படுத்தி எடுப்பார் ராகு - கேது! குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த ராசிகளுக்கு சிக்கல்!

குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: மீனத்தில் ராகு வீற்றிருக்கும் நிலையில், சில ராசிக்காரர்களுக்கு, குரோதி வருட தமிழ் புத்தாண்டில் ராகு நிதி இழப்பை ஏற்படுத்துவார் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 19, 2024, 01:46 PM IST
  • நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு மற்றும் கேது.
  • தற்போது கன்னி ராசியில் கேதுவும், மீன ராசியில் ராகுவும் சஞ்சரிக்கின்றனர்.
  • குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்
படுத்தி எடுப்பார் ராகு - கேது! குரோதி தமிழ் புத்தாண்டில் இந்த ராசிகளுக்கு சிக்கல்! title=

குரோதி வருட தமிழ் புத்தாண்டு ராசிபலன்: மீனத்தில் ராகு வீற்றிருக்கும் நிலையில், சில ராசிக்காரர்களுக்கு, குரோதி வருட தமிழ் புத்தாண்டில் (Tamil New Year Krodhi) ராகு நிதி இழப்பை ஏற்படுத்துவார் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஜோதிடத்தில் நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு மற்றும் கேது, பிற கிரகங்களைப் போலவே, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தனது ராசியை மாற்றிக் கொள்வார்கள். ராகவும் கேதுவும் கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி தனது ராசியை மாற்றிக் கொண்டுள்ளனர். தற்போது கன்னி ராசியில் கேதுவும், மீன ராசியில் ராகுவும் சஞ்சரிக்கின்றனர். இந்த இரண்டு கிரகங்களும் இதே நிலையில் 2025 ஆம் ஆண்டு வரை நீடிப்பார்கள். இந்நிலையில் தமிழ் புத்தாண்டு குரோதி வருடத்தில், சிக்கலை சந்திக்கப் போகும் சிலர் ராசிகளை (Zodiac Signs) அறிந்து கொள்ளலாம்.

தமிழ் புத்தாண்டு குரோதி மங்களகரமான ஆண்டாக இருப்பினும் எப்போதுமே வக்ர நிலையில் சஞ்சரிக்கும் ராகு கேது ஆகிய கிரகங்களின் நிலைகள், சில ராசிக்காரர்களுக்கு சிக்கல்களை உண்டாக்கும் என கணித்துள்ளனர் (Astro Prediction) ஜோதிட வல்லுநர்கள். 

சிம்ம ராசி: குரோதி வருட பலன்கள்

மீனத்தில் சஞ்சரிக்கும் ராகுவினால், சிம்ம ராசியினர் (Leo Zodiac Sign) குரோதி தமிழ் புத்தாண்டில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். உத்தியோகத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லை என்றால் சிக்கல் அதிகமா ஆகும். உழைப்பதற்கு ஏற்ப பலன் கிடைக்காது. அதோடு வேளையிலும் தடைகள் ஏற்படலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தேவையற்ற செலவுகளால் மன சஞ்சலம் ஏற்படும். உடல் நலம் பாதிக்கப்படும். எடுத்த காரியத்தில் வெற்றி அடையாமல் மன அழுத்தம் அதிகரிக்கலாம்.

மேலும் படிக்க | இன்னும் 43 நாட்களில் குரு பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்கள் பாடாய் படுவார்கள்

கும்ப ராசி: குருதி வருட பலன்கள்

கும்ப ராசியினருக்கு (Aquarius Zodiac Sign) , ராகு கேது நிலை சாதகமாக இல்லை. இதனால் பிரச்சனைகள் அதிகரிக்கும். நிதி ரீதியாக இழப்பு அதிகமாக இருக்கும். தேவையற்ற செலவும் அதிகரிக்கும். இதனால் பொருளாதார நிலை பாதிக்கப்படலாம். பயணத்தின் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். மன அமைதி இருக்காது. குடும்ப வாதம் ஏற்பட்டு மன கசப்பு உண்டாகலாம். மன அழுத்தத்தை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த முடிவில் எடுத்தாலும் நன்றாக யோசித்து முடிவு எடுக்கவும்.

மீன ராசி: குருதி ஆண்டு பலன்கள்

ராகு கேதுவின் நிலை மீன ராசிக்கு (Pisces Zodiac Sign) சாதகமாக இருக்காது. எனவே தமிழ் புத்தாண்டு ஆன குருதி வருடத்தில், உடல் நல பாதிப்பு அதிகமாக இருக்கும். நோய் பாதிப்பினால் செயல் திறனும் பாதிக்கப்படும். இல்லாத வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. இல்லை என்றால் மன உளைச்சல் அதிகரிக்கும். வாகனம் சொத்து வாங்குவதில் நஷ்டம் ஏற்படலாம். முதலீடு செய்யும் முன் தீவிரமாக ஆலோசனை செய்யவும். இல்லையென்றால் வருமானத்தில் இழப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | மார்ச் 20க்குப் பிறகு அதிர்ஷ்டத்தை அள்ளப்போவது இந்த 3 ராசிக்காரர்கள் தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News