Viral Video: தும்பிக்கையில சிக்க மாட்டேங்குதே... கூடைப்பந்துடன் போராடும் குட்டியானை!

Funny Video of Baby Elephant: குட்டி யானைகளின் வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானைகள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 26, 2023, 01:04 PM IST
  • குட்டி யானைகளின் வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை.
  • குட்டி யானைகள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன.
  • யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்கள்.
Viral Video: தும்பிக்கையில சிக்க மாட்டேங்குதே... கூடைப்பந்துடன் போராடும் குட்டியானை! title=

சமூக வலைதளங்களில் தினம் தினம் பல வித்தியாசமான, ஆச்சர்யம் அளிக்கும் வகையிலான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. தற்போது சமூக வலைதளங்களில், அன்ராட வேலை பளு மற்றும் மன அழுத்தத்திற்கு மத்தியில் மனதை லேசாக்க, இதுபோன்ற வீடியோக்களை பார்ப்பதிலேயே மக்கள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். சமூக வலைதளங்களில் தினமும் பல வீடியோக்களில் விலங்குகள், பறவைகள் மற்றும் மீன்களின் வீடியோக்கள் மிகவும் பிரபலமானவை.  அதிலும் குட்டியானைகள் தொடர்பான வீடியோக்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. சமூக வலைதளங்களில் வெளியாகும் இந்த வீடியோக்களில் சில நம்மை சிரிக்க வைத்தாலும், சில நம்மை சிந்திக்கவும், அழவும், வியக்கவும் வைக்கின்றன. தற்போது வைரலாக பரவி வரும் இந்த வீடியோ மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

குட்டி யானைகளின் வேடிக்கையான குறும்புகள் மனதை கவர்பவை. குட்டி யானைகள் குறும்பு செய்யும் வீடியோக்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகின்றன. யானைகள் மிகவும் புத்திசாலித்தனமான உயிரினங்கள் எனலாம். யானைகளும் நம்மைப் போலவே எண்ணங்கள், ஆழமான உணர்ச்சிகளை அனுபவிக்கும் திறன் கொண்டவை. அதிலும், குட்டி யானைகளைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவம் தான். ஒரு இடத்தில் நிற்காமல் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருக்கும் குட்டி யானைகள் என்ன செய்தாலும் அவை ரசிக்கத் தகுந்ததாகவே இருக்கும். அந்த வகையில், தற்போது குட்டியானை ஒன்று கூடைப்பந்து விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது. 

மேலும் படிக்க | Viral Video: பேச மட்டும் இல்லை வித்தையும் தெரியும்... பேப்பரில் இறக்கை செய்து அசத்தும் கிளி!

வைரலாகும் குட்டியானை வீடியோவை கீழே காணலாம்:

யானைகள் உலகின் மிகப்பெரிய நில விலங்குகள். முழுமையாக வளர்ந்த யானை ஒரு நாளைக்கு 400 கிலோ வரை உணவையும் சராசரியாக 150 லிட்டர் தண்ணீரையும் உட்கொள்கிறது. யானைகளுக்கு சிறப்பு புத்திசாலித்தனம் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர். குட்டி யானை கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த போது வழுக்கி விழுகிறது  ஆனாலும் விடாமல் விளையாடுகிறது.  இந்த வைரலான வீடியோ Buitengebiden என்ற டிவிட்டர் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை ஏற்கனவே 2.9 மில்லியன் இணைய பயனர்கள் பார்த்துள்ளனர். 18 வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவை 56.2 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News