அழகாய் கொஞ்சி ஆசையாய் கிஸ் செய்த லங்கூர் குரங்கு: ஷாக் ஆன பெண், வைரல் வீடியோ

Viral Monkey Video: சிரிப்பை நிறுத்தவே முடியாத அளவுக்கு இந்த வீடியோ வேடிக்கையாக உள்ளது. இணையவாசிகளும் இதை இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்த்து அதிகம் ரசித்துள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 10, 2022, 02:50 PM IST
  • ஒரு குரங்கின் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.
  • இந்த வீடியோ ஒரு பெண் மற்றும் ஒரு லங்கூர் தொடர்பானது.
அழகாய் கொஞ்சி ஆசையாய் கிஸ் செய்த லங்கூர் குரங்கு: ஷாக் ஆன பெண், வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதிலும் குரங்குகளின் வீடியோக்கள் என்றால் கேட்கவே வேண்டாம். குரங்குகள் இந்த கிரகத்தின் மிகவும் புத்திசாலித்தனமான விலங்குகளில் ஒன்றாகும். குரங்கிலிருந்து மனிதர்களாகிய நாம் வந்தோம். குரங்குகள் பல சமயம் மனிதர்களைப் போலவே செயல்படுவதை பார்த்துள்ளோம். மனிதர்கள் செய்யும் பல வேலைகளை பார்த்து குரங்குகளும் அப்படியே காப்பி அடிக்கின்றன. 

அப்படிப்பட்ட ஒரு குரங்கின் வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் உங்களால் சிரிக்காமல் இருக்க முடியாது. இந்த வீடியோ ஒரு பெண் மற்றும் ஒரு லங்கூர் தொடர்பானது. இதில் பெண்ணும் ஒரு பெரிய குரங்கும், ஒரு சிறிய குரங்கும் அருகருகே அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. அப்போது திடீரென நாம் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு விஷயம் நடக்கின்றது. சிரிப்பை நிறுத்தவே முடியாத அளவுக்கு இந்த வீடியோ வேடிக்கையாக உள்ளது. இணையவாசிகளும் இதை இதுவரை ஆயிரக்கணக்கான முறை பார்த்து அதிகம் ரசித்துள்ளனர்.

திடீரென்று கிஸ் செய்த குரங்கு 

சில நொடிகளே கொண்ட இந்த வீடியோவில், ஒரு லாங்கூரும் அதன் குட்டியும் ஒரு கல்லின் மீது அமர்ந்திருப்பதைக் காண முடிகின்றது. லங்கூர்களுக்கு அருகில் ஒரு பெண்ணும் இருக்கிறார். அந்த பெண் குரங்குகளுக்கு எதையோ சாப்பிட கொடுப்பது போல தெரிகிறது. லங்கூர்களும் அதை மகிழ்ச்சியாக சாப்பிடுகின்றன. 

மேலும் படிக்க | போனுக்கு செம சண்டை போடும் குழந்தையும் குரங்கும்: நெட்டிசன்களை சிரிக்க வைத்த வைரல் வீடியோ 

ஆனால், திடீரென லங்கூரின் குட்டி அதிர்ச்சியளிக்கும் செயல் ஒன்றை செய்கிறது. அந்த பெண் லங்கூர் குட்டியுடன் விளையாடுகிறார். அந்த பெண்ணின் முகத்தை மிகவும் ஆசையாக தடவிக்கொடுக்கும் குட்டி, திடீரென பெண்ணுக்கு முத்தமிடுகிறது. இதை அந்த பெண் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்படுகிறது. அதிர்ச்சியில் அவர் உடனடியாக பின்வாங்கினார். 

கிஸ் அடித்த கில்லாடி குரங்கின் வீடியோவை இங்கே காணலாம்: 

 

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் ashiq.bilota என்ற பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித வேடிக்கையான கமெண்டுகளையும் அளித்து வருகின்றனர். 

மேலும் படிக்க | தாகத்தில் தவித்த குரங்குகள், தண்ணி கொடுத்து உதவிய நபர்: உருகும் நெட்டிசன்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News