‘அட... இதக்கூடவா சாப்பிடுவ?’: பொல்லாத பாம்பை காப்பாற்றிய நபர், வைரல் வீடியோ

Snake Rescue Video: பாம்புக்கு ஒரு நபர் செய்யும் உதவியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. பாம்பும் அந்த நபருக்கு ஏற்றவாறு வளைந்துகொடுக்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 10, 2023, 02:36 PM IST
  • இணையவாசிகள் பாம்பு வீடியோக்களை காண்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவதுண்டு.
  • பாம்புகள் கோவமாக தாக்குதல் நடத்துவதையும், குழந்தைகள் பாம்புகளுடன் விளையாடுவதையும் சமூக ஊடகங்களில் நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம்.
  • சில வீடியோக்களில், இரண்டு பாம்புகளுக்கு இடையிலான சண்டையையும் நாம் கண்டுள்ளோம்.
‘அட... இதக்கூடவா சாப்பிடுவ?’: பொல்லாத பாம்பை காப்பாற்றிய நபர், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

இணையவாசிகள் பாம்பு வீடியோக்களை காண்பதற்கு அதிக ஆர்வம் காட்டுவதுண்டு.  பாம்புகள் கோவமாக தாக்குதல் நடத்துவதையும், குழந்தைகள் பாம்புகளுடன் விளையாடுவதையும் சமூக ஊடகங்களில் நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். சில வீடியோக்களில், இரண்டு பாம்புகளுக்கு இடையிலான சண்டையையும் நாம் கண்டுள்ளோம். 

சமீபத்தில் பாம்பின் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், இது சற்று வித்தியாசமானது. இதில் ஒரு பெரிய பிளாஸ்டிக் துண்டை உணவாக நினைத்து பாம்பு விழுங்கிவிடுவதையும், அதன் பிறகு நடக்கும் விஷயங்களையும் காண முடிகின்றது. இந்த வீடியோ மிகவும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளது. 

மேலும் படிக்க | Thirsty Snake: தண்ணி போடும் பாம்பு! தீராத தாகத்தை தணிக்கும் பாம்பு வீடியோ வைரல் 

பாம்பு காப்பாற்றப்படும் வீடியோவை இங்கே காணலாம்: 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Naveen snake (@snake_naveen)

சமீபத்தில் வைரலான இந்த வீடியோவில், ஒரு நபர் ஒரு பாம்பை காப்பாற்றுவதைக் காண முடிகின்றது. பாம்பு எதையோ விழுங்கி விட்டதையும், அதை பாம்பின் வயிற்றிலிருந்து எடுக்க அந்த நபர் முயற்சிப்பதையும் வீடியோவில் காண முடிகின்றது. பல முறை பாம்புகள் தெரியாமல் எதையாவது விழுங்கி விடுகின்றன. அவற்றை ஜீரணிக்க முயற்சிக்கும்போதுதான், அவற்றுக்கு கஷ்டம் ஏற்படுகின்றது. உணவு என்று நினைத்து உட்கொண்ட பொருளை பாம்பு வாந்தி எடுத்து வெளியேற்றுவதை வீடியோவில் காண முடிகின்றது. 

இந்த முயற்சியில் அந்த நபரும் பாம்புக்கு அதிக உதவி செய்கிறார். பாம்பும் மிகவும் முயன்று அந்த பொருளை வெளியே எடுக்கிறது. இவை அனைத்தையும் வீடியோவில் காண முடிகின்றது. 

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் snake_naveen என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோ இதுவரை 3.5 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ்களையும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | குஷியில் கும்மாளமாய் குத்தாட்டம் போடும் இது மயிலா ஒயிலா இல்லை சூப்பர் டான்சரா? 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News