குரு வக்ர பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு செல்வச் செழிப்பும், வளமும் பெருகும்

Guru Vakri 2023: கடந்த 22 ஏப்ரல் 2023 முதல் மேஷ ராசியில் குரு பெயர்ச்சியடைந்து மற்றும் செப்டம்பர் 4, 2023 அன்று குரு வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.

குரு வக்ரி பெயர்ச்சி 2023: குரு தற்போது மேஷ ராசியில் வக்ர பெயர்ச்சி அடையப் போகிறார். குரு கிரகம் செழிப்பு, பெருமை, செல்வம், ஆன்மீகம் மற்றும் வழிபாடு போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், குருவின் இயக்கத்தில் சிறு மாற்றம் கூட 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையை பாதிக்கூடும்.

1 /7

வக்ர கதி நிலை அடையும் போது ஒரு கிரகம் தான் கொடுக்க வேண்டிய பலனுக்கு அப்படியே எதிராக கொடுக்க நேரிடும்.

2 /7

குரு வக்ர பெயர்ச்சி 2023: 2023ம் ஆண்டு செப்டம்பர் 4 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு குரு மேஷ ராசியிலேயே வக்ர பெயர்ச்சி அடைகிறார். பின்னர் டிசம்பர் 31ம் தேதி மீண்டும் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

3 /7

மேஷம்: இந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். அபரிமிதமான பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வீட்டில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.

4 /7

மிதுனம்: இந்த ராசிக்காரர்களுக்கு அரசு வேலை கிடைக்கும். மறுபுறம், வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறலாம். வருமானம் அதிகரிக்கும். நிலம் மற்றும் சொத்து சம்பந்தமான விஷயங்களில் நிலவும் தகராறு முடிவுக்கு வரும். இந்த ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். தொழில், வியாபார ரீதியாக வரும் காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.  

5 /7

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும், அதன் காரணமாக பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படும். கடின உழைப்பின் பலனைப் பெறுவீர்கள். தடைபட்ட உங்களின் வேலைகள் நிறைவேறும்.  

6 /7

மீனம்: குரு வக்ர பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு, மகிழ்ச்சியும், வளமும் பெருகும். புதிய வாய்ப்புகள் அமையும். பணியிடத்தில் உங்கள் அந்தஸ்தும் மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் அமையும், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும்.  

7 /7

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.