மகிழ்ச்சியாக கால்பந்து விளையாடும் கன்னியாஸ்திரிகள்! வைரல் வீடியோ!

இத்தாலியில் கன்னியாஸ்திரிகள் கால்பந்து விளையாடும் வீடியோ ஒன்று இணையத்தில் பலரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 23, 2022, 09:58 AM IST
  • கடவுளின் ஊழியர்களாக கருதப்படுபவர்கள் கன்னியாஸ்திரிகள்.
  • இத்தாலி கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வமுள்ள நாடு.
மகிழ்ச்சியாக கால்பந்து விளையாடும் கன்னியாஸ்திரிகள்! வைரல் வீடியோ! title=

பொதுவாகவே இத்தாலி கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வமுள்ள நாடாக கருதப்படுகிறது.  அங்கு ஒரு கன்னியாஸ்திரிகளின் குழு சிறந்த கால்பந்தாட்ட வீரர்கள் போல திறமையாக முழு வீச்சுடன் கால்பந்து ஆடிய வீடியோ இன்று தற்போது இணையவாசிகளை கவர்ந்து வைரலாகி வருகிறது.  கடவுளின் ஊழியர்களாக கருதப்படும் கன்னியாஸ்திரிகள் இவ்வளவு திறமையாக கால்பந்து விளையாடுவது பலரையும் பிரம்மிக்க செய்து இருக்கிறது.

மேலும் படிக்க | சீறி பாய்ந்த காளையிடம் சிக்கிய மனிதர்! வைரலாகும் வீடியோ! 

இந்த வைரல் வீடியோ IG Italia என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  இந்த வீடியோவை யாரோ ஜன்னல் வழியாக எடுத்து இதனை இணையத்தில் பதிவேற்றி இருக்கின்றனர். அந்த வீடியோவில் ஒரு சிறிய கால்பந்தாட்ட மைதானத்தில் இருவர் இருவராக இரண்டு குழுக்கள் பிரிந்து மொத்தமாக நான்கு கன்னியாஸ்திரிகள் விளையாடுகின்றனர்.  நன்கு பயிற்சி பெற்ற வீரர்களை போல இவர்கள் விளையாடுகின்றனர்.  இவர்கள் உற்சாகமாக விளையாடி கொண்டிருக்கும்பொழுது ஒரு கன்னியாஸ்திரி பந்தை எட்டி உதைக்கையில் பந்துக்கு பதிலாக அவர் காலில் அணிந்திருந்த ஷூ பறந்து போயி விழுகிறது, பின்னர் அனைவரும் சிரித்துக்கொண்டு மீண்டும் ஆட்டத்தை தொடர்கின்றனர்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

இந்த வீடியோ இதுவரை 3 மில்லியன் பார்வைகளை கடந்து இருக்கிறது.  மேலும் வீடியோவுடன் "இத்தாலியில் கால்பந்து மிகவும் பிரபலமான விளையாட்டு மட்டுமல்ல, மிகவும் பயிற்சி பெற்ற ஒன்று.  இங்குதான் கடந்த ஆண்டு உலகின் முதல் தேசிய கால்பந்து அணி உருவானது பற்றி யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை" என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.  ஏற்கனவே திருச்சபையின் பாதிரியர்களால் ஐரோப்பிய லீக் தேசிய அணி உருவாக்கப்பட்டது.  ஆண்கள் அணியை போலவே நீண்ட நாட்களாக பெண்கள் அணியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் இத்தாலிக்கு இருந்து வந்தது.

அதன்பின்னர் திறமையான கன்னியாஸ்திரிகளை அடையாளம் கண்டு அவர்களை வைத்து ஒரு கால்பந்தாட்ட அணி உருவாக்கப்பட்டது.  இவர்கள் நவம்பர் இறுதியில் டெஸியோவில் நடைபெற்ற "ஒரு பந்து, ஒரு சிரிப்பு" நிகழ்ச்சியில் பங்கேற்று வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களின் குழுவோடு விளையாடினார்கள்.  தற்போது இந்த வீடியோ பலரையும் கவர்ந்து வைரலாகி வருவதோடு, பலரது நேர்மறையான கமெண்டுகளையும் பெற்று வருகிறது.

மேலும் படிக்க | கிளாஸா மலை ஏறி மாஸ் காட்டிய பாட்டியின் வைரல் வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News