ராகு சுக்கிரன் சேர்க்கை: இந்த ராசிகளுக்கு பண நஷ்டம், வாழ்க்கையில் பிரச்சனை

Rahu Shukra Yuti: ராகு சுக்கிரன் சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளை சேர்ந்தவர்களின் வாழ்விலும் தென்படும். எனினும், 3 ராசிக்காரர்கள் மீது இந்த சேர்க்கையின் பாதிப்பு அதிகமாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 1, 2023, 11:03 AM IST
  • ஜோதிட சாஸ்திரப்படி மேஷ ராசியில்தான் ராகு மற்றும் சுக்கிரன் இணைகிறார்கள்.
  • மேஷ ராசிக்காரர்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும்.
  • திருமண வாழ்விலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும்.
ராகு சுக்கிரன் சேர்க்கை: இந்த ராசிகளுக்கு பண நஷ்டம், வாழ்க்கையில் பிரச்சனை title=

சுக்கிரன் ராகு சேர்க்கை: ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தனது ராசி மற்றும் இயக்கத்தை மாற்றுகிறது. கிரகங்களின் இந்த மாற்றங்கள் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இம்முறை வண்ணங்களின் திருவிழாவான ஹோலிக்கு 3 நாட்களுக்குப் பிறகு, மார்ச் 12 அன்று, வாழ்க்கையில் பல வித இன்பங்களுக்கான காரணியாக இருக்கும் சுக்கிரன் மேஷ ராசியில் பிரவேசிக்கப் போகிறார். நிழல் கிரகமான ராகு ஏற்கனவே அந்த ராசியில் உள்ளார்.

அப்படிப்பட்ட நிலையில் ராகு, சுக்கிரன் சேர்க்கை அமையப் போகிறது. இந்த சேர்க்கையின் தாக்கம் அனைத்து ராசிகளை சேர்ந்தவர்களின் வாழ்விலும் தென்படும். எனினும், 3 ராசிக்காரர்கள் மீது இந்த சேர்க்கையின் பாதிப்பு அதிகமாக இருக்கும். இவர்கள் இந்த நேரத்தில் மிக கவனமாக இருக்க வேண்டும். அந்த ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

கன்னி ராசி

கன்னி ராசியினருக்கு சுக்கிரன் மற்றும் ராகுவின் சேர்க்கை தீங்கு விளைவிக்கும். கன்னி ராசிக்கு எட்டாம் வீட்டில் இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கை நடக்கப் போகிறது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உடல்நலம் குறையலாம். இந்த நேரத்தில் முதியவர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது, எனவே வாகனம் ஓட்டும் போது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் மனைவிக்கு முன்னுரிமை கொடுங்கள். எந்த விஷயத்திலும் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.

மேலும் படிக்க | காதலுக்கு ஜே சொல்ல வருகிறார் மேஷத்தில் சுக்கிரன்! வாழ்க்கையை இனிப்பாக்கும் சுக்கிரப் பெயர்ச்சி

மேஷம்

ஜோதிட சாஸ்திரப்படி மேஷ ராசியில்தான் ராகு மற்றும் சுக்கிரன் இணைகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், மேஷ ராசிக்காரர்கள் குறிப்பாக கவனமாக இருக்க வேண்டும். உங்கள் ராசிக்கு லக்னத்தில் இந்த சேர்க்கை நடக்கப் போகிறது. ஆகையால், மேஷ ராசிக்காரர்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில், நீங்கள் ஒரு இரகசிய எதிரியால் தொந்தரவு செய்யப்படலாம். உறவுகளில் ஏமாற்றம் அடைய வாய்ப்பு உள்ளது. திருமண வாழ்விலும் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கும் இந்தச் சேர்க்கை சிறிது சிரமத்தை ஏற்படுத்தும். உங்கள் ராசியின் பண ஸ்தானத்தில் இந்த சேர்க்கை ஏற்படும். ஆகையால், இந்த காலத்தில் பணம் வருவதில் தடை ஏற்படும். உங்கள் பணம் சிக்கிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. இந்த காலத்தில் யாருக்கும் கடன் கொடுப்பதையும் தவிர்க்கவும். அப்படி கொடுத்தால் அது திரும்ப கிடைக்கும் வாய்ப்புகள் மிகக் குறைவே. 

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காது. கணவன்-மனைவிக்குள் விரிசல் அதிகரிக்கலாம். குடும்பத்தில் மனக்கசப்பும், பதட்டமும் அதிகரிக்கும். வேலை செய்பவர்கள் பணியிடத்தில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த ராசியில் ஏழரை நாட்டு சனி நடப்பதால் மன உளைச்சலை சந்திக்க நேரிடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | தினசரி ராசிப்பலன் - இந்த ராசிக்காரர்களுக்கு எச்சரிக்கை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News