Viral video: முதன்முதலாக பாதாம் சாப்பிட்ட அணிலின் க்யூட் ரியாக்‌ஷன்

வைரலாகி வரும்  வீடியோவில்,  பாதம் சுவையில் மயங்கிய அழகான அணிலின் க்யூட்டான ரியாக்‌ஷனைக் காணலாம். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 11, 2022, 05:42 PM IST
  • பாதாம் பருப்பை சுவைத்த பின் அணிலின் ‘அடடா’ எக்ஸ்பிரஷன்.
  • பயனர்களை பெரிதும் கவர்ந்த க்யூட் வீடியோ.
  • 10.1 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்த வீடியோ.
Viral video: முதன்முதலாக பாதாம் சாப்பிட்ட அணிலின் க்யூட் ரியாக்‌ஷன் title=

சமூக வலைதளத்தில் தினமும் பல்வேறு வகையான வீடியோக்கள் பகிரப்பட்டாலும், சில வீடியோக்கள் மட்டுமே பயனர்களின் பேராதரவைப் பெறுகின்றன. அதிலும் விலங்குகள் அல்லது பறவைகளின் குறும்புகள் தொடர்பான வீடியோக்களுக்கு என்றுமே ரசிகர்கள் ஏராளம். அந்த வகையில் பெரும் ரசிக பட்டாளத்தை ஈர்த்த ஒரு வைரல் வீடியோவை இங்கே காணலாம். 

அணில், பார்ப்பதற்கு மிகவும் அமைதியான அழகான தோற்றம் கொண்டது. அதன்  குறும்புகளை ரசிக்காதவர் யாராவது இருக்க முடியுமா என்ன...  வைரலாகி வரும்  வீடியோவில், அழகான  அணிலுக்கு ஒருவர் பாதாம் வழங்குவதைக் காணலாம். அணில் முதல் முறையாக பாதாம் பருப்பை சுவைக்கிறது.  அதன் சுவை கொடுத்த வியப்பினால் சிறிது நேரம் வாயடைத்து போய் விட்டது. 

மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை

"அணில் முதல் முறையாக பாதாமை ருசிக்கிறது" என்ற தலைப்பில் @buitengebieden ட்விட்டரில் பதிவிட்ட இந்த வீடியோ ஏராளமான பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீடியோ, பதினேழு வினாடிகள் மட்டுமே நீளமாக இருந்தாலும், முதல் முறையாக பாதாமை முயற்சித்த பிறகு, அதன் மயக்கு சுவையினால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சியை வெளிக்காட்டும் விதம் சமூக ஊடக பயனர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. கடந்த 3 நாட்களில் கிளிப் 10.1 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.

வைரல் வீடியோவை இங்கே காணலாம்: 

 

 

இந்த அழகான அணிலின் க்யூட் ரியாக்‌ஷனை ரசித்து மெய்மறந்த பார்வையாளர்கள், பலவிதமான கருத்துகளைப் பதிவேற்றி வருகின்றனர்.  இந்த வீடியோ உங்கள் கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் என உறுதியாக கூறலாம்.

மேலும் படிக்க | Viral Video: இது குதிரையின் பியானோ கச்சேரி... கேட்டுத் தான் பாருங்களேன்

மேலும் படிக்க | சேவல் மீது ஜாலியாக ரைட் செய்யும் பூனைக்குட்டி! வைரலாகும் வீடியோ!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News