சீனாவின் பண்டைய நகரமான டன்ஹுவாங்கில் பிரம்மாண்டமான மணல் புயல் சூழ்ந்துள்ளது. அருகிலுள்ள கோபி பாலைவனத்திலிருந்து மணல் புயல் வீசியது.
இதனால் மிகவும் ஆபத்தான நிலைமைகள் ஏற்பட்டது. எனவே வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டது. முக்கிய சாலைகள் மூடப்பட்டன. டிவிட்டரில் ஒருவர் பகிர்ந்த மணல் புயல் வீடியோ வைரலாகிறது.
பாரம்பரிய சிறப்பு மிக்க சீன நகரமான டன்ஹுவாங் மீது 300 அடி உயரத்துக்கு மணற்புயல் வீசியது. இதனால் அந்த நகரம் முழுவதும் தூசி மண்டலாக காணப்படுகிறது. 20 அடிக்கும் குறைவாகவே புலப்பாடு இருக்கிறது. இது வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.
Sandstorm today, #Dunhuang #沙尘暴 #敦煌 pic.twitter.com/XDpyhlW0PV
— Neil Schmid 史瀚文 (@DNeilSchmid) July 25, 2021
ஜூலை 25ம் தேதி பிற்பகல் 3 மணியளவில் இந்த மாபெரும் மணல் புயல் தாக்கியதில், நகரமே தூசிமண்டலாக காட்சியளிக்கிறது. சாலைகள் மூடப்பட்டதால், நகரமும் வெறிச்சோடி காணப்படுகிறது.
புயலால் வாகனங்கள் அடித்துச் சென்று விபத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால், அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் எதுவும் செல்லவேண்டாம் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்த நகரின் அருகில் புகழ்பெற்ற கோபி பாலைவனம் அமைந்துள்ளது. அங்கிருந்து வீசும் மணல் புயல் ஆபத்தான நிலைமைகளை உருவாக்கியுள்ளது.
Also Read | Adorable Video: குதூகலமாக சேற்றில் கும்மாளம் போடும் குட்டி யானைகள்
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான மொகாவோ க்ரோட்டோஸின் (Mogao Grottoes, a Unesco World Heritage) தாயகம் டன்ஹுவாங் நகரம் ஆகும், இது கோபி பாலைவனத்தில் அமைந்துள்ளது. இந்த நகரம் அதன் கடுமையான காலநிலை மற்றும் சிக்கலான வாழ்க்கை நிலைமைகளுக்கு பெயர் பெற்றது.
தற்போது மணல் சுவரைப் போல் வானை தொட்டு எழும் மணல் புயல் அங்கிருக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது.
Also Read | Elephant Viral Video: சிங்கத்தின் கர்ஜனை விட நடுங்க வைத்த யானை பிளிறும் சத்தம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR