குத்தாட்டம் போட்ட மணமகன், வெட்கம் விலகி ஆடிய மணமகள்: பட்டையை கிளப்பும் வைரல் வீடியோ

Funny Wedding Dance Video: ஒரு திருமணத்தில் மணமக்கள் ஆடிய டான்சின் வீடியோ இணையத்தில் பட்டையை கிளப்பி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 15, 2023, 12:34 PM IST
  • இந்த வீடியோவில் மணமேடையில் மணமக்களும் இன்னும் சில உறவினர்களும் நிற்பதை காண முடிகின்றது.
  • திருமண சடங்குகள் நிறைவடைந்து அனைவரும் மகிழ்சியுடன் காணப்படுகிறார்கள்.
  • அப்போது மணமகன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நடனமாடத் தொடங்குகிறார்.
குத்தாட்டம் போட்ட மணமகன், வெட்கம் விலகி ஆடிய மணமகள்: பட்டையை கிளப்பும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் திருமண வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

நம் நாட்டில் திருமணங்கள் திருவிழாக்களை போல கொண்டாடப்படுகின்றன. திருமணம் என்றாலே மகிழ்ச்சி, கோலாகலம் தான். இது மணமக்களின் வாழ்வில் மிக முக்கியமான தருணமாக இருப்பதோடு மட்டுமல்லாமல், இரு குடும்பங்களின் சங்கமமாகவும் உள்ளது. பல உறவுகளும் நட்புகளும் சேர்ந்து மகிழ்ந்து அனுபவிக்கும் கோலாகலமான கொண்டாட்டமாக இது இருக்கின்றது. 

சமூக ஊடகங்களில் பல திருமண வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம். இவை அனைத்தும் பல வகைகளில் வித்தியாசமாக இருக்கின்றன. மணமக்களுக்கு இடையில் இருக்கும் காதல், பாசம், கோவம், திருமணம் தொடர்பான உற்சாகம் என அனைத்தையும் இவற்றில் காண்கிறோம். இவை தவிர மணமக்களின் உறவினர்களும் நண்பர்களும் திருமணங்களில் அடிக்கும் லூட்டிக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது. தற்போது இணையத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவும் மிகவும் வித்தியாசமாக உள்ளது. 

இன்றைய காலத்தில் மணமக்களே தங்கள் திருமணங்களில் அசத்தகான நடன நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். தற்போது பகிரப்பட்டுள்ள வீடியோவிலும் அப்படி ஒரு நடனத்தை தான் பார்க்கிறோம். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் மணமகனும், மணமகளும் மேடையில் நடனமடுக்றார்கள். மாலை மாற்றும் சடங்கு முடிந்தவுடன் மணமக்கள் மேடையில் ஆடத் தொடங்குவதை காண முடிகின்றது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவ ஆரம்பித்துள்ளது. இதனுடன் நெட்டிசன்களின் சுவாரசியமான ரியாக்ஷன்களும் இதற்கு கிடைத்து வருகின்றன. 

மேலும் படிக்க | தூக்கத்தெல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது: மாஸ் மணமகள்.. வைரல் வீடியோ

மணமக்கள் நடனம்

இந்த வீடியோவில் மணமேடையில் மணமக்களும் இன்னும் சில உறவினர்களும் நிற்பதை காண முடிகின்றது. திருமண சடங்குகள் நிறைவடைந்து அனைவரும் மகிழ்சியுடன் காணப்படுகிறார்கள். அப்போது மணமகன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நடனமாடத் தொடங்குகிறார். அவரை பார்த்த மணமகளாலும் தனது உற்சாகத்தை அடக்க முடியவில்லை. அவரும் மணமகனின் குத்தாட்டத்திற்கு ஈடு கொடுத்து ஆடத் தொடங்குகிறார். தன் புது மனைவி தன்னுடன் ஆடுவதால் மணமகனின் உற்சாகம் இன்னும் அதிகரிக்கின்றது. மறுபுறம், அவர்களின் நடனத்தைப் பார்த்து, உறவினர்கள் ரூபாய் நோட்டுகளை வீசத் தொடங்குகிறார்கள்.

நடனத்திற்கு கிடைத்த கைதட்டல்கள்

மணமக்களின் அட்டகாசமான நடனத்தை பார்த்து திருமண அரங்கில் கைதட்டல் எழும்பியது. மணமகன் மற்றும் மணமகளின் நண்பர்களும் உறவினர்களும் அவர்களது இந்த ஆட்டத்தை ரசித்ததோடு பாராட்டுகளையும் வாரி வழங்கினார்கள். இந்த வீடியோவில் மணமக்களின் சந்தோஷம் அவர்களது முகத்தில் அப்பட்டமாகத் தெரிவதைக் காண முடிகின்றது.

குஷியான திருமண ஜோடியின் மாஸ் நடன வீடியோவை இங்கே காணலாம்:

வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோவை சமூக வலைதளவாசிகளும் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள். இது சமூக ஊடகத் தளமான இன்ஸ்டாகிராமில்  sumitchauhanwsingh என்ற கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ஒரு பயனர், ‘இந்த மணமகனுக்கும் மணமகளுக்கும் 36 -க்கு 36 குணங்களும் அனைத்து பொருத்தங்களும் பொருந்தியுள்ளன’ என எழுதியுள்ளார். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | வாடா நீயா நானா பாத்திரலாம்.. பாம்புடன் மல்லுக்கட்டும் முயல்: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News