குரு வக்ர நிவர்த்தி: நவம்பர் 24 முதல் இந்த ராசிகளுக்கு சுப யோகம், வெற்றிகள் குவியும்

Jupiter Transit: குருவின் வக்ர நிவர்த்தி பல ராசிகளில் சுப பலன்களை ஏற்படுத்தி அவர்களை மகிழ்விக்கவுள்ளது. குருவின் நிலை மாற்றத்தால் அதிகப்படியான நல்ல பலன்களை அள்ளவுள்ள அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 11, 2022, 05:53 PM IST
  • தொழில், வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள்.
  • புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
  • சமூக கௌரவம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிட்டால், இந்த நேரம் அதற்கு சாதகமானது. பண வரவு சாதகமாக இருக்கும்.
குரு வக்ர நிவர்த்தி: நவம்பர் 24 முதல் இந்த ராசிகளுக்கு சுப யோகம், வெற்றிகள் குவியும்  title=

குரு வக்ர நிவர்த்தி 2022 பலன்கள்: வியாழன் தற்போது தனது ராசியான மீனத்தில் வக்ர நிலையில், அதாவது இயல்பு நிலைக்கு எதிரான நிலையில் இயங்கிக்கொண்டு இருக்கிறார். நவம்பர் 24ம் தேதி அதிகாலை 4:27 மணிக்கு இதே ராசியில் வியாழன் வக்ர நிவர்த்தியாகி இயல்பு நிலைக்கு மாறுவார். அனைத்து கிரகங்களின் ராசி மற்றும் நிலை மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக அனைத்து கிரகங்களின் வக்ர நிவர்த்தியும் ராசிகளுக்கு சுப பலன்களையே அளிக்கும். 

குருவின் வக்ர நிவர்த்தி பல ராசிகளில் சுப பலன்களை ஏற்படுத்தி அவர்களை மகிழ்விக்கவுள்ளது. குருவின் நிலை மாற்றத்தால் அதிகப்படியான நல்ல பலன்களை அள்ளவுள்ள அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

விருச்சிகம்

தேவகுரு வியாழன் விருச்சிக ராசியில் இருந்து ஐந்தாம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். இந்த ராசிக்காரர்கள் குருவின் இந்த மாற்றத்தால் இனிமையான பலன்களைப் பெறுவார்கள். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். தொழிலுக்கு இது நல்ல நேரமாக இருக்கும். இந்த நேரத்தில் தொழில் தொடங்கினால் வெற்றி கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான யோகங்கள் உள்ளன. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். இது பொருளாதார நிலையை வலுப்படுத்தும்.

மேலும் படிக்க | சனியின் அருளால் ஜனவரி முதல் இந்த ராசிகளின் தலைவிதி மாறும்: கேட்டது கிடைக்கும் 

ரிஷபம்

வியாழன் ரிஷப ராசியிலிருந்து 11வது வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். வியாழனின் செல்வாக்கால் இந்த ராசிக்காரர்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் புதிய பரிமாணங்கள் திறக்கப்பட்டு முன்னேற்றம் ஏற்படும். குடும்ப உறவுகள் மேம்படும், உடன்பிறந்தவர்களின் ஆதரவும் கிடைக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபார ரீதியாகவும் இந்த நேரம் மிகவும் நல்ல நேரமாக இருக்கும்.

கடகம்

வியாழன் கடக ராசியில் இருந்து ஒன்பதாம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைவார். இந்த ராசிக்காரர்கள் மகிழ்ச்சிகரமான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் தொழிலில் புதிய உயரங்களைத் தொடுவீர்கள். பலவித முன்னேற்றங்கள் ஏற்படும். வெளிநாட்டில் வேலை செய்யும் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். முதலீடு செய்வதற்கு இது நல்ல நேரம். திருமண வாழ்க்கையில் உறவுகள் இனிமையாக மாறும்.

கும்பம்

வியாழன் கும்ப ராசியிலிருந்து இரண்டாம் வீட்டில் மாறப் போகிறார். கடந்த பல ஆண்டுகளாக நீங்கள் செய்து வந்த கடின உழைப்பால் கிடைக்காத பலன்கள் நவம்பர் 24 முதல் கிடைக்கத் தொடங்கும். வேலையில் வெற்றி கிடைக்கும். உங்களது பல விருப்பங்கள் நிறைவேறும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். கூட்டு சேர்ந்து செய்யும் வேலையில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கன்னி

வியாழன் கன்னி ராசியில் இருந்து ஏழாம் வீட்டில் வக்ர நிவர்த்தியாக உள்ளார். தொழில், வியாபாரம் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள கன்னி ராசிக்காரர்கள் நல்ல பலன்களை பெறுவார்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். சமூக கௌரவம் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிட்டால், இந்த நேரம் அதற்கு சாதகமானது. பண வரவு சாதகமாக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த செய்திகளை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | டிசம்பரில் இரு முறை பெயர்ச்சி ஆகும் சுக்கிரனால் ‘4’ ராசிகளுக்கு சுக்கிர திசை! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News