வாடா நீயா நானா பாத்திரலாம்.. பாம்புடன் மல்லுக்கட்டும் முயல்: வீடியோ வைரல்

Viral Video: முயல் வேகமாகச் செல்லும் விஷப்பாம்புடன் எப்படிச் சண்டையிட்டு வீழ்த்துகிறது என்பதை இந்த வைரல் வீடியோவில் பார்க்கலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 14, 2023, 04:44 PM IST
  • இந்த வீடியோ 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர்
  • முயலின் தைரியத்தைக் கண்டு பயந்து ஓடிய பாம்பு.
  • முயல் பாம்பு சண்டை வைரல் வீடியோ.
வாடா நீயா நானா பாத்திரலாம்.. பாம்புடன் மல்லுக்கட்டும் முயல்: வீடியோ வைரல் title=

முயல் பாம்பு சண்டை வைரல் வீடியோ: பாம்பு கீரிப்பிள்ளை சண்டையை நீங்கள் பலமுறை பார்த்திருப்பீர்கள். சமீபத்தில், குரங்கு மற்றும் பாம்பு சண்டை வீடியோ கூட இணையத்தில் மிகவும் வைரலானது. ஆனால் ஒரு முயல் பாம்புடன் சண்டையிடுவதை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? ஆம், முயல் தான்..அதன் வேகக் கதைகளை நீங்கள் குழந்தை பருவத்திலிருந்தே கேள்விப்பட்டு இருந்திருப்பீர்கள். அந்தவகையில் தற்போது முயல் மற்றும் பாம்பு சண்டையிடும் பயங்கர வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வேகமாக ஊர்ந்து செல்லும் விஷப்பாம்பை முயல் எப்படி தனது வீரத்தை காட்டி சண்டையிட்டு தோற்கடிக்கிறது என்பதை இதில் பார்க்கலாம். சமூகவாசிகள் சிலர் அருகிலேயே முயல் குட்டிகள் இருக்கும் என்று கூறுகின்றனர், மேலும் அதைக் காக்க மட்டுமே அந்த முயல் சண்டையிடுகிறது என்றும் கூறியுள்ளனர். சரி இந்த முழு விஷயத்திலும் உங்கள் கருத்து என்ன என்பதை கீழே தெரிந்துக்கொள்வோம்.

இந்த வீடியோ 40 லட்சம் பேர் பார்த்துள்ளனர்

இந்த வைரல் வீடியோ ஜூன் 9 ஆம் தேதி அன்று இனஸ்டாகிராம் பக்கத்தில் @gisellegk8 ஆல் வெளியிடப்பட்டது. இந்த இன்ஸ்டாகிராம் வீடியோவை 40 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர், 1 லட்சத்து 13 ஆயிரம் லைக்குகளையும் பெற்றுள்ளது. இது தவிர ஆயிரம் பேர் தங்களின் கருத்து தெரிவித்துள்ளனர். சில பயனர்கள் அருகில் முயல் குட்டிகள் இருந்திருக்கும் என்று கூறுகின்றனர், மேலும் அதை காப்பாற்றவே அந்த முயல் பாம்புடன் மோதியிருக்கும் என்று கூறியுள்ளனர். சிலரோ முயல் அதிசயத்தை செய்தது என்று எழுதினர். வைரலான வீடியோவில், பாம்பும் முயலும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்வதைக் காணலாம். திடீரென்று பாம்பு முயலைத் தாக்குகிறது. ஆனால் முயலின் விரைவு அற்புதம் என்றே கூற வேண்டும். பாம்பின் ஒவ்வொரு தாக்குதலிலிருந்தும் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது அந்த முயல். இறுதியாக முயலை தாக்க முடியாமல் சோர்வடைந்த பாம்பு, முயலின் முன் தன்னை பலவீனமாக கருதி, எங்கிருந்து அமைதியாக ஓடிவிடுகிறது.

மேலும் படிக்க | அடேங்கப்பா..இது உலக மகா நடிப்பு டா சாமி! பாம்பின் வீடியோ வைரல்

முயலின் தைரியத்தைக் கண்டு பயந்து ஓடிய பாம்பின் வீடியோவை இங்கே காணுங்கள்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Giselle Koo (@gisellegk8)

சமூக ஊடக உலகில் வனவிலங்குகள் தொடர்பான வீடியோக்களுக்கு எப்போதுமே வரவேற்பு அதிகம். விலங்குகளின் வேட்டைகள், சண்டைகள், குறும்புகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான வீடியோக்கள் மிகவும் விரும்பி பார்க்கப்படுகின்றன. அந்த நிலையில் பாம்பு என்ற பெயரைக் கேட்டாலே மனதில் ஒரு வித பீதி உணர்வு தோன்றும். ஆனால், முயல் ஒன்று பாம்ப்பைக் கண்டு அஞ்சாமல் சண்டையிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாம்பும் முயலும் பயங்கரமாக மோதிக் கொள்ளும் வீடியோ வெளியாவது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | உயிர் தப்பிக்க ஓடும் நபர்... துரத்தும் சினம் கொண்ட யானை: பகீர் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News