ஏப்ரல் மாத சூரிய கிரகணம் ஏற்படுத்தும் கவலையால் மனம் வருத்தமடையப் போகும் ராசிகள்!

2024 April 8 Surya grahan Effects :  5 ராசிக்காரர்களின் மகிழ்ச்சியை ஏப்ரல் மாத சூரிய 'கிரகணம்' பாதிக்கலாம், இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏற்படுத்தும் பாதிப்பால் யாருக்கு நஷ்டம்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : Mar 28, 2024, 06:10 PM IST
  • ஆண்டின் முதல் சூரிய கிரகணம்
  • ஏப்ரல் மாதம் 8ம் தேதி சூரிய கிரகணம்
  • சூரிய கிரகணத்தால் பாதிக்கப்படும் ராசிகள்
ஏப்ரல் மாத சூரிய கிரகணம் ஏற்படுத்தும் கவலையால் மனம் வருத்தமடையப் போகும் ராசிகள்! title=

இந்து மத சாஸ்திரங்களின் அடிப்படையில் மட்டுமல்ல, ஜோதிடத்தின் பார்வையிலும் கிரகணங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் மார்ச் 25ஆம் தேதி ஏற்பட்டது. அதையடுத்து, ஆங்கிலப் புத்தாண்டின் முதல் சூரிய கிரகணம், சோபகிருது தமிழ் ஆண்டின் இறுதி கிரகணமாக ஏப்ரல் 8ம் தேதியன்று நிகழவிருக்கிறது. இந்த கிரகணத்தால் அனைத்து ராசிகளும் பாதிக்கப்படும் என்றாலும், ஐந்து ராசிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு வசந்த நவராத்திரிக்கு முன்னதாக நிகழவுள்ள சூரிய கிரகணம், 54 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே நிலையில் ஏற்படவிருக்கிறது. சூரிய கிரகணம் முடிந்த அடுத்த நாள் நவராத்திரி தொடங்குகிறது. நவராத்திரிக்கு முன் நிகழும் இந்த சூரிய கிரகணம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். துரதிருஷ்டம் ஏற்படலாம்.  

சூரிய கிரகணத்தின் விளைவு

மேஷம்

2024ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்வில் பல தாழ்வுகளை ஏற்படுத்தப் போகிறது. மேஷ ராசிக்காரர்கள் தொழில் சம்பந்தமான சவால்களை சந்திக்க வேண்டி வரும். தொழிலில் தளர்ச்சி, வேலையில் சிக்கல் என ஏற்படும் பிரச்சனைகளால் நேரடியாக பொருளாதாரம் பாதிக்கப்படும்.

மேலும் படிக்க | ராம நவராத்திரிக்காக பக்தியுடன் காத்துக் கொண்டிருக்கிறீர்களா? சைத்ர நவராத்திரி சிறப்புகள்!
 
விருச்சிகம்

ஏப்ரல் 8 ஆம் தேதி ஏற்படவிருக்கும் சூரிய கிரகணத்தின் தாக்கம், விருச்சிக ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேரடியாக எதிரொலிக்கும். குடும்ப வாழ்க்கையில் சுணக்கம் ஏற்படும் என்றால், நண்பர்களிடம் இருந்து எதிர்பார்த்த ஒத்துழைப்புக் கிடைக்காது. நிலுவையில் உள்ள பணம் திரும்பக் கிடைக்காது. வாக்குவாதங்களைத் தவிர்க்கவும்.

கன்னி 

சூரிய கிரகணத்தின் தாக்கத்தால் கன்னி ராசியினரின் மன நிம்மதி கெடும். வியாபாரத்தில் பின்னடைவு ஏற்படும். குடும்பத்தின் மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நீங்கள் தான் என்பதால், உங்கள் மனதில் ஏற்படும் சஞ்சலங்கள் குடும்பத்தின் நிம்மதியையும் பாதிக்கும். முடிந்த அளவு பொறுமையாக இருப்பது நல்லது.

மேலும் படிக்க | சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகள்: எப்போதும் வெற்றி, செழிப்பு, புகழுடன் இருக்கும் அதிர்ஷ்டசாலிகள்

கும்பம்

ஏப்ரல் எட்டாம் தேதியன்று நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தின் தாக்கம் கும்ப ராசிக்காரர்களுக்கு அசுப விளைவுகளை ஏற்படுத்தும். தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் சண்டை நேரிடலாம் என்றால், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதால் சுமூகமான நிலை மாறிவிடும்
 
தனுசு

இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சூரிய கிரகணத்தின் ஏற்படும் தாக்கத்தால் நிம்மதி குலையும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படலாம். குடும்ப உறுப்பினர்களுடனும் உறவினர்களுடனும் வாக்குவாதம் ஏற்படலாம். இதனால் உங்கள் மீதான நம்பிக்கை மாறும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | 54 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் முழு சூரிய கிரகணம்! இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News