பாம்புக்கும் நாய்க்கும் செம சண்டை, ஜெயிச்சது யாரு? அங்தான் ஒரு ட்விஸ்ட்: வைரல் வீடியோ

Dog Snake Fight Video: இப்படி ஒரு சண்டையை பார்த்திருக்க மாட்டீர்கள். இணையத்தை கலக்கும் இந்த பாம்பும் நாயும் சண்டையிட காரணம் என்ன? சண்டையில் வென்றது யார்?

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 8, 2022, 06:40 PM IST
  • வீட்டுக்குள் நுழைந்த பாம்பு.
  • பாம்புடன் சண்டை போட்ட நாய்.
  • வென்றது யார்?
பாம்புக்கும் நாய்க்கும் செம சண்டை,  ஜெயிச்சது யாரு? அங்தான் ஒரு ட்விஸ்ட்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடகங்கள் நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாக மாறிவிட்டன. இதில் பகிரப்படும் செய்திகளும், வீடியோக்களும் நமக்கு புத்துணர்ச்சியை அளிப்பதோடு, தினசரி இறுக்கத்திலிருந்து நாம் சிறிது தளர்ச்சி கொள்ளவும் உதவுகின்றன. அதுவும், இணையத்தில் பகிரப்படும் விலங்குகளின் வீடியோக்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. பொதுவாக நாம் காண முடியாத, காண்பதற்கு மிக அரிதான பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் அப்படி ஒரு வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது ஒரு நாய் மற்றும் பாம்பின் வீடியோ ஆகும். பார்க்கப்போனால், பாம்புகளுக்கும் நாய்களுக்கும் ஒன்றுக்கொன்று எந்த தொடர்பும் இல்லை. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை. அவற்றின் இயல்பைப் பற்றி பேசினால், நாய்கள் மனிதர்களால் அதிகம் வளர்க்கப்படும் விலங்குகளில் ஒன்றாக உள்ளன. இவை மிகவும் விசுவாசமான விலங்குகளாக பார்க்கப்படுகின்றன. 

மறுபுறம், பாம்புகள் ஆபத்தானவை. அனைவரையும் அச்சப்படுத்தும் ஆற்றல் அவற்றுக்கு உள்ளது. பாம்பை கண்டால் அஞ்சாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இப்படி இருக்கையில் பாம்பும் நாயும் நேருக்கு நேர் வந்தால் என்ன நடக்கும்?

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் வீடியோவில் இதற்கான பதிலும் கிடைக்கிறது. இந்த வீடியோவில் நாய்க்கும் பாம்புக்கும் இடையே நடக்கும் படுபயங்கர சண்டையை பார்க்க முடிகிறது. இந்த வீடியோ நெஞ்சை பதபதைக்க வைக்கிறது. ஒரு பாம்பு ஒரு வீட்டிற்குள் நுழைந்து விட்டது. அந்த வீட்டில் வளர்க்கப்படும் ஒரு நாய் அதை விரட்ட அதனுடன் சண்டை போடுவதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. 

மேலும் படிக்க | ஹெலிகாப்டர் பானிபூரி சாப்பிட்டு இருக்கிங்களா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பாம்புக்கே பல்பு காட்டிய நாய்

நாய் பாம்பைப் பார்த்து கடுமையாக குரைத்து, அதை பயமுறுத்த முயல்கிறது. ஆனால் பாம்பும் பயமின்றி அங்கேயே ஊர்ந்து சென்று நாயை அச்சுறுத்துகிறது. நாய் அதை தாக்குகிறது. பாம்பும் இடைவிடாமல் அதனுடன் சண்டை போடுகிறது. இரண்டுக்கும் இடையில் கடுமையான சண்டை ஏற்படுகின்றது. இறுதியில் நாய் பாம்பின் மீது வெற்றிகொள்கிறது. 

வைரலான வீடியோ

நாய் தனது கூர்மையான பற்களால் பாம்பை கீறி காயப்படுத்துவதையும், அதன் பிறகு பாம்பு தரையில் விழுவதையும் வீடியோவில் காண முடிகின்றது. இந்த வீடியோ சமூக ஊடக தளமான ட்விட்டரில் Vicious Videos என்ற கணக்கில் பகிரப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 6ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கானோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க | மணமக்களின் வேற லெவல் குத்தாட்டம், வாய் பிளந்த விருந்தினர்கள்: வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News