சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகள்: எப்போதும் வெற்றி, செழிப்பு, புகழுடன் இருக்கும் அதிர்ஷ்டசாலிகள்

Favourite Zodiac Signs of Sun God: அனைத்து ராசிக்காரர்களையும் சூரியன் சமமாக பாவித்து தனது ஆசிகளை வழங்குகிறார். எனினும், ஜோதிட ரீதியாக சில ராசிகள் மீது அவருக்கு அதிகப்படியான அன்பும் அக்கறையும் இருக்கின்றது. 

Last Updated : Mar 28, 2024, 09:47 AM IST
  • மேஷ ராசிக்காரர்கள் சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகள்.
  • இவர்களுக்கு எப்போதும் பிறரை விட ஆற்றலும், சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் அதிகமாக இருக்கும்.
  • இவர்கள் எப்போதும் உற்சாகத்துடன் இருப்பதுடன் பிறரையும் உற்சாகப்படுத்துவார்கள்.
சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகள்: எப்போதும் வெற்றி, செழிப்பு, புகழுடன் இருக்கும் அதிர்ஷ்டசாலிகள் title=

Favourite Zodiac Signs of Sun God: ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. சூரிய கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் அரசனாக பார்க்கப்படுகிறார். அரசன், பாதுகாவலன், தந்தை ஆகியோருக்கு உண்டான குணாதியங்கள் சூரியனுக்கு இருக்கின்றன. நாட்டை ஆளும் தலைவர்கள், குடும்பத் தலைவர்கள், மேல் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், பணிபுரியும் இடத்தில் உள்ள மேலாளர்கள் போன்றவர்களை குறிக்கும் காரணியாக சூரியன் உள்ளார். 

சூரியன் வாழ்க்கையின் முக்கியமான அம்சங்கள் மற்றும் குணாதிசயங்களுக்கு காரணமான கிரகமாகவும் இருக்கிறார். தலைமை, தைரியம், மனவலிமை, ஆளுமை, நிர்வாகத்திறன், கம்பீரமான தோற்றம், சுய கௌரவம், அதிகாரம், அரசியல் நுணுக்கம் ஆகியவற்றின் பிரதிபலிப்பு சூரியன். ஒருவர் மீது சூரியனின் அருள் இருந்தால், அந்த நபர் மிக நேர்த்தியான தலைவராக, பொறுப்பான குடும்பத் தலைவராக, உறுதியான நபராக இருப்பது உறுதி. 

அனைத்து ராசிக்காரர்களையும் சூரியன் சமமாக பாவித்து தனது ஆசிகளை வழங்குகிறார். எனினும், ஜோதிட ரீதியாக சில ராசிகள் மீது அவருக்கு அதிகப்படியான அன்பும் அக்கறையும் இருக்கின்றது. இவர்கள் கிரகங்களின் அரசனான சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகளாக கருதபப்டுகிறார்கள். இந்த ராசிகளுக்கு அவர் வாழ்வில் எப்போதும் மரியாதை, செல்வம், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வெற்றியை அளிக்கிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1. மேஷம் (Aries): 

மேஷ ராசிக்காரர்கள் சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகள். இவர்களுக்கு எப்போதும் பிறரை விட ஆற்றலும், சுறுசுறுப்பும், புத்திசாலித்தனமும் அதிகமாக இருக்கும். இவர்கள் எப்போதும் உற்சாகத்துடன் இருப்பதுடன் பிறரையும் உற்சாகப்படுத்துவார்கள். இவர்களது வாழ்வில் எப்போதும் செல்வமும் செழிப்பும் இருக்கும். இவர்கள் அலுவலகங்களில் உயர் பதவிகளை வகிப்பார்கள். வியாபாரத்தில் நல்ல வெற்றி காண்பார்கள். பிறரை வழி நடத்தி வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் பண்பு இவர்களுக்கு இருக்கும். 

மேலும் படிக்க | இன்றைய ராசிபலன்: இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும்

2. சிம்மம் (Leo)

ஜோதிடத்தின் படி சூரிய பகவானுக்கு பிடித்த ராசிகளில் சிம்மத்திற்கு முதலிடம் உள்ளது. சிம்ம ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் நேர்மையானவர்கள். அவர்களை கண்மூடித்தனமாக நம்பலாம். சிம்ம ராசிக்காரர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அனைத்து வேலைகளையும் மற்றவர்களை விட சிறப்பாகச் செய்வார்கள். இவர்களுக்கு அனைத்து துறைகளிலும் மரியாதை கிடைக்கும். அவர்களுக்கு எப்போதும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் எந்த விதமான பற்றாக்குறையையும் சந்திப்பதில்லை. இவர்கள் எப்போதும் பொருளாதார ரீதியாக வலிமையானவர்களாக இருக்கிறார்கள்.

3. தனுசு (Sagittarius): 

தனுசு ராசியை ஆளும் கிரகம் வியாழன். தனுசு ராசிக்காரர்கள் சூரியன் அருளால் மிகுந்த தைரியத்துடன் இருப்பார்கள். இவர்கள் எந்த நிலையிலும் மனம் தளர மாட்டார்கள். தனுசு ராசிக்காரர்கள் லட்சியவாதிகள். அவர்கள் கடுமையான சூழலில் புத்திசாலித்தனத்துடனும் ஞானத்துடனும் செயல்பட்டு அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். இவர்கள் மனதில் தோன்றுபவற்றை அப்படியே பேசி விடுவார்கள். இந்த ராசியின் மிகப் பெரிய பலவீனம் நாக்கைக் கட்டுப்படுத்தாததுதான். ஆனால், வெளிப்படையாக இருப்பதற்காக இவர்கள் பாராட்டப்படுவதும் உண்டு. 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 54 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் முழு சூரிய கிரகணம்! இந்த 3 ராசிகளின் தலைவிதி மாறும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News