உச்சம் பெறும் சூரியன் சுக்கிரன்... இந்த ராசிகளுக்கு ஏப்ரலில் கோடீஸ்வரயோகம்!

Lucky zodiacs of 2024 April: ஏப்ரல் மாதத்தில் கிரக நிலைகளில், பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. இந்நிலையில், எந்தெந்த ராசிகள் ராஜயோகத்தை அனுபவித்து, கோடீஸ்வரனாக ஆகப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 19, 2024, 05:11 PM IST
  • ஏப்ரல் மாதத்தில் உச்சம் பெரும் சூரியன் மற்றும் சுக்கிரன்
  • சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும்.
  • நீச்சபங்க ராஜயோகம் காரணமாக, பண வரவு சிறப்பாக இருக்கும்.
உச்சம் பெறும் சூரியன் சுக்கிரன்... இந்த ராசிகளுக்கு ஏப்ரலில் கோடீஸ்வரயோகம்! title=

2024 ஏப்ரல் மாத ராசி பலன்: பண்டிகை காலம் நிறைந்தது ஏப்ரல் மாதம். ஸ்ரீ ராம நவமி, சித்திரை வருடப்பிறப்பு, சித்ரா பௌர்ணமி என பண்டிகைகளுக்கு குறைவில்லை ஏப்ரல் மாதத்தில் கிரக நிலைகளில், பல முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. மேஷ ராசியில் சூரியனும், மீன ராசியில் சுக்கிரனும் உச்சம் அடைவார்கள். மீனத்தில் புதன் நீச்சமடைகிறார். அதோடு கும்ப ராசியில் சனி பகவானும் செவ்வாயும் இணைந்திருப்பார்கள். இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் எந்தெந்த ராசிகள் ( Lucky zodiacs of 2024 April)  ராஜயோகத்தை அனுபவித்து, கோடீஸ்வரனாக ஆகப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஏப்ரல் மாதத்தில் உச்சம் பெரும் சூரியன் மற்றும் சுக்கிரனால், சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அபரிமிதமாக இருக்கும் என்றும், இவர்கள் கோடிகளில் பணத்தை குவிப்பார்கள் என்றும் ஜோதிட வல்லுநர்கள் (Astro Prediction) கணித்துள்ளனர்.

ரிஷப ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள்

ரிஷப ராசியினருக்கு ஏப்ரல் மாதம், நீச்சபங்க ராஜயோகம் காரணமாக, பண வரவு சிறப்பாக இருக்கும். சுப செலவுகள் அதிகரிக்கும். வீடு மனை, வாகனம் போன்றவை வாங்குவதற்கான யோகம் பலன் கொடுக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். இதனால் வருமானம் அதிகரிக்கும். கடினமான உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கூட கிடைக்கும்.

மேலும் படிக்க | படுத்தி எடுப்பார் ராகு - கேது! குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த ராசிகளுக்கு சிக்கல்!

மிதுன ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள்

மிதுன ராசியினருக்கு ஏப்ரல் மாதத்தில், வேலையில் தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். சுக்கிரனின் அருளால் வருமானத்திற்கு குறைவு இருக்காது. சூரியனின் அருளால் உற்சாகம் அபரிமிதமாக இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பணம் கிடைக்கும். வேலைக்காக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் ஆதாயமும் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். குழந்தைகள் மூலம் மனதிற்கு நிம்மதி தரும் செய்திகள் கிடைக்கும். பதவி உயர்வு சம்பள உயர்வு எதிர்பார்த்து அளவில் இருக்கும்.

கடக ராசிக்கான ஏப்ரல் மாத பலன்கள்

கடக ராசியினருக்கு ஏப்ரல் மாதம் வசதி வாய்ப்புகளை அள்ளித் தரும் மாதமாக இருக்கும். சொத்து வாகனம் வாங்கும் வாய்ப்பு அதிகரிக்கும். சுக்கிரனின் அருளால் நிதி பிரச்சனை தீர்ந்து, பணவரவு சிறப்பாக இருக்கும். வேலைவாய்ப்பு தேடி வரும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பினால், திட்டமிட்டபடி பணியை சிறப்பாக செய்து முடித்து பாராட்டினை பெறுவார்கள். வாழ்க்கையில் ஏற்றமும் மாற்றமும் உண்டாகும். முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: ஏப்ரல் மாதம் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், வேற லெவலில் வருமானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News