பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை?

Viral Video Of Tigher Hunt: பசி கொண்ட புலியின் பாய்ச்சலுக்கு முன்னால் தோகை விரித்தாடி அழகு காட்டினாலும் எடுபடாது! திடுக்கிடும் புலியின் தாக்குதல் வீடியோ இணையத்தில் வைரலாகிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 16, 2022, 08:43 PM IST
  • புலியின் முரட்டு தாக்குதல் வீடியோ வைரல்
  • திட்டமிட்டு தாக்குதல் நடத்தும் புலி
  • கடைசி நிமிடத்திலும் சாதுர்யமாக தப்பிக்கும் மயில்கள்
பதுங்கிப் பாயும் புலி! கடைசி நிமிடத்தில் எஸ்கேப் ஆன தோகைமயில்! பெண் மயில்களின் நிலை? title=

வைரல் வீடியோ:  பசி கொண்ட புலியின் பாய்ச்சலுக்கு முன்னால் தோகை விரித்தாடி அழகு காட்டினாலும் எடுபடாது! திடுக்கிடும் புலியின் தாக்குதல் வீடியோ இணையத்தில் வைரலாகிறது. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் ஆடல் பாடல், சண்டை, மோதல் என பல்சுவையூட்டும் விஷயங்கள் உள்ளன. அண்மையில் வைரலாகும் வீடியோக்களில் விலங்குகள் தொடர்பானவை அதிகம் விரும்பப்படுகின்றன. புலியின் வெறித்தனமான தாக்குதலையும் பார்த்திருக்கலாம், பாம்பால் வேட்டையாடப்படும் முதலையையும் பார்த்திருக்கலாம். ஆனால், தற்போது புலியின் பாய்ச்சல் தாக்குதல் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. புலியின் தாக்குதலுக்கு அழகிய விலங்கு இரையானதா?

அழகிய மயில்கள் ஆனந்தமாய் தோகை விரித்து ஆட, பெண் மயில்கள் சாவகாசமாய் உலா வர என அற்புதமான தருணத்தை ஒரே நொடியில் மாற்றிய புலியின் வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அந்த வைரல் வீடியோ இது...

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு புலி, வனத்தில் மேய்ந்துக் கொண்டிருக்கும் மயில் கூட்டத்தை இலக்கு வைத்து தாக்குதல் நடத்துகிறது. ஆனால் நொடியில் சுதாரித்துக் கொண்டு பறந்த மயில்களின் நிலை என்னவானது என்பதை வீடியோவில் பார்க்க முடியவில்லை.

மேலும் படிக்க | தாத்தா ஆடும் ஆட்டம், பாத்தா ஆடிப்போயிடுவீங்க: கிரிக்கெட் தாத்தாவின் வைரல் வீடியோ

காட்டு வாழ்க்கை என்பது எப்போதுமே ஆபத்தானது, ஒரு நொடி ஆனந்தம், மறு நோடியே மரணம் என்பது வன வாழ்க்கையில் சகஜமானது என்றாலும், பார்க்கும் நமக்கு பதைபதைக்கிறது. பிளான் பண்ணி தாக்குதல் நடத்துவது புலியின் சாமர்த்தியம் என்றால், கண்ணிமைக்கும் பொழுதில் சிட்டாய் பறப்பது பறவைகளின் இயல்பான குணம் என்பதை உணர்த்தும் வீடியோ இது.

துள்ளி குதித்தாலும் புலியின் தாக்குதலுக்கு பலியாகும் வாய்ப்புகளும் அதிகம் என்பதால், மயில்களின் நிலையை எண்ணினால் கவலையாக இருக்கிறது. சண்டையில் கிழியாத சட்டை உண்டா என அசால்டாக இன்ஸ்டா பயனர் கருத்து தெரிவிக்கிறார். அவர் அடிக்கடி இதுபோன்ற தாக்குதல் வீடியோக்களை பார்த்திருப்பார் போலும்.

மேலும் படிக்க | காதலியை கரெக்ட் பண்ண நடுரோட்டில் காதலன் செய்த செயல்: வீடியோ வைரல் 

எது எப்படியிருந்தாலும், விலங்குகளைப் பார்த்தால் ஏற்படும் அச்சம் மட்டும் யாருக்கும் குறைவதில்லை. அதிலும், அச்சப்பட வைக்கும் புலியை லாவகமாக கையாளும் புத்திசாலித்தனமும் விலங்குகளிடம் உள்ளது என்பதும் நிதர்சனமான உண்மை தானே? 

பிரச்சனையை எப்படி இறுதி நொடியிலும் கையாள்வது என்பதை கற்றுக் கொடுக்கும் வீடியோ இது என்றாலும், பதுங்கிப் பாயும் புலியின் கண்ணில் உள்ள தீவிரம், எந்தவொரு விஷயத்திலும் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று கூறுகிறது. உண்மையில் பிரச்சனையை கையாள்வதும், திட்டமிட்டு செயல்படுவதையும் ஒரே வீடியோ கற்றுக் கொடுக்கிறது. 

மேலும் படிக்க | சீறி சினந்து முட்டி மோதும் காளைகள்! கொம்பு சீவி விட்டது யாரோ?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News