Viral Video: நாகப்பாம்பை கடித்து குதறும் கீரி; மனம் பதற வைக்கும் வீடியோ

கீரி குட்டையான கால்களைக் கொண்ட ஒரு சிறிய விலங்கு என்றாலும், பாம்பை கண்டால் மூர்க்கமாக தாக்கும் இயல்பைக் கொண்டது. பார்த்தாலே அச்சத்தை கொடுக்கும் ராஜா நாகப்பாம்பு உலகின் மிக விஷ பாம்புகளில் ஒன்றாகும். ஆனால், கீரி அதனை மிக மூர்க்கமாக தாக்கும் திறன் கொண்டது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 29, 2022, 07:26 PM IST
  • வைரல் வீடியோவில், நாகப்பாம்பு ஒன்றை கீரி ஆக்கிரோஷத்துடன் கடித்து குதறுவதைக் காணலாம்.
  • கீரியை நேருக்கு மோதும் நாகமும் விடாமல் உக்கிரத்துடன் சண்டையிடுகிறது.
Viral Video: நாகப்பாம்பை கடித்து குதறும் கீரி; மனம் பதற வைக்கும் வீடியோ title=

கீரி குட்டையான கால்களைக் கொண்ட ஒரு சிறிய விலங்கு என்றாலும், பாம்பை கண்டால் மூர்க்கமாக தாக்கும் இயல்பைக் கொண்டது. பார்த்தாலே அச்சத்தை கொடுக்கும் ராஜா நாகப்பாம்பு உலகின் மிக விஷ பாம்புகளில் ஒன்றாகும். ஆனால், கீரி அதனை மிக மூர்க்கமாக தாக்கும் திறன் கொண்டது.

கொடிய விஷப் பாம்பின் கடி கீரியை ஒன்றும் செய்வதில்லை. கீரியின் உடலில் இயற்கையாகவே விஷ எதிர்ப்பு சக்தி உள்ளதால், பாம்பு கொத்தினால், கீரி சாகாது என்று கூறுவார்கள். சில சமயங்களில் கீரியும் சாவதுண்டு. பொதுவாக பாம்பு கீரி சண்டையில் பாம்பை கீரி கொன்றுவிடும். பாம்பு படம் எடுத்து கீரியை தாக்கி களைத்துப் போன பின், சோர்வாக உள்ள பாம்பின் தலையை கடித்து கீரி கொன்றுவிடும். 

நாகப்பாம்புடன் போடும் சண்டையில் 75 முதல் 80 சதவீதம் வரை, கீரி தான் எப்போதும் வெற்றி பெறும். எனினும் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் காணொளியில், மிக உக்கிரமாக சண்டையிடும் கீரி பாம்பு இரண்டுமே, சண்டையின் முடிவில் இறந்து போய் விடுகிறது.

வைரல் வீடியோவில், நாகப்பாம்பு ஒன்றை கீரி ஆக்கிரோஷத்துடன் கடித்து குதறுவதைக் காணலாம். கீரியை நேருக்கு மோதும் நாகமும் விடாமல் உக்கிரத்துடன் சண்டையிடுகிறது.

மேலும் படிக்க | மானை இறுக்கும் மலைப்பாம்பு; சிக்கித் தவிக்கும் மான்... ஆனால்... நடந்தது என்ன..!! 

வைரலான வீடியோவை இங்கே காணலாம்:

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by @africanwildlife1

 

கீரியும் மற்றும் ராஜா நாகப்பாம்பு பரஸ்பரம் கொடூரமாக தாக்கிக் கொள்வதை பார்க்கவே திலூட்டும் படி உள்ளது

மேலும் படிக்க | Viral Video: ‘முட்டை இட’ கடற்கரைக்கு படையெடுக்கும் லட்சக்கணக்கான கடல் ஆமைகள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News