தாத்தா ஆடும் ஆட்டம், பாத்தா ஆடிப்போயிடுவீங்க: கிரிக்கெட் தாத்தாவின் வைரல் வீடியோ

Funny Viral Video: மாஸாக கிரிக்கெட் விளையாடும் ஒரு முதியவரின் வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது. இணையவாசிகள் இதை வாய் பிளந்து பார்த்து வருகிறார்கள். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Sep 14, 2022, 05:23 PM IST
  • ஒரு கிரிக்கெட் போட்டியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது.
  • இந்த வீடியோவை பார்க்க பார்க்க மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது.
  • இந்த வீடியோவில் உள்ள சிறப்பம்சமே இதில் வரும் வீரர்தான்.
தாத்தா ஆடும் ஆட்டம், பாத்தா ஆடிப்போயிடுவீங்க: கிரிக்கெட் தாத்தாவின் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: பல விதமான வேடிக்கையான மற்றும் வித்தியாசமான வீடியோக்களின் தளமாக இணையதளம் விளங்குகிறது. இங்கு நாம் பல வித சுவாரசியமான வீடியோக்களை காண்கிறோம். பொதுவாக நாம் காண முடியாத பல விசித்திர காட்சிகளும் நிகழ்வுகளும் இவற்றில் நமக்கு காணக்கிடைக்கின்றன. இவற்றில் பல வீடியோக்கள் நம் வாயில் புன்னகையை வரவழைக்கத் தவறுவதில்லை. இவற்றின் மூலம் நாம் நமது மனதின் இறுக்கங்களை மறந்து சிரிக்கிறோம், சிந்திக்கிறோம். அப்படி ஒரு வீடியோ பற்றி இந்த பதிவில் காணலாம்.

கிரிக்கெட் நமது நாட்டில் மிக பிரபலமான, அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு விளையாட்டாகும். நமது நாட்டின் ஒவ்வொரு தெருவிலும் கிரிக்கெட் விளையாடப்படுகின்றது. சர்வதேச கிரிக்கெட்டை பார்க்கும்போது கிடைக்கும் அதே ஃபீலிங்க், இந்த உள்ளூர் மற்றும் லோக்கல் கிரிக்கெட் போட்டிகளிலும் கிடைக்கின்றன. ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் வீரர்களுக்கு இருக்கும் ரூல்ஸ் மற்றும் வயது வரம்பு எல்லாம் உள்ளூர் கிரிக்கெட்டில் கிடையாது. போட்டி நடக்கும் இடத்தில் வைப்பது தான் சட்டம், ரூல்ஸ் எல்லாமே.  

அப்படி ஒரு கிரிக்கெட் போட்டியின் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பார்க்க பார்க்க மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றுகிறது. இந்த வீடியோவில் உள்ள சிறப்பம்சமே இதில் வரும் வீரர்தான். ஒரு முதியவர் படு மாஸாக கிரிக்கெட் விளையாடுவதை இதில் காண முடிகின்றது. இந்த வீடியோ பார்க்க மிகவும் வேடிக்கையாக உள்ளது. ஷாட் அடிப்பது மட்டுமல்லாமல் முதியவர் ரன் எடுப்பதிலும் பட்டையை கிளப்புகிறார். 

மேலும் படிக்க | ‘என்னையா சீண்டின? இந்தா பிடி’: பாம்பிடம் பிலிம் காட்டி பல்பு வாங்கிய இளைஞனின் வைரல் வீடியோ 

சூப்பர் ஷாட் அடித்த முதியவர் 

வீடியோவை பார்த்தால், இந்த கிரிக்கெட் பந்தயம் ஒரு கிராமத்தில் நடப்பதை போல தோன்றுகிறது. குர்தா சட்டை அணிந்தபடி, முதியவர் தனது மட்டையை பிடித்துக்கொண்டு களத்தில் இறங்குவதை இந்த வீடியோவில் காண முடிகிறது. மரம் தான் ஸ்டம்பாக இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. முதியவரை நோக்கி பந்து போடப்படுகின்றது. பந்தை எதிர்கொண்ட முதியவர், சூப்பரான ஷாட் அடித்து ரன் எடுக்கத் தொடங்குகிறார். எளிமையான முறையில் ரன் எடுப்பது மட்டுமின்றி, துள்ளி குதித்து குதூகலமாகவும் விளையாடுகிறார். 

தாத்தாவின் மாஸ் விளையாட்டை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Bhutni_ke (@bhutni_ke_memes)

சிரிப்பை நிறுத்த முடியாது

இந்த வீடியோவில் முதியவர் கிரிக்கெட் ஆடும் விதம் பார்ப்பவர்கள் அனைவரையும் கண்டிப்பாக சிரிக்க வைக்கும். சில வினாடிகள் கொண்ட இந்த வீடியோ சற்று பழைய வீடியோ ஆகும். இருப்பினும் இது தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாக வலம் வந்துகொண்டிருக்கின்றது. 

இந்த வீடியோ bhutni_ke_memes என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இது ஆயிரக்கணக்கான வியூஸ்களையும் லைக்குகளையும் பெற்றுள்ளது. தாத்தா இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்த வயதில் முதியவருக்கு இருக்கும் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் பார்த்து இணையவாசிகள் வியந்து பாராட்டுகிறார்கள். இதற்கு ஏகப்பட்ட லைக்குகளையும் அளித்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | Viral Video: மச்சினிக்கு மாலையிட்ட மாப்பிள்ளை; மணமகனின் வீரதீர செயல்! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News