பறவையை கொன்று முழுசா விழுங்கிய 20 அடி மலைப்பாம்பு: வீடியோ வைரல்

Dangerous Python Swallows Bird: மலைப்பாம்பு ஒன்று பறவை ஒன்றை மெதுவாக பிளான் செய்து வேட்டையாடி விழுங்கிவதை வீடியோ இணையவாசிகளை மிரள வைத்துள்ளது. இது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.  

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 11, 2023, 04:11 PM IST
  • இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும்.
  • இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம்.
  • இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
பறவையை கொன்று முழுசா விழுங்கிய 20 அடி மலைப்பாம்பு: வீடியோ வைரல் title=

மலைப்பாம்பின் வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான உலகமாகும். இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை காண்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென தனி மவுசு. விலங்குகளின் வைரல் வீடியோவை காண தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் சுவாரஸ்யமான இணைய உலகத்தில் சமீப காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பட்டையை கிளப்பி வருகின்றன. சமூக ஊடக உலகில், ஒவ்வொரு நாளும் விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் பாம்பு வீடியோவுக்கு அதிகளவு மவுசு உள்ளது. அந்தவகையில் தற்போது வெளிவந்துள்ள காணொளி முற்றிலும் மாறுபட்டது. இந்த வீடியோ 20 அடி மலைப்பாம்பை தொடர்புடையது.

மேலும் படிக்க | அழகு!! சும்மா சூப்பரா எண்ட்ரி கொடுத்த மணமகள்: பாராட்டும் நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

இந்த வீடியோவில், 20 அடி மலைப்பாம்பு ஒன்று தனது இரையை தேடி காட்டில் அலைவதை நாம் காணலாம். அப்போது அங்கு ஒரு சிறிய பறவை ஒன்று இருப்பதை அந்த பாம்பு உணர்கிறது. பின்னர் அதை வேட்டையாட மெதுவாக அந்த பாம்பு ஊர்ந்து செல்கிறது. அந்த பறவையின் பக்க சென்றடைந்த மலைப்பாம்பு ஒரே நொடியில் அதை பின்னிப் பிணைந்து கொன்று முழுசாக அதை விழுங்கிவிடுகிறது. 

திகிலூட்டும் வீடியோவை இங்கே காணுங்கள்: 

இந்த வீடியோ ojatro என்கிற யூட்யூப் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஆயிரக்கணக்கான வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. மேலும் இந்த பார்த்து அதிர்ந்து போன இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

(இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | Monkey vs Leopard: சினிமாவை மிஞ்சும் ‘சேஸ்’ காட்சிகள், காட்டில் நடக்கும் களேபரத்தின் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News