Elephant Viral Video: சிங்கத்தின் கர்ஜனை விட நடுங்க வைத்த யானை பிளிறும் சத்தம்

Elephant Viral Video: யானை பிளிறும் சத்தம் ஆத்மாவை நடுங்க வைக்கக்கூடும். வீடியோவில் 5 முதல் 6 யானைகள் காணப்படுகின்றன. அவைகள் ஏதோ ஒரு உற்சாகத்தில் ஒன்றாகக் கூச்சலிடுவது போல் தெரிகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 26, 2021, 05:21 PM IST
  • யானை பிளிறும் சத்தம் ஆத்மாவை நடுங்க வைக்கக்கூடும்.
  • யானைகளின் மிகவும் சுவாரஸ்யமான வீடியோவை ஐ.எஃப்.எஸ் சுசாந்த் நந்தா பகிர்ந்துள்ளார்.
  • இந்த வீடியோவை ஒருவருக்கொருவர் பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர்.
Elephant Viral Video: சிங்கத்தின் கர்ஜனை விட நடுங்க வைத்த யானை பிளிறும் சத்தம் title=

Elephant Viral Video: சமூக ஊடகங்களில் மில்லியன் கணக்கான படங்கள் மற்றும் விலங்குகளின் வீடியோக்கள் உள்ளன. வனவிலங்கு மீது ஆர்வமுள்ளவர்கள் விலங்குகளை குறித்து அழகான புகைப்படம் மற்றும் அற்புதமான வீடியோவை எடுக்க பல மணிநேரம் செலவிடுகிறார்கள். சிங்கத்தின் கர்ஜனை கேட்டல் காட்டில் உள்ள எல்லா விலங்குகளும் நடுங்கும் என்று கூறப்படுவதை கேட்டிருப்பீர்கள். ஆனால் யானையின் நடுக்க வைக்கும் சத்தத்தை நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? தற்போது ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ மிகவும் பிரமாண்டமானது, அதைப் பார்த்தால் ஒருகணம் நீங்களே அச்சப்படுவீர்கள். 

யானை பிளிறும் சத்தம் ஆத்மாவை நடுங்க வைக்கக்கூடும். வீடியோவில் 5 முதல் 6 யானைகள் காணப்படுகின்றன. அவைகள் ஏதோ ஒரு உற்சாகத்தில் ஒன்றாகக் கூச்சலிடுவது போல் தெரிகிறது.

யானைகளின் மிகவும் சுவாரஸ்யமான வீடியோவை ஐ.எஃப்.எஸ் சுசாந்த் நந்தா தனது ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளார். அதில் "யானைகளை நேசிப்பவர்களுக்கான இந்த சிறப்பு வீடியோ" எனப்பதிவிட்டுள்ளார். 

 

இந்த வீடியோவை பலர் பார்த்துள்ளனர். அதை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்வது மட்டுமல்லாமல், பல்வேறு வகையான கருத்துகளையும் எதிர்வினைகளையும் தெரிவித்து வருகின்றனர். 

ALSO READ | தெருக்களில் ஊர்ந்து சென்ற முதலையால் மக்கள் பீதி -Video

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News