சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு லாபம், பண வரவு.. மொத்தத்தில் அட்டகாசமான ராஜயோகம்

Venus Retrograde, Impact on Zodiac Signs: ஜோதிடத்தில், ஒரு நபரின் வாழ்க்கையில் சுக்கிரன் கிரகம் மிகவும் முக்கியமான கிரகமாக விவரிக்கப்பட்டுள்ளது. சுக்கிரனின் நல்ல செல்வாக்கால், ஒரு நபர் வாழ்க்கையில் பல வித வெற்றிகளைப் பெறுகிறார். 

ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரன் கிரகத்தின் நல்ல பலன்களால், ஒரு நபர் சிறந்த வாழ்க்கையை நடத்துகிறார். அத்தகைய சூழ்நிலையில், மனிதர்களின் முழு வாழ்க்கை சுழற்சியும் நல்ல முறையில் நடக்க, சுக்கிரன் கிரகம் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறது.

1 /8

கிரகங்களின் மாற்றம்: ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் அவ்வப்போது, தங்கள் ராசிகளையும் நட்சத்திரங்ககையும் நிலைகளையும் மாற்றுகின்றன. இதன் தாக்கம் அனைத்து ராசிககளிலும் காணப்படும்.   

2 /8

சுக்கிரன் வக்ர பெயர்ச்சி: வரும் ஜூலை 23 ஆம் தேதி சுக்கிரன் கிரகம் சிம்ம ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப்போகிறார். அவர் ஆகஸ்ட் 7 வரை வக்ர நிலையிலேயே இருப்பார். 

3 /8

ராசிகளில் தாக்கம்: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களுக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும் 4 ராசிக்காரர்களுக்கு குறிப்பாக இது மிகவும் மங்களகரமானதாக இருக்கும். வக்ர நிலை சுக்கிரன்  எந்தெந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களைத் தரப்போகிறார் என்பதை இந்த பதிவில் காணலாம். 

4 /8

ரிஷபம்: சுக்கிரன் கிரகத்தின் வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல விளைவை ஏற்படுத்தப் போகிறது. ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் சிறந்த பணிகளால் வெற்றி பெறுவார்கள். இந்த காலகட்டத்தில், திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும். மேலும் வணிகர்களுக்கும் அதிக லாபம் கிடைக்கும்.

5 /8

கடகம்: சுக்கிரனின் வக்ர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரப் போகிறது. கடக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும், உங்கள் நிதி நிலையும் வலுவாக இருக்கும். இந்த காலத்தில் பயணம் செல்ல நேரிடலாம். இந்த பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். இந்த நேரத்தில் உங்கள் முடிக்கப்படாத பணிகள் அனைத்தும் முடிவடையும்.

6 /8

துலாம்: சுக்கிரனின் வக்ர இயக்கம் துலாம் ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காலத்தில் வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்கள், பணவரவு பெறுவார்கள். துலாம் ராசிக்காரர்களுக்கு சமூக கௌரவம் உயரும். இதனுடன், நீங்கள் ஆன்மீக நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம்.

7 /8

தனுசு: சுக்கிரனின் வக்ர இயக்கத்தால், உங்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக பணப்பிரச்சினையால் தவிப்பவர்களுக்கு நிச்சயம் பலன் கிடைக்கும். தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை விஷயத்தில் முன்னேற்றம் ஏற்படும். கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறையில் உள்ள தனுசு ராசிக்காரர்கள் பயனடையப் போகிறார்கள்.

8 /8

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.