புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. மகிழ்ச்சி, செல்வம் அதிகரிக்கும்

Mercury Transit: புதனின் பெயர்ச்சி எந்தெந்த ராசிகளில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் என இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 21, 2023, 09:47 PM IST
  • மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் உற்சாகமாக இருக்கும்.
  • சிந்திக்கும் திறன் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும்.
  • இளைஞர்களுக்கு படிப்பு தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
புதன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல நேரம் ஆரம்பம்.. மகிழ்ச்சி, செல்வம் அதிகரிக்கும் title=

புதன் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி, அனைத்து கிரகங்களும் தங்கள் ராசிகளை அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. சூரியன் ஜூலை 17 ஆம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். அவர் ஒரு மாதம் இங்கு இருப்பார். புதன் கிரகம் ஜுலை 29 ஆம் தேதி சிம்ம ராசியில் பெயர்ச்சி ஆவார். ஆகஸ்ட் 15, 2023 வரை அவர் அங்கேயே இருப்பார். சிம்ம ராசியில் புதன் சுமார் 18 நாட்கள் தங்குவது ஒரு முக்கியமான நிகழ்வாகும். இது அனைத்து ராசிக்காரர்களையும் பாதிக்கும். 

ஜோதிடத்தின்படி, அறிவு, பேச்சுத்திறமை, பயணம் மற்றும் வணிகம் ஆகிய துறைகளின் காரணியாக புதன் கிரகம் கருதப்படுகிறது. புதனின் மாற்றம் எண்ணங்கள், முடிவுகள் மற்றும் செயல்பாட்டில் மாற்றத்தைத் தூண்டுகிறது. புதனின் பெயர்ச்சி எந்தெந்த ராசிகளில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் என இந்த பதிவில் காணலாம்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த நேரம் உற்சாகமாக இருக்கும். சிந்திக்கும் திறன் மற்றும் புரிந்து கொள்ளும் திறன் அதிகரிக்கும். இளைஞர்களுக்கு படிப்பு தொடர்பான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலையில் சில நிலையற்ற தன்மைகள் ஏற்படக்கூடும். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. தேவையில்லாமல் கடன் வாங்குவதை தவிர்க்கவும்.

மிதுனம்: புதனின் மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். பேச்சுத்திறன் அதிகரிக்கும். புதிய நபர்களை சந்திப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

கடகம்:  இந்த காலகட்டத்தில் கடக ராசிக்காரர்கள் வளர்ச்சியடைவார்கள். அவர்கள் ஒரு புதிய திறனைக் கற்றுக்கொள்ளலாம். ஆழ்ந்த அறிவை செயல்படுத்த வேண்டிய நேரம் இது.

சிம்மம்: புதனின் மாற்றம் அதிக சுபமாக அமையும். தலைமைத்துவ திறன் அதிகரிக்கும். மேலும் உங்கள் தரப்பை தெளிவாக முன்வைப்பீர்கள். சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்குவது நன்மை தரும்.

கன்னி: உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போது கவனமாக இருங்கள், கண்கள் பாதிக்கப்படலாம்.

மேலும் படிக்க | சூரிய சஞ்சாரம்: ஆகஸ்ட் 17 வரை இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்!

துலாம்: இந்த காலத்தில் துலா ராசிக்காரர்களின் நட்பு வலுவடையும். நண்பர்களிடம் புதிய சிந்தனை பிறக்கும். இளைஞர்களின் தேர்வு முடிவுகள் வரவிருந்தால், நல்ல மதிப்பெண்கள் பெற வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். நேரம் சாதகமாக இருக்கும். முதலாளி ஒரு பெண்ணாக இருந்தால், அவரை மதிக்க வேண்டியது உங்கள் தார்மீகப் பொறுப்பாகும்.

தனுசு: தனுசு ராசி மாணவர்களுக்கு புதன் மாற்றத்தால் வெற்றி கிடைக்கும். படிக்கும் திறன் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணையின் முன்னேற்றம் நீடிக்கும்.

மகரம்: மகர ராசிக்காரர்கள், சிம்மத்தில் புதன் தங்கும் போது குடும்பம் மற்றும் வீடு தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்கள் சிந்தனையை விரிவுபடுத்தும் வாய்ப்பு கிடைக்கும். புதிய சிந்தனைகள் உருவாகும். யாரிடமும் மனம் புண்படும்படியான வார்த்தைகளைச் சொல்லாதீர்கள்.

மீனம்: இந்த நேரத்தில் மீன ராசிக்காரர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சுயபரிசோதனை செய்து. புதிய கோணத்தில் சிந்திக்க வேண்டும். தோல் தொடர்பான நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வக்ர நிவர்த்தி அடையும் சனி... தீபாவளி முதல் ‘இந்த’ ராசிகளுக்கு நல்ல காலம் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News