என்ன கொடுமைடா சாமி! காதில் பறையடிக்கும் பேரன்கள்! ‘ஞே’ என முழிக்கும் தாத்தா

Trending Video: சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை விட, வீடியோக்களை பலரும் ரசிக்கின்றனர். குறும்பு, வம்பு மற்றும் சேட்டைகள் செய்யும் வீடியோக்களுக்கு ரசிகரா நீங்கள்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 12, 2023, 05:55 PM IST
  • இந்த காலத்து வாலுப்பசங்க இப்படித் தான்: புலம்பும் பூமர் அங்கிள் கமெண்ட்
  • பேரன்களின் குறும்பு வீடியோ
  • அடித்து பிடித்து எழுந்து ‘ஞே’ என முழிக்கும் தாத்தா
என்ன கொடுமைடா சாமி! காதில் பறையடிக்கும் பேரன்கள்! ‘ஞே’ என முழிக்கும் தாத்தா title=

சமூக வலைத்தளங்களில் பல விதமான வீடியோக்கள் பதிவிடப்பட்டு வைரல் ஆகின்றன. நமது மன அழுத்தத்தையும் டென்ஷனையும் போக்கும் சுவாரசியமான வீடியோக்களை சமூக ஊடகங்களில் பார்த்து, ரசித்து லைக் போட்டு என்பது ஒரு வேலையாகவே மாறிவிட்டது. வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை என சாதாரணமான வீட்டு விலங்குகளின் வீடியோக்கள் முதல், காட்டு விலங்குகளின் சில்லறை காமெடி வரை விலங்குகளின் வீடியோக்கள் வைரலாகின்றன.

அதிலும் குறும்பு, வம்பு மற்றும் சேட்டைகள் செய்யும் வீடியோக்களை பலரும் ரசிக்கின்றனர். அது விலங்குகளின் குறும்புத்தனமாக இருந்தாலும் சரி,  மனிதர்களுடையதாக இருந்தாலும் சரி. அதிலும், குடும்பத்தில் நடக்கும் காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைப்பவை.

அப்படி ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியாகி சக்கைப்போடு போடுகிறது. வைரலாகும் வீடியோவில், குழந்தைகள் செய்யும் குறும்பும், அந்த தாத்தாவின் ரியாக்‌ஷனும் சிரிப்பை வரவழைக்கின்றன. ஆனால், பாவம், தாத்தாவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய குழந்தைகள் வீட்டில் உதை வாங்காமல் இருப்பார்களா?

பெற்றோர் உதைத்தாலும், இதே தாத்தா தான் அடி விழாமல் காப்பாற்றி இருப்பார் என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தக் குழந்தைகளும் சமத்தாக இருப்பது போல நடித்தாலும், மீண்டும் குறும்பு செய்யாமல் இருப்பார்களா என்ன?

மேலும் படிக்க | கொள்ளை அழகு ... மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் முயல் - நாய் குட்டி வீடியோ!

'நேர்மறையான தொடுதல்' மற்றும் 'எதிர்மறை தொடுதல்' என குழந்தைகளுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுப்பது அவர்களின் வாழ்க்கைக்கு நல்லது என்பதுபோல, இந்தக் குழந்தைகள் இப்படி தூங்கும் முதியவரை கொடுமைபப்டுத்துகிறார்களே, இவர்களுக்கு இதைப் பற்றியும் சொல்லிக் கொடுங்கள், இந்த காலத்து குழந்தைகளை அடக்கவே முடியலை என்று புலம்பும் பூமர்களுக்கும் பஞ்சம் இருக்காது.

இப்படி அட்வைஸ் சொல்ல ஆயிரம் பேர் வந்தாலும், சின்ன வயசு, அறியா வயசில இந்த மாதிரி குறும்பு பண்ணாம, நாலு கழுதை வயசானப் பிறகு செய்தா மட்டும் விட்டுடுவீங்களா? என்று கேட்கும் சராசரி மனிதர்களும் இந்த வீடியோவைப் பார்த்து ரசிக்கின்றனர்.

மேலும் படிக்க | என்னை விட்டுட்டு போறியா? புரண்டு அழும் யானைக்குட்டி வீடியோ வைரல்

நாலு பேரு, நாலு கருத்தை சொல்லிக்கிட்டேத் தான் இருப்பாங்க, சமூகம் சுமத்தும் சுமைகளையெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம், உங்களுக்கு தோணுனதை செய்யுங்கல் குட்டீஸ் என்று சொல்பவரா நீங்கள்?  

இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த அழகிய வீடியோவை இதுவரை பல லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர். Buitengebieden @buitengebieden என்ற ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது.

இந்த வீடியோவிற்கு லைக்குகள் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்துள்ளன. இணையவாசிகள் பலரும் இந்த வீடியோவை பகிர்ந்தும், கமெண்ட் செய்தும் வருகின்றனர்.

மேலும் படிக்க | நடுரோட்ல இப்படியுமா பண்ணுவ! வெட்கத்தில் தலை குனியும் இளம்பெண் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News