WOW Video: தலைகீழாய் நின்று அம்பு விட்டு சாகசம் செய்யும் அழகி வீடியோ வைரல்

Unbelievable Video Of Sportswoman: சோம்பேறித்தனமாக இருக்கிறதா? குளிராக இருப்பதால் வீட்டில்  முடங்கிக் கிடக்கிறீர்களா? இந்த வீடியோவை பார்த்தால் தானாகவே சுறுசுறுப்பு வந்துவிடும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 13, 2023, 08:18 PM IST
  • வாயைப் பிளக்க வைக்கும் அழகி தலைகீழாக நின்றால்? வைரலாகும் வீடியோ
  • விளையாட்டு வீராங்கனையின் வீடியோ டிரெண்டிங்
  • நடுக்கும் குளிரில் சாகசம் செய்யும் அழகிய வீராங்கனை
WOW Video: தலைகீழாய் நின்று அம்பு விட்டு சாகசம் செய்யும் அழகி வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: விளையாட்டுத்தனமாய் பொழுதுபோக்குவதற்கு இணைய உலகம் மிகவும் உதவியாக இருக்கிறது. தொழில்நுட்ப மேம்பாடு, பல வித அற்புதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வித்தியாசமான உலகமாக இயங்கும் இணைய உலகில் நாம் கற்பனைக்கூட செய்து பார்க்க முடியாத விஷயங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் சமூக ஊடகங்கள் உள்ளன.

அன்றாட வாழ்வில் ஏற்படும் மந்தத்தை சற்று தளர்த்திக்கொள்ள உதவும் வீடியோக்கள்,ந்ம்மை உற்சாகப்படுத்தவும் உதவுகின்றன. விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆனால், வித்தியாசமான எந்த வீடியோவாக இருந்தாலும், அது வெளியானவுடனே சமூக ஊடகங்களில் பலரால் பார்த்து ரசிக்கப்பட்டு, பகிரப்படுகிரது. அதிகம் பார்த்த வீடியோக்கள் வைரலாகின்றன.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் பல வீடியோக்கள் நம்மை சில சமயம் வாய் விட்டு சிரிக்க வைக்கின்றன. ஆனால், விளையாட்டு தொடர்பான வீடியோக்களுக்கு இணையத்தில் தனி மவுசு உள்ளது என்றாலும், அவை குறைவாகவே பகிரப்படுகின்றன.

மேலும் படிக்க | ராட்சத அனகோண்டா பாம்பை கையில் பிடித்த மீனவர்; திகைக்க வைக்கும் வீடியோ

அந்தக் குறையைப் போக்க. தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவும் மிக அழகாக, கியூட்டாக உள்ளது. இணையவாசிகளின் இதயத்தை கவர்ந்துள்ளது இந்த வீடியோ. பார்க்கப் பார்க்க, நம்ப  முடியாமல், தொடர்ந்து மீண்டும் மீண்டும் காணத் தூண்டும் காணொளி இது. நீங்கள் பார்த்து ரசியுங்கள்.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Orissa Kelly (@orissakelly)

வில்வித்தை வீராங்கனை சாதாரணமாக வில்லில் இருந்து அம்புத் தொடுத்தாலே, அதை பார்க்க பலரும் போட்டி போடுவார்கள் என்றால், இந்தப் பெண், வீராங்கனை மட்டுமல்ல, மிகவும் அழகாக, உலக அழகி என்று சொல்வது போல் இருக்கிறார்.

மேலும் படிக்க | ‘ப்ப்பா.. என்னா குஷி!!’: கிஸ் வாங்கிய சிறுவனின் மாஸ் ரியாக்‌ஷன், வைரல் வீடியோ

அதிலும் இந்த அழகான பெண், அம்பை எய்யாவிட்டாலே, அவரை பார்த்ததுமே அனைவரும் அழகிய அம்பால் தைக்கப்பட்டு சரணாகதி ஆகிவிடுவார்கள் என்று சொல்லலாம். ஆனால், வில்வித்தை வீராங்கனையோ, ‘என் அழகெல்லாம் ஒரு மேட்டரே இல்ல, திறமையப் பாருங்கப்பா’ என்று சொல்வது போல, பனி சூழ்ந்த இடத்தில் தனியாக நின்று அம்பு விடுகிறார்.

அதிலும் அம்பை சாதாரணமாகவா விடுகிறார்? தலைகீழாக நின்று, கால் மூலம் அம்புத் தொடுக்கும் இந்தப் பெண்ணின் திறமையும் சாகசமும், ஆச்சரியம் மட்டுமல்ல, அற்புதமான ஒன்றாக இருக்கிறது.

கையில் வில் வைத்து அம்பு தொடுத்தாலே, இந்த குளிரில் கை விறைத்துப் போய் செயல்படாது என்றால், தலைகீழாக நின்று, அம்பில் நெருப்பை பற்ற வைத்து அம்பெய்யும் பெண்ணின் திறமை, அனைவரையும் வாயடைக்க வைக்கிறது.

மேலும் படிக்க | ஒரே வீட்டில் வளரும் அணில் மற்றும் ஆமை! வைரல் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News