BULL FIGHT: சீறி சினந்து முட்டி மோதும் காளைகள்! கொம்பு சீவி விட்டது யாரோ?

Trending Bulls Fight Video: கோபம் வந்தால் கண்ணும் தெரியாது மண்ணும் தெரியாது என்று சொல்வதை நிரூபிக்கும் காளை மாடுகளின் வீடியோ வைரலாகிறது.  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 15, 2022, 04:23 PM IST
  • தெருவையே போர்க்களமாக்கும் மாடுகள்
  • மாடுகளின் வைரல் வீடியோ
  • வீதியையே காலியாக்கும் காளை மாடுகளின் சண்டை
BULL FIGHT: சீறி சினந்து முட்டி மோதும் காளைகள்! கொம்பு சீவி விட்டது யாரோ? title=

வைரல் வீடியோ: சமூக வலைதளங்களில் பல வித்தியாசமான விஷயங்கள் பதிவிடப்படுகின்றன. ஆடல் பாடல், சண்டை, காதல், விலங்குகள் என சமூக ஊடகங்களில் பல்வேறு வீடியோக்களும், புகைப்படங்களும் விரும்பி ரசிக்கப்பட்டு, வைரலாகின்றன. அதில் அண்மையில் வைரலாகும் வீடியோக்கள் விலங்குகளின் மோதலாக இருக்கிறது. பாம்பு சண்டை, பாம்பு கீரி சண்டை, யானை சண்டை, குதிரைகளின் மோதல், கழுகின் தாக்குதல், முதலையின் வெறித்தனமான தாக்குதல் என சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோக்கள் பலவிதமாக இருக்கின்றன. அந்த வரிசையில் சேர்ந்து விட்டது தெருரில் சண்டை போடும் காளை மாடுகளின் மோதல் வீடியோ.  

இந்த வீடியோ, சமூக ஊடகங்களில் வைரலாவதற்குக் காரணம் என்ன? இதற்கான பதிலை சொல்வது கடினமானது என்றாலும், மக்களின் விருப்பமாக இருப்பது சண்டை வீடியோக்கள் என்பதை மறுக்க முடியாது. தெருரில் இரண்டு காளை மாடுகள் தங்கள் கொம்புகளை மோதிக் கொண்டு விடைத்துக் கொண்டு நிற்பதுடன் தொடங்கும் வீடியோ, ஒன்றையொன்று கொம்புகளால் மோதி ஆக்ரோஷமாக சண்டையிடுவதைக் காட்டுகிறது.

சமூக ஊடகங்களின் பட்டையை கிளப்பும் சண்டை

இந்த வீடியோ பல்வேறு தளங்களில் லட்சக்கணக்கான கோடிக்கணக்கான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் காளைகளின் ஆக்ரோஷத்தைப் பார்த்து, அங்கிருக்கும் மக்கள் தெறித்து ஓடுகின்றனர். இந்த வீடியோவுக்கு இணையவாசிகள் பல வித கமெண்டுக்ளை அளித்து வருகின்றனர்.

மாடுகள் இரண்டும் சண்டை போட்டுக் கொண்டே அங்கிருக்கும் வாகனங்கள் மீது விழுவதும், அதன் அருகில் நிற்பவர்கள் கீழே விழ அவர்கள் மீது இரு சக்கர வாகனங்கள் விழுவதுமென அந்த இடமே போர்க்களமாகிறது.

மேலும் படிக்க | காதலியை கரெக்ட் பண்ண நடுரோட்டில் காதலன் செய்த செயல்: வீடியோ வைரல் 

வீதியில் நிற்கும் மக்கள், பரபரப்பான கடைத் தெருவில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் என எதுவுமே கோபக்கார காளைகளுக்கு கண்ணுக்கு தெரியவில்லை. இந்த சண்டையை பார்த்து பலரும் நகர்ந்து போகின்றனர். சீறும் காளை, இவ்வளவு ஆக்ரோஷமாக இருக்குமா என்று ஒருவர் சொன்னால், சண்டையில கிழியாத சட்டை உண்டா என்று ஒருவர் கலாய்க்கிறார்.

ஒரு பயனர், 'மிக ஆக்ரோஷமான வீடியோ' என்று கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவர், எனக்குக்கூட இப்படி கோபம் வரதே? அப்படி என்ன இந்த காளைகளுக்குள் பிரச்சனை? பங்காளி சண்டையா இல்லை பகையாளி சண்டையா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த சண்டை வீடியோவை பலரும் பார்த்து ரசித்து, பகிர்ந்து வைரலாக்குக்கின்றனர்.

மேலும் படிக்க | தாத்தா ஆடும் ஆட்டம், பாத்தா ஆடிப்போயிடுவீங்க: கிரிக்கெட் தாத்தாவின் வைரல் வீடியோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News