நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட யானை! இணையத்தை கலக்கும் வீடியோ!

அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று இசைக்கு ஏற்றவாறு கால்களை பிண்ணி அசத்தலாக நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சர்யமடைய செய்திருக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 11, 2022, 10:03 AM IST
  • ரோட்டில் நடனம் ஆடிய யானை.
  • பாட்டுக்கு ஏற்றவாறு நடனம் ஆடி அசத்தியது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
நடுரோட்டில் குத்தாட்டம் போட்ட யானை! இணையத்தை கலக்கும் வீடியோ! title=

கல்யாணம், காதுகுத்து போன்ற ஊர்வலங்களில் சிலர் நன்கு அலங்கரிக்கப்பட்ட யானைகள் அல்லது அலங்கரிக்கப்பட்ட குதிரைகளை வைத்து நடனமாட செய்வதை நாம் பார்த்திருப்போம்.  ஆனால் நாம் பார்த்த வரையில் அவை சிறிய நடன அசைவுகளை மட்டுமே தான் செய்யும், ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் யானை ஒன்று மனிதர்கள் நடனமாடுவதை போன்று கால்களை பிண்ணிக்கொண்டு நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.  விலங்கு பிரியர்களை நிச்சயமாக இந்த யானையின் நடன வீடியோ கவரும் வகையில் இருக்கும், ஒருபுறம் இணையவாசிகள் யானையின் நடனத்தை பாராட்டி ஆர்வமாக பார்த்து வரும் நிலையில், மறுபுறம் சில இணையவாசிகள் விலங்குகளை இப்படி சாலையில் நடனமாட வைப்பது மிகவும் தவறான ஒன்று என்று கூறிவருகின்றனர்.

மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 

விலங்குகளை சுதந்திரமாக இருக்க விட வேண்டும், அவற்றை இப்படி பிடித்து வைத்து கொடுமை செய்யக்கூடாது என்று பெரும்பாலான இணையவாசிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.  யானையின் அட்டகாசமான நடன வீடியோவானது இன்ஸ்டாகிராமில் இந்தியா டுடே என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, அந்த வீடியோவில் யானை சிவப்பு மற்றும் தங்க நிற ஜரிகை கொண்ட ஆடையால் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது.  அங்கு இசைவாத்தியம் இசைக்க, அருகில் யானைப்பாகனின் வழிகாட்டுதல்படி அந்த யானை அழகாக சாலையில் நடனமாடுகிறது, இந்த காட்சி அங்கு சூழ்ந்திருந்த மக்களை ரசிக்க செய்திருக்கிறது.

 

இணையத்தில் இந்த வீடியோவை பார்த்ததிலிருந்து சில மக்கள் யானையை பாராட்டியும், சில மக்கள் யானையின் நிலைமையை கண்டு வருத்தப்பட்டு வருகின்றனர்.  இதுவரை இந்த வீடியோவிற்கு நாற்பத்தியிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளை குவித்துள்ளது.

மேலும் படிக்க | அழகாய் கொஞ்சி ஆசையாய் கிஸ் செய்த லங்கூர் குரங்கு: ஷாக் ஆன பெண், வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News