குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, அனைத்திலும் வெற்றி

Guru Peyarchi Palangal: ஜோதிடத்தில் கிரக பெயர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மே மாதம் நடக்கவிருக்கும் குரு பெயர்ச்சி மிகப் பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Guru Peyarchi Palangal: கல்வி, திருமணம், புத்திசாலித்தனம், குழந்தைகள், பணம், செல்வச் செழிப்பு ஆகியவற்றுக்கு காரணி கிரகமாக உள்ள குரு பகவான் மே ஒன்றாம் தேதி பெயர்ச்சியாக உள்ளார். குரு பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். சிலருக்கு நல்ல பலன்களும் சிலருக்கு பிரச்சினைகளும் உருவாகும். குரு பெயர்ச்சியால் 12 ராசிகளிலும் (Zodiac Signs) ஏற்படக்கூடிய மாற்றங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.

1 /13

மேஷம்: மேஷத்தில் இருந்து தான் குரு ரிஷபத்திற்கு பெயர்ச்சியாக உள்ளார். குரு பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு வெற்றிகரமானதாக இருக்கும். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் அதிகப்படியான லாபம் கிடைக்கும்

2 /13

ரிஷபம்: ரிஷபத்தில் தான் குரு பெயர்ச்சியாக உள்ளார். ஆகையால் ரிஷப ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும். பண வரவு அதிகமாகும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்  

3 /13

மிதுனம்: மிதுன ராசிக்காரர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படலாம். உடல் நலனில் அக்கறை தேவை. புதிய முயற்சிகளை தொடங்கும் முன் பலமுறை யோசித்த பின்னர் தொடங்குவது நல்லது.

4 /13

கடகம்: குரு பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக நடக்காமல் இருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். அலுவலகத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும்

5 /13

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி பலவிதமான நல்ல செய்திகளை கொண்டு வர உள்ளது. பொருளாதார நிலை முன்பு விட நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். பண வரவு அதிகமாகும்.

6 /13

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமாக இருக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் இருக்கும்.

7 /13

துலாம்: துலா ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி அற்புதமான நற்பலன்களை கொடுக்கும். பணியிடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் இருக்கும். வாழ்க்கை துணையுடனான புரிதலும் அன்பும் அதிகரிக்கும்.

8 /13

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல கால பிறக்கும். பணியிடத்தில் இருந்து வந்த தடைகள் சரியாகும். மேலதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். வணிகத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்

9 /13

தனுசு:  தனுசு ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சி கலவையான பலன்களை கொண்டு வரும். உடல் உபாதைகள் வரலாம். எனினும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் இவை சரியாகும். நிதி நெருக்கடி இருந்தாலும் சரியான வழியில் திட்டமிட்டால் பணத்தை சேமிக்க முடியும்

10 /13

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். அனைத்து பணிகளிலும் வெற்றி காண்பீர்கள். இத்தனை நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் இப்பொழுது வெற்றிகரமாக நடந்து முடியும். நிதி நிலை நன்றாக இருக்கும்.

11 /13

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகமாகும். பண வரவு அதிகமாகும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கும்ப ராசிக்காரர்களுக்கு லாபம் அதிகமாகும்.

12 /13

மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். பணி இடத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். மிகப்பெரிய முன்னேற்றத்தை எதிர்கொள்வீர்கள். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும்.

13 /13

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.