொடரைக் கேள்விப்பட்டிருக்கலாம்.  ஆடி வெள்ளிகளில் மட்டுமல்ல, பலர், அவ்வப்போது பாம்பு புற்றுக்கு பால் விடுவதை ஒரு சடங்காகவே செய்கின்றனர். பாம்பு பால் குடிக்குமா இல்லையா என்பது தெரியாது. ஆனால்,அது தண்ணீர் குடிக்கும் என்பதை உறுதி செய்யும் இந்த வீடியோவுக்கு லைக்குகள் அள்ளுகின்றன.

அதிலும், எத்தனை நேரம் தொடர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது பாருங்கள்! தலையை நிமிர்ந்து வாயைத் திறந்து நேரடியாக வாயில் விழும் தண்ணீரை தொடர்ந்து குடித்து சாதனை செய்யும் ‘தண்ணிப் பாம்பு’ வீடியோ வைரலாகிறது.

மேலும் படிக்க | உடும்பை கடித்து குதறிய 10 அடி நீள கோப்ரா பாம்பு...வீடியோ வைரல் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News