சுக்கிரன் பெயர்ச்சி: ஏப்ரல் மாதம் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், வேற லெவலில் வருமானம்

Sukran Peyarchi: சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் ஏப்ரல் மாதம் முழுவதும் அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி மிக சிறப்பாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 19, 2024, 12:43 PM IST
  • மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது.
  • வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும்.
  • புதிய ஆர்டர்களை பெறுவீர்கள்.
சுக்கிரன் பெயர்ச்சி: ஏப்ரல் மாதம் இந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம், வேற லெவலில் வருமானம் title=

Sukran Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உள்ளது. இவற்றுக்கென ஒரு தனித்துவம் உள்ளது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. ராசிகளை தவிர கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றன. 

சுக்கிரன் அறிவாற்றல், திருமண வாழ்க்கை, பேச்சாற்றல், செழுமை, உலக இன்பம், அழகு, பண்பு, பணம், ஈர்ப்பு, ஆடம்பரம், அன்பு, பெருமை, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக உள்ளார். தற்போது சுக்கிரன் சனியின் ராசியான கும்பத்தில் இருக்கிறார். மார்ச் 31 அன்று, சுக்கிரன் தான் உச்சம் பெற்றுள்ள ராசியான மீனத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். 

தனது உச்ச ராசியில் சுக்கிரன் பெயர்ச்சியாவது மிகவும் மங்களகரமான ஒரு நிகழ்வாக பார்க்கப்படுகின்றது. சுமார் ஒரு ஆண்டுக்கு பிறகு சுக்கிரன் மீன ராசியில் பிரவேசிக்கவுள்ளார். இது சுப யோகத்தை உருவாக்குகின்றது. இதன் தாக்கம் ஏப்ரல் மாதம் முழுவதும் அனைத்து ராசிகள் மீதும் இருக்கும். எனினும் சில ராசிகளுக்கு இந்த பெயர்ச்சி மிக சிறப்பாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு அதிக நற்பலன்கள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். செல்வச் செழிப்பு மற்றும் திருமண மகிழ்ச்சியையும் பெறலாம். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 
 
சுக்கிரன் பெயர்ச்சியால் அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள ராசிகள்

மிதுனம் (Gemini): 

மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. இந்த பெயர்ச்சியின் காரணமாக பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய ஆர்டர்களை பெறுவீர்கள். இதன் மூலம் லாபம் அதிகரிக்கும். வேலை தேடிக்கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு தற்போது வேலை கிடைக்கும். ஃபேஷன், ஆடை அணிகலன்கள், நகைகள் ஆகியற்றுடன் தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி லாபம் அளிக்கக்கூடியதாக இருக்கும். 

மேலும் படிக்க | இன்னும் 43 நாட்களில் குரு பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்கள் பாடாய் படுவார்கள்

கடகம் (Cancer):

சுக்கிரனின் ராசி மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சுக்கிரனின் பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்கும். பொருளாதார நிலையில் பெரிய முன்னேற்றம் காணலாம். திடீர் பண வரவால் ஆதாயம் கூடும். வேலை மற்றும் வியாபாரத்தில் கடக ராசிக்காரர்களின் நிலை வலுப்பெறும். வேலை நிமித்தமாக பயணங்களை மேற்கொள்வீர்கள், இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்களது ஆசைகள் இந்த காலத்தில் நிறைவேறும். 

துலாம் (Libra):

சுக்கிரன் பெயர்ச்சி துலாம் ராசிக்கு அதிகப்படியான நற்பலன்களை அள்ளித்தரும். துலா ராசியின் அதிபதி சுக்கிரன். ஆகையால் இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் சிறப்பாக அமையும். உங்கள் ஆளுமையில் வித்தியாசம் காணப்படும். மக்கள் உங்கள் பக்கம் ஈர்க்கப்படுவார்கள். தைரியமும், வீரமும் கூடும். அனைத்து பணிகளையும் முழு முனைப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்களுக்கு வேலையில் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். ஆராய்ச்சித் துறையில் தொடர்புடைய துலாம் ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதிர்ஷ்டத்தின் உதவியால் அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நடந்து முடியும். வேலை தேடிக்கொண்டு இருக்கும் துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு இப்போது திருமணம் நடக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | மார்ச் 20க்குப் பிறகு அதிர்ஷ்டத்தை அள்ளப்போவது இந்த 3 ராசிக்காரர்கள் தான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News