Viral Video: முதல் முதலாக தண்ணீரை கண்டு குதூகலிக்கும் குட்டி யானை!

Cute Video of Baby Elephant: குட்டி யானைகள் செய்பவை அனைத்துமே ரசிக்கத்தகுந்தவை தான். அவை நடப்பது, ஓடுவது சாப்பிடுவது என எது செய்தாலும் ரசிக்க தகுந்தவையாக இருக்கும். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 31, 2023, 02:51 PM IST
  • தண்ணீரை முதல் முதலாக கண்டவுடன் சந்தோஷத்தில் குட்டி யானைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
  • குட்டியானை குதூகலத்தை எடுத்துக் காட்டும் இந்த வீடியோ.
  • தாய் யானை நடந்து செல்லும் போது கூடவே செல்லும் குட்டியானை.
Viral Video: முதல் முதலாக தண்ணீரை கண்டு குதூகலிக்கும் குட்டி யானை!  title=

இணையம் ஒரு தனி உலகம் அதில் தகவல்களுக்கு என்றும் பஞ்சமில்லை. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு தகவல் களஞ்சியமாக விளங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு தளமாகவும் உள்ளது என்றால் மிகையில்லை. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களையும், மன அழுத்தங்களையும் சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு வரப்பிரசாதமாக இருக்கின்றன. இவற்றில் குட்டி யானைகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத, பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குட்டி யானைகள் செய்பவை அனைத்துமே ரசிக்கத்தகுந்தவை தான். அவை நடப்பது, ஓடுவது சாப்பிடுவது என எது செய்தாலும் ரசிக்க தகுந்தவையாக இருக்கும். பிறந்த முதல் சில நாட்களில், அவர்களின் கண்பார்வை, ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலை ஆகியவை குறைவாகவே இருக்கும். அவை பெரும்பாலும் தாயை சார்ந்தே இருக்கின்றன. அதனால் தான் தாய் யானைகள் ஆரம்ப கட்டங்களில் குட்டிகளை மிகவும் பாதுகாக்கின்றன. தாய் யானைகள் தங்கள் குட்டிகள் எல்லா விதமான சவால்களையும் சமாளிக்கவும் கற்றுக்கொடுக்கின்றன. தற்போது இணையத்தில் வைரலாகும் வீடியோவில், தாய் யானையுடன் வந்த குட்டி யானைகளை முதல் முதலாக தண்ணீரைக் கண்டு குதூகலிக்கும் வீடியோ ஒன்று மிகவும் வைரலாகியுள்ளது. 

மேலும் படிக்க | Viral Video: கதையல்ல நிஜம்... பாட்டிலில் கல்லை போட்டு தாகத்தை தீர்த்துக் கொண்ட காகம்!

வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்:

தண்ணீரை முதல் முதலாக கண்டவுடன் சந்தோஷத்தில் குட்டி யானைக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குட்டியானை குதூகலத்தை எடுத்துக் காட்டும் இந்த வீடியோ இப்போது இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது. தாய் யானை நடந்து செல்லும்போது கூடவே செல்லும் குட்டியானை, பொதுவாகவே தண்ணீரை கண்டால் அலாதி பிரியம் கொள்ளும். உடனே தண்ணீருக்குள் இறங்கி குளித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும். இந்த அழகான தருணத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள Latest Sightings - Cute & Cuddly என்ற பேஸ்புக் கணக்கில், இது போன்ற வேடிக்கையான மற்றும் அழகான விலங்கு வீடியோக்களை தவறாமல் பதிவிடுவதைக் காணலாம். குட்டி யானையின் சேட்டைகளும் ரசிப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். தாய் யானையுடன் சேர்ந்து செல்லும்போது அவை செய்யும் சேட்டைகளை காண்பதற்கு கண்கொள்ளா காட்சிகள் வேண்டும்.

மேலும் படிக்க | Viral Video: தும்பிக்கையில சிக்க மாட்டேங்குதே... கூடைப்பந்துடன் போராடும் குட்டியானை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News